ஒரே ஒரு சிறைக்கைதிக்காக அரசாங்கமே நடுங்கிய கதை தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அது இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலம். 1907 ஆம் ஆண்டு பஞ்சாபில் சீக்கிய குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஒருவனைப் பற்றியது.

இன்று புரட்சியின் வடிவமாக பார்க்கப்படும் அந்த சிறுவனின் பெயர் என்ன என்று சில சம்பவங்களைக் கொண்டு உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சம்பவம் 1 :

சம்பவம் 1 :

ஜாலியான வாலாபாக் படுகொலை சம்பவம் நடைப்பெற்ற போது சிறுவனாக இருந்தவன், அவ்விடத்திற்கு சென்று ரத்தம் தோய்ந்த மண்ணை ஒரு குப்பியில் அடைத்து பத்திரப்படுத்திக் கொண்டான்.

வாழ்நாள் முழுமைக்கும் அதனை பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.

Image Courtesy

சம்பவம் 2 :

சம்பவம் 2 :

வீட்டில் அப்பா பயன்படுத்தும் துப்பாக்கி இருந்தது. அதனை எடுத்து வந்த அந்த சிறுவன், தன் வீட்டுத் தோட்டத்தில் குழி தோண்டி புதைக்கிறான், பின்னர் அதனை மூடி தண்ணீர் ஊற்றுகிறான். இவனது செயலைப் பார்த்து அதிர்ந்த தந்தை, என்ன செய்கிறாய் ? என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த சிறுவன், அப்பா நான் துப்பாக்கியை விதைத்திருக்கிறேன். இது வளர்ந்து மரமாகி நிறையத் துப்பாக்கிகள் மரத்தில் காய்க்கும். அதனைக் கொண்டு நான் வெள்ளையர்களை விரட்டுவேன் என்று சொல்லியிருக்கிறேன்.

Image Courtesy

சம்பவம் 3 :

சம்பவம் 3 :

வளரும் பருவத்தில் சுதந்திர தாகத்துடன் இருந்த அந்த சிறுவன், இளைஞனானதும் ஆங்கிலேயே அதிகாரி ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுகிறான், அப்போது சிறையில் இருந்த 2 ஆண்டுகளில் 56 நூல்களை வாசித்து முடித்திருந்தான்.

Image Courtesy

சம்பவம் 4 :

சம்பவம் 4 :

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த இளைஞனிடம் இன்று உன்னை தூக்கிலிடப்போகிறார்கள் என்ற செய்தி தெரிவிக்கவும், அவனது இறுதி ஆசையை கேட்டு தெரிந்து கொள்ளவும் அவனது வக்கீல் உள்ளே வருகிறார்.

இளைஞனை சந்தித்தது விஷயத்தை கூற, அந்த இளைஞனோ ரெவலுயூஷனரி லெனின் என்ற புத்தகத்தை கொண்டு வரச் சொன்னேனே கொண்டு வரவில்லையா என்று கேட்கிறான்.

உடனே இதோ மறக்காமல் கொண்டு வந்திருக்கிறேன் என்று அந்த வக்கீலும் எடுத்து நீட்ட வாங்கிய கணமே படிக்க உட்கார்ந்து விட்டான். புத்தகத்தை முடிக்க நேரமில்லையே என்ற கவலை அவருக்கு.

Image Courtesy

சம்பவம் 5 :

சம்பவம் 5 :

சிறையில் அடைக்கப்பட்ட அந்த இளைஞன் தூக்கிலிடப்போகிறான் என்ற செய்தி தெரிந்ததும் சிறைக்கைதிகள் அனைவரும் கண்ணீர் சிந்தினர். அதோடு, அந்த இளைஞன் சிறையில் பயன்படுத்திய பேனா, சீப்பு, கண்ணாடி போன்ற பொருட்கள் தங்களுக்கு வேண்டும்.

அதனை வருங்கால சந்ததியினரிடம் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார்கள்.

அதற்கு சம்மதம் தெரிவித்து இளைஞன் பயன்படுத்திய பொருட்களை சிறை அதிகாரி ஒருவர் கொண்டு வர, அதனை வாங்குவதற்கு கைதிகள் பலரும் போட்டிப்போட்டனர்.

எல்லாருமே தங்களுக்கு வேண்டும் என்று கேட்டனர். இதனால் சீட்டு குலுக்கிப் போட்டு அந்த இளைஞன் பயன்படுத்திய பொருட்களை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

சம்பவம் 6 :

சம்பவம் 6 :

அந்த இளைஞனோடு சேர்த்து மேலும் இருவராக மூன்று பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. திட்டமிட்ட நேரத்தை விட 12 மணிநேரத்திற்கு முன்னதாகவே தண்டனையை நிறைவேற்றினார்கள்.

மரணம் உறுதி செய்த பின்னர். இவர்களது இறுதிச்சடங்குகள் சிறைக்குள்ளேயே நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டது ஆனால் வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம் புகை வெளியேறியதைப் பார்த்து சிறையையே தாக்கிடுவார்கள் என்ற அச்சத்தால் அந்த திட்டம் கைவிடப்படட்டது.

Image Courtesy

சம்பவம் 7 :

சம்பவம் 7 :

அதனால் வேறு வழியின்றி சிறையின் பின்பக்கச் சுவர் உடைக்கப்பட்ட அவ்வழியாக முன்னால் கூடியிருக்கும் மக்களுக்கு தெரியாமல் ட்ரக் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதில் மூன்று பேரின் உடல்களும் கொண்டு சென்றனர்.

இறுதியாக அவர்களது இறுதி சடங்கு சட்லஜ் நதிக்கரையில் நடத்தப்பட்டது. அதைத் தெரிந்து மக்கள் கூட்டம் படையெடுத்து வர ஆங்கிலேயே அதிகாரிகள் பயந்து கொண்டு பாதி எரிந்த நிலையில் அப்படியே மூவரின் உடல்களையும் போட்டு தப்பிச் சென்றனர்.

ரத்தம் தோய்த்த மண்ணை சேகரித்து புரட்சியை மனதில் விதைத்துக் கொண்ட அந்த சிறுவன் யார் தெரியுமா?

புரட்சியாளர் பகத் சிங். செப்டம்பர் 28, பகத் சிங் பிறந்த தினம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Identify this hero by recognizing some events

Identify this hero by recognizing some events