கைவிரல் உயரத்தைக் கொண்டு ஒருவர் விளையாட்டில் சாதிப்பாரா என எப்படி கண்டுபிடிப்பது?

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் கைவிரலின் நீளத்திற்கும் நீங்கள் விளையாட்டில் சாதிப்பதற்கும் சம்மந்தம் இருக்கிறது தெரியுமா? குழந்தை பிறக்கும் போது அதன் ஜாதகத்தை கணித்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்வதில் பெற்றோர்கள் முனைப்பு காட்டுவார்கள்.

எல்லாருக்கும் தங்கள் பிள்ளையை ஒரு சாதனையாளராக காட்ட வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். இங்கே உங்கள் பிள்ளை விளையாட்டுத் துறையில் சாதிப்பாரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி :

ஆராய்ச்சி :

சமீபத்தில் நடைப்பெற்ற ஆராய்ச்சி ஒன்றில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் இருக்கும் உயரத்தை வைத்து அவர்களது தசை வலிமையை அறிய முடியுமாம். இதன் மூலம் அவர் விளையாட்டில் எவ்வளவு ஆர்வம் கொண்டவராக இருப்பார் என்பதை கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள்.

விரல் உயரம் :

விரல் உயரம் :

ஆண்களுக்கு மோதிர விரல் ஆட்காட்டி விரலை விட கொஞ்சம் உயரமாகத்தான் இருக்கும். ஆனால் பெண்களுக்கு சமமாக இருக்கும்.

நேரடியாக இல்லாமல் இதற்கு சில சான்றுகளும் இருக்கிறது. விரல்கள் உயரமாக வளர்வதற்கு டெஸ்ட்ஸ்டீரோன் தான் காரணம். கருவாக இருக்கும் போது டெஸ்ட்ரோன் அதிகம் சுரந்தால் மோதிர விரல் நீளமாக இருக்கும்.

விளையாட்டு :

விளையாட்டு :

விளையாட்டு வீரர்களுக்கான இயற்கையான ஊக்கமருந்து இந்த டெஸ்ட்டிரோன். பொதுவாக கைவிரல்களின் உயரம் குறைவாக இருப்பவர்களும் விளையாட்டில் சாதிப்பார்கள் இதற்கு காரணம் அவர்களின் வயது,உடல் தோற்றம், வலு போன்றவை காரணமாக இருக்கும்.

ஆரோக்கியம்:

ஆரோக்கியம்:

விளையாட்டில் ஜெயிக்க வேண்டுமென்றால், விளையாட்டு வீரரின் தசை அதிக வலுவாக இருக்க வேண்டும். நம் உடல் வலு அதிகரிப்பது என்பது சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு சான்றாகும்.

பெண்கள் :

பெண்கள் :

பெண்களுக்கு ஆட்காட்டி விரலையும் மோதிரவிரலின் உயரத்தையும் கணக்கிட்டு ஆராய்ந்து பார்த்ததில், உயரம் குறைவாக இருப்பவர்கள் கூடைப்பந்து போட்டியில் சிறந்து விளங்குவார்களாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse
English summary

Length of the finger says your sports ability

Length of the finger says your sports ability
Story first published: Tuesday, August 22, 2017, 11:15 [IST]
Subscribe Newsletter