தெர்மாகோல் எல்லாம் ஜுஜுபி, செல்லூர் ராஜு பண்ண இந்த 10 விஷயங்கள் வேற லெவல்!

Posted By:
Subscribe to Boldsky

செல்லூர் ராஜு என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் ஒரு கர்ப்பிணி தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தெரியும். அவ்வளவு புகழ் அடைந்துள்ளார்.

என்.டி.டி.வி முதல் பிபிசி வரை என தேசிய, சர்வதேச ஊடகங்கள் வரை ஒரு அமைச்சர் ஒரே திட்டத்தில் பிரபலம் ஆகமுடியும் என்றால் அது செல்லூர் ராஜு அவர்கள் தான்.

கூட்டுறவு துறை அமைச்சர் என்பதை காட்டிலும், இப்போது தெர்மாகோல் என்றால் இவர் தான் நினைவிற்கு வருவார். இனி, செல்லூர் ராஜு பற்றி பலரும் அறியாத சில அமேஸிங் உண்மைகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏழ்மை!

ஏழ்மை!

செல்லூர் ராஜு மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகே அமைந்திருக்கும் அம்மாப்பட்டியை சேர்ந்தவர். வீட்டின் வறுமையின் காரணமாக தாயுடன் தனது கிராமத்தை விட்டு பிழைப்பு தேடி மதுரை சென்றுவிட்டார்.

பழக்கடை லோடுமேன்!

பழக்கடை லோடுமேன்!

பின்னர், தாய் சிம்மக்கல் பகுதியில் விற்பனை செய்து வந்தார். அப்போது தான், அந்த நேரத்தில் அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த பழக்கடை பாண்டியன் கடையில் ராஜு லோடுமேன் வேலையில் சேர்ந்தார். பகுதி நேரமாக வேலையும், வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் சேர்ந்த பி.எஸ்.சி.-யும் படித்தார் செல்லூர் ராஜு.

முதல் மனைவி!

முதல் மனைவி!

முதல் மனைவிக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக, பஞ்சாயத்தில் வைத்து பிரிந்தார் என கூறப்படுகிறது. பிறகு கேரளாவை சேர்ந்த ஜெயந்தி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டார் ராஜு.

செல்லூர் ராஜு!

செல்லூர் ராஜு!

இதன் பிறகு தான் மதுரை செல்லூர் பகுதிக்கு குடியேறினார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன். (இவரது மகன் 2012-ல் நடந்த ஒரு வாகன விபத்தில் உயிரிழந்தார்.) இந்த இடைப்பட்ட காலத்தில் தான் ராஜு, செல்லூர் ராஜு ஆனது.

அதிமுக உறுப்பினர்!

அதிமுக உறுப்பினர்!

பழக்கடை பாண்டியன் மூலமாக அதிமுக உறுப்பினர் ஆனார் ராஜு. பிறகு எஸ்.டி.கே ஜக்கையின் ஆதரவு மூலம் மதுரை செல்லூர் 14வது வார்டு இளைஞரணி செயலாளராக நியமனமானார்.

இதன் பிறகு, மச்சக்குமார் என்பவர் செயலாளர் ஆனதும், அவரது ஆதரவால் அதிமுக வார்டு செயலாளாராக மாறினார் ராஜு. அதுவரை லோடுமேன் ராஜுவாக இருந்தவர், செல்லூர் ராஜுவாக மாறினார்.

அரசியல் வெற்றி தோல்வி!

அரசியல் வெற்றி தோல்வி!

 • 1996ல் - மாநகராட்சி தேர்தலில் வார்டு கவுன்சிலர்.
 • 2001ல் - மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் செ.ராமச்சந்திரனிடம் தோல்வி
 • 2007ல் - மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.கே.ராஜேந்திரனிடம் தோல்வி.
 • 2011ல் - மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக அமைச்சரவையில் இடம்பிடித்து கூட்டுறவு துறை அமைச்சரானார்.
 • 2016ல் - சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிப் பெற்று மீண்டும் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
சொத்து விபரங்கள்!

சொத்து விபரங்கள்!

 • செல்லூர் ராஜூ முதலில் வாடகை கட்டிடத்தில் மெடிக்கல் ஷாப் அமைத்தார்.
 • பிறகு அதே கட்டிடத்தை வாங்கி, அதையொட்டியுள்ள காம்ப்ளக்ஸையும் தனதாக்கி கொண்டார்.
 • அதன் அருகே இருந்த நட்சத்திர ஓட்டலில் பார்ட்னராக சேர்ந்தார்.
 • 150 கோடி மத்திப்புடைய மில் ஒன்று இவரது பினாமி பெயரில் உள்ளதாக எதிர்க் கட்சிகள் புகார் அளித்தன.
 • மேலும், பினாமி பெயரில் தோப்பு, பெரிய கட்டிடங்கள், பாலக்காட்டில் 200 ஏக்கர் தோட்டம் என இவர் பினாமி பெயரில் அதிக சொத்துக்கள் வைத்துள்ளதாகவும், எதிர்க் கட்சியினர் புகார்கள் எழுப்பினர்.
கமிஷன் புகார்கள்!

கமிஷன் புகார்கள்!

 • தமிழகம் முழுவதும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் அமைவிடங்கள் சார்ந்து 50 கோடி கமிஷன்!
 • மதுரை வைகை ஆற்றில் செல்லூர், அருள்தாஸ்புரம் பகுதியில் 2 தரைப் பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்ட ஒதுக்கிய 25 கோடியில் கமிஷன் வராததால் திட்டம் முடக்கம். பிறகு 10% கமிஷன் வந்த பிறகு திட்டம் செயல்படுத்த அனுமதி.
 • தமிழக அரசு ரேஷன் கடைகளில் சாக்கு பை கமிஷன்!
 • கூட்டுறவு வங்கி கணினிமயமாக்கம் செயப்பட்டதில் பல கொடிகள் கமிஷன்!
இதுப் போக...

இதுப் போக...

இது போக, கூட்டுறவு வங்கி சார்ந்து பல மோசடிகள் நடந்ததாகவும், பல அரசு திட்டங்கள் செயல்படுத்தாமலே இருப்பதாகவும் தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜு மீது பல புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சென்ற தேர்தலுக்கு முன்னரே கூறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே திட்டத்தில் ஓஹோ புகழ்!

ஒரே திட்டத்தில் ஓஹோ புகழ்!

வைகை அணையை தெர்மாகோல் கொண்டு ஆவி ஆகாமல் தடுக்க இவர் முயற்சித்த திட்டமும், 300 தெர்மாகோல் பத்து லட்சத்திற்கு வாங்கிய சாமர்த்தியமும், எல்லாவற்றுக்கும் மேலாக தெர்மாகோல்கள் பறக்காமல் இருக்க செலோடேப் ஒட்டிய அறிவுத்திறனையும் கண்டு மக்கள் ஆஹோ, ஓஹோ என பாராட்டி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lesser Known Facts About Tamil Nadu Cooperation Minister Sellur Raju!

Lesser Known Facts About Tamil Nadu Cooperation Minister Sellur Raju!
Subscribe Newsletter