முட்டையினுள் மஞ்சள் கருவை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற மெல்லிய சவ்வு பற்றித் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

காலை உணவில் புரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களது வீட்டில் காலை உணவின் போது, புரோட்டீன் நிறைந்த முட்டை கண்டிப்பாக இருக்கும்.

Have You Ever Noticed The White String Inside a Raw Egg, Here’s What It Is

Image Courtesy

இந்த முட்டையை சிலர் ஆம்லெட்டாகவும், இன்னும் சிலர் வேக வைத்தும் சாப்பிடுவர். இதுவரை முட்டையின் மஞ்சள் கருவை ஒட்டியவாறு உள்ள வெள்ளை நிற சவ்வை கவனித்ததுண்டா? அது ஏன் என்று தெரியுமா? பலரும் அந்த வெள்ளை நிற சவ்வு நல்லதல்ல என்று நினைப்பார்கள். இவ்வளவு கேள்விகளுக்கான பதிலும் இக்கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டைக் கருத்திரி

முட்டைக் கருத்திரி

இது ஒரு முட்டைக் கருத்திரி. இது ஒருவகையான புரோட்டீனும் கூட. இது தான் முட்டையின் மையப்பகுதியில் மஞ்சள் கருவை வைத்திருக்க உதவுகிறது.

நல்லதா? கெட்டதா?

நல்லதா? கெட்டதா?

மஞ்சள் கருவை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சவ்வு போன்ற மெல்லிய கயிறு உண்மையிலேயே மிகவும் நல்லது. இதை சாப்பிட எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

நல்ல முட்டை

நல்ல முட்டை

முட்டையில் உள்ள அந்த வெள்ளை நிற சவ்வு தான், ஒரு முட்டை நல்லதா, கெட்டதா என்பதையே சொல்லும். ஒருவேளை முட்டையில் அந்த வெள்ளை நிற சவ்வு இல்லாவிட்டால், அது வாங்கி பல நாட்களாகிவிட்டது என்றும், முட்டை கெட்டுப் போயுள்ளது என்றும் அர்த்தம்.

மேலும் சில தகவல்...

மேலும் சில தகவல்...

முழு பச்சை முட்டையை வினிகரில் 2 நாட்கள் ஊற வைத்தால், அதன் ஓடு வினிகரில் கரைந்து, படத்தில் காட்டப்பட்டவாறு தான் இருக்கும் என்பது தெரியுமா?

Image Courtesy

நல்ல முட்டை பரிசோதனை

நல்ல முட்டை பரிசோதனை

முட்டை நற்பதமானதா அல்லது கெட்டுப் போனதா என்பதை ஒரு எளிய பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் முட்டையைப் போட வேண்டும்.

* அப்போது முட்டை நீரில் முழுமையாக மூழ்கினால், அந்த முட்டை மிகவும் நற்பதமானது என்று அர்த்தம்.

* அதுவே முட்டையின் ஒரு முனை அடிப்பகுதியை தொட்டவாறும், மறுமுனை மிதந்தவாறும் இருந்தால், அந்த முட்டை இன்னும் சாப்பிடுவதற்கு ஏற்ற நிலையில் உள்ளது என்று அர்த்தம்.

* ஒருவேளை முட்டை மிதந்தால், அந்த முட்டை கெட்டுப் போயுள்ளது என்று அர்த்தம்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Have You Ever Noticed The White String Inside a Raw Egg, Here’s What It Is

If you have been wondering about the white string inside a raw egg, here’s what it is…
Please Wait while comments are loading...
Subscribe Newsletter