For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறையொன்றுமில்லை... மறைமூர்த்தி கண்ணா பாடல் தோன்றிய கதை தெரியுமா!

எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி உலகம் முழுவதும் பிரபலமான பாடல் குறை ஒன்றுமில்லை பாடல் இந்த பாடல் உருவான வரலாறு பற்றித் தெரியுமா?

|

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி என்று சொன்னாலே சட்டென நினைவுக்கு வருகின்ற பாடல் குறையொன்றுமில்லை... மறைமூர்த்தி கண்ணா! என்ற பாடல். எம்.எஸ் சுப்புலட்சுமியின் கணீர் குரலில் கேட்ட கண்ணனின் இந்தப் பாடலை உருவான கதை தெரியுமா?

1925 ஆம் ஆண்டு இந்தியா முழுக்க விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஒத்துழையாமை போராட்டம் நடந்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் தான் குறையொன்றுமில்லை....பாடல் எழுதப்பட்டிருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோவிலுக்குள் செல்லத் தடை :

கோவிலுக்குள் செல்லத் தடை :

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவர்கள் திருப்பதி கோவிலுக்குள் நுழையவே அனுமதி வழங்கப்படாத காலகட்டம். அப்போது இருந்த நீதிமன்றம், இதனை மீறும் பஞ்சமர்களை சிறைக்கு அனுப்பியது.

அந்த மனிதர், கடந்த பத்து வருடங்களாக திருப்பதி கோவிலுக்குள் செல்ல துடிக்கிறான், ஒரு நாள் பக்தி மேலிட கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் கோவிலுக்குள் நுழைய காவலர்கள் அவனை கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார்கள்.

Image Courtesy

ராஜாஜி ஆஜர் :

ராஜாஜி ஆஜர் :

ஆங்கிலேயே அரசின் நீதிமன்றங்களை அன்றைய வக்கீல்கள் முழுமையாக புறக்கணித்து வந்ததனர். தற்போதைய ஆந்திர மாநிலத்தில் இருக்கும் சித்தூரிலிருந்து ஒரு காங்கிரஸ் மேலவை உறுப்பினரும் ராஜாஜியின் நண்பருமான வக்கீல் ஒருவர் கேட்டு கொண்டதற்காக சித்தூர் செல்கிறார்.

அவனுக்காக அப்பீல் செய்த சித்தூர் வக்கீல் குற்ற வழக்குகளில் ஜாம்பவான் ஆகிய ராஜாஜியிடம் இந்த வழக்கை நடத்தி தரும்படி கேட்கிறார்.

Image Courtesy

சித்தூர் நீதிமன்றம் :

சித்தூர் நீதிமன்றம் :

சுமார் ஏழு வருடங்களாக காந்தியின் கட்டளைக்கிணங்க புறக்கணித்த நீதிமன்ற பணியை இந்த வழக்கிற்காக மீண்டும் ஏற்பதா வேண்டாமா?? என்று பெரும் குழப்பத்தில் இருந்தார் ராஜாஜி. இறுதியாக அந்த ஏழைக்காக சித்தூர் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜராவது என்று முடிவெடுக்கிறார்.

ஆனால் அவரது வக்கீல் தொழிலுக்கான உரிமத்தை பார் கவுன்சிலிடம் திரும்ப கொடுத்துவிட்ட ராஜாஜி, எப்படி ஆஜாராக முடியும் என்று கேள்வியெழுப்பினார் சித்தூர் வக்கீல் நண்பர்.

Image Courtesy

குறையொன்றுமில்லை கண்ணா :

குறையொன்றுமில்லை கண்ணா :

குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் வக்கீலாக இல்லாமல் தனிமனிதனாக இரு குற்றவாளிக்கு ஆஜராக வழி உண்டு என்பதை சுட்டிக்காட்டி சித்தூருக்குச் சென்றார் ராஜாஜி.

ஆங்கிலேயே நீதிபதி முன்னனியில், வக்கீல் உடையின்றி சிவில் உடையோடு வழக்கை நடத்தி அந்த மனிதனுக்கு விடுதலையும் வாங்கித் தருகிறார்.

அதோடு மட்டுமல்ல அவனைத் தன்னோடு திருப்பதி கோவிலுக்கும் அழைத்துச் செல்கிறார். அவன் உணர்ச்சிபெருக்கில் கண்ணீர் மல்க கைகூப்பி வணங்கியதை பார்த்து பரவசமடைந்த ராஜாஜி உணர்ச்சி மேலிட எழுதிய பாடல் தான் குறையொன்றுமில்லை....மறை மூர்த்தி கண்ணா.

Image Courtesy

எம்.எஸ்.சுப்புலட்சுமி :

எம்.எஸ்.சுப்புலட்சுமி :

ராஜாஜி இந்தப் பாடலை எழுதினாலும் உலகம் முழுக்க இந்தபாடலை பிரபலப்படுத்தியது எம்.எஸ்.சுப்புலட்சுமி தான். 1979 ஆம் ஆண்டு எஹ்.எம்.வி நிறுவனம் சுப்புலட்சுமி பாடிய ஸ்ரீ வேங்கடேச பஞ்சரத்னமாலா என்ற கேசட்டில் இந்தப் பாடல் இடம்பெற்றது.

Image Courtesy

பாடலின் பொருள் :

பாடலின் பொருள் :

கிருஷ்ண பரமாத்மாவிடம் குந்திதேவி வரம் கேட்ட போது, எனக்கு எப்போதும் துன்பத்தை மட்டுமே தா கண்ணா அப்போது தான் எப்போதும் உன் நினைவு இருக்கும் உன் நினைவோடு இருப்பதை விட துன்பம் பெரிதல்ல என்றாராம். இதைத் தான் குறையொன்றுமில்லை என்ற பாடலும் பிரதிபலிக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Kurai ondrum illai song making story

Kurai ondrum illai song making story
Story first published: Saturday, September 16, 2017, 13:07 [IST]
Desktop Bottom Promotion