இறுதி ஊர்வலத்தில் நிர்வாண பெண்கள் - சீனாவின் கன்றாவி சடங்கு!

Posted By:
Subscribe to Boldsky

ஆரோக்கியத்தில் இருந்து கலாச்சாரம் வரை அனைத்திலும் என்னென்ன கன்றாவி எல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து வருகிறார்கள் சீன மக்கள்.

பிளாஸ்டிக் அரிசில் துவங்கி, பிளாஸ்டிக் முட்டைகோஸ் வரை உருவாக்கி புரட்சி செய்த சீனர்கள் இறப்பையும் விட்டுவைக்கவில்லை. ஆம்! குடும்பத்தில் ஒருவரின் இறப்பு ஈடிணை செய்ய முடியாத துயரத்தை தரவல்லது.

கண்ணீர் சிந்தும் இடத்திலும் கவர்ச்சியை அள்ளி தெளிக்கும் வகையில் இறுதி ஊர்வலம் / சடங்கின் போது பெண்களை அழைத்து ஆடைகளை அவிழ்த்து நடனம் ஆடவைக்கும் சடங்கு ஒன்றை பல வருடங்களாக சீனாவின் பல பகுதிகளில் செய்து வந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

கூட்டம் சேர்க்க!

இறுதி ஊர்வலத்தில் இறந்த நபரின் ஆன்மாவை மகிழ்ச்சியடைய செய்கிறோம் என இவர்கள் செய்யும் காரியத்திற்கு முக்கிய காரணம், இறுதி ஊர்வலத்திற்கு பெரியளவில் கூட்டம் சேர்க்க மட்டுமே என கூறப்படுகிறது.

இப்படி பெண்களை ஆடைகளை அவிழ்த்து ஆட வைப்பதால் மறு ஜென்மத்தில் அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகிறார்கள்.

கொள்ளையர்கள்!

உண்மையில் இந்த சடங்கு ஆரம்பத்தில் கொள்ளையர்கள் மத்தியில் மட்டும் தான் இருந்தது. இது மெல்ல, மெல்ல பொதுமக்கள் மத்தியிலும் பரவ துவங்கிவிட்டது என கூறுகிறார்கள்.

ஆரம்பத்தில் பாட துவங்கும் பெண்கள், அப்படியே மெல்ல ஆடைகளை அவிழ்த்து, கடைசியில் இறுதி சடங்கு, இறுதி ஊர்வலம் நடக்கும் இடத்தில் நிர்வாணமாக ஆட துவங்கிவிடுகிறார்கள்.

வைரல்!

இறுதி சடங்கின் போது இப்படி பெண்கள் ஆடைகளை அவிழ்த்து ஆடுவதை குழந்தைகள் காணும் காணொளிகள் சீன இணையங்களில் வைரலாக பரவியுள்ளது.

சினிமா வாய்ப்பு!

இறுதி ஊர்வலத்தில் / சடங்கில் இப்படி ஆடைகளை அவிழ்த்து ஆடும் பெண்களுக்கு சினிமா மற்றும் வீடியோ பாடல்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

தைவான்!

இந்த சடங்கு முறை தைவானிலும் மிகவும் பிரபலம் என அறியப்படுகிறது. தைவானில் மூன்றில் ஒரு இறுதி ஊர்வலம் கவர்ச்சி ஊர்வலமாக தான் நடக்கிறது என கூறுகிறார்கள்.

அரசியல்வாதி மரணம்!

லோக்கல் அரசியல்வாதியின் மரணத்தின் போது ஆடைகளை அவிழ்த்து ஆடும் 50 பெண்களை வரவழைத்து இறுதி ஊர்வலத்தை விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

சீன அரசு!

இந்த இறுதி ஊர்வல சடங்கு முறை நாட்டிற்கு உலகளவில் கெட்ட பெயரை வாங்கி தருவதால், இதற்கு தடைவித்தித்து வருகிறது சீன அரசு. ஆயினும், ஆங்காங்க சிலர் இந்த ஆடை அவிழ்த்து ஆடுவதை இறுதி சடங்கில் நடத்தி வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Girls Strips Off Their Dresses in Funeral: China's Bizarre Ritual

Girls Strips Off Their Dresses in Funeral: China's Bizarre Ritual