Latest Updates
-
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்பத் தலைவரிடம் இருக்க வேண்டிய 4 குணங்கள் இதுதான் - உங்ககிட்ட எத்தனை இருக்கு?
ஆக்ஸிஜன் இல்லாமல் வாழ்ந்திடும் அதிசய உயிரினம்!
க்ரூசியன் க்ராப் என்ற மீன் இனத்தால் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியும்
ஒவ்வொரு உயிரினமும் உயிர் வாழ மிக அத்தியாவசியமானது ஆக்ஸிஜன், ஆனால் க்ரூசியன் க்ராப் என்ற மீனினம் ஆக்ஸிஜன் இல்லாமல் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை உயிருடன் இருக்கும் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனங்களை ஓட்டுகிறவர்கள் உடலில் எவ்வளவு ஆல்கஹால் இருக்கலாம் என்று ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அளவை நிர்ணயித்துள்ளன. பல நாடுகள் நிர்ணயித்திருக்கும் இந்த அளவைக் காட்டிலும் உறைபனியில் உயிர்பிழைக்கும் சில தங்க மீன்களின் உடலில் அதிக அளவில் ஆல்கஹால் இருக்கும்.
மனித உடலில் ஆல்கஹால் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த ஆய்வுக்கும் இந்த ஆராய்ச்சி உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

ரகசியம் :
தண்ணீர் பனியாக உறைந்த ஏரிகளில் தங்க மீன்கள் உயிர் பிழைத்திருப்பது எப்படி என்னும் ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதே போல, உயிர் பிழைப்பதற்கான வழியாக, தங்கள் உடலில் உள்ள லேக்டிக் அமிலத்தை அவை எப்படி, ஆல்கஹாலாக மாற்றுகின்றன என்பதையும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy

ஆக்ஸிஜன் இல்லாமல் வாழ முடியும் :
மனிதர்கள் உள்ளிட்ட பெரும்பாலான முதுகெலும்புள்ள விலங்குகள் ஆக்சிஜன் இல்லாவிட்டால் சில நிமிடங்களில் இறந்துவிடும். ஆனால், இந்த மீன்கள் வட ஐரோப்பாவின் பனி உறைந்த ஏரிகளிலும் குளங்களிலும் ஆக்சிஜன் இல்லாமல் சில மாதங்கள் வரை உயிரோடு இருக்கும் ஆற்றல் பெற்றவை.
இந்த ஆற்றலுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
Image Courtesy

மீன்கள் இறக்க காரணம் :
கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தை செல்களின் ஆற்றல் மையமான மைட்டோகான்ட்ரியா நோக்கிச் செலுத்துவதற்கு பெரும்பாலான உயிரினங்களில் ஒரே ஒரு புரோட்டின் தொகுப்பு மட்டுமே உண்டு.
ஆக்சிஜன் இல்லாத நிலையில், உட்கொள்ளப்படும் கார்போஹைட்ரேட்டுகள் லேக்டிக் அமிலங்களாக மாற்றப்படுகின்றன. இவற்றை வெளியேற்ற முடியாத நிலையில் இந்த மீன்கள் ஓரிரு நிமிடங்களில் இறந்துவிடும்.

ஆக்ஸிஜனாக மாறிடும் ஆல்கஹால் :
ஆனால், அதிருஷ்டவசமாக இந்த மீன்கள் மற்றொரு புரோட்டின் தொகுப்பை பெற்றுள்ளன. இந்த இரண்டாம் புரோட்டின் தொகுப்பு, ஆக்சிஜன் இல்லாத நிலையில் செயல்பட்டு லேக்டிக் அமிலத்தை ஆல்கஹாலாக மாற்றுகின்றன. பிறகு இந்த ஆல்கஹால் செதில்கள் வழியாக வெளியேற்றப்படுகின்றன.
குளம் உறைபனி நிலைக்கு வரும்போது இந்த மீன்கள், கிடைக்கும் எல்லா ஆக்சிஜனையும் நுகர்ந்தபின், உயிர்பிழைக்க ஆல்கஹாலை நாடுகின்றன.காற்றில்லாத, உறைபனி நிலை எவ்வளவு நீளமாக நீடிக்கிறதோ அவ்வளவு தூரம் இந்த மீன்களில் உள்ள ஆல்கஹால் அளவு அதிகமாக இருக்கும்.அதனை அளந்து பார்த்தால் 100 மிலி ரத்தத்தில் 50 மிலிகிராம் அளவுக்கும் மிகுதியாக ஆல்கஹால் உயர்ந்துவிடும்.
Image Courtesy

தங்க மீன்கள் :
இந்த மீன்கள் உடலில் செதில் வரை ஆல்கஹால் நிரம்பி இருந்தாலும், இந்த ‘மது' அவற்றைக் கொல்வதில்லை. மாறாக, குளிர்காலம் நீண்டகாலம் நீடித்தால் அவற்றின் கல்லீரலில் சேர்த்துவைத்த உணவு மொத்தமும் தீர்ந்துபோய் அவை இறந்துவிடுகின்றன.எத்தனால் உற்பத்தியின் மூலமாக இத்தகைய கடினமான சுற்றுச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு உயிர்பிழைக்கும் ஒரே மீன் இனமாக இருக்கிறது க்ரூசியன் க்ராப். இந்த க்ரூசியன் க்ராப்பின் மரபியல் இனமான தங்க மீன்கள், மனிதர்கள் வளர்க்கும் மீன் இனங்களிலேயே அழுத்தங்களில் இருந்து எளிதாக மீண்டு வரும் இனமாக இருப்பது ஆச்சரியம் இல்லை.



Click it and Unblock the Notifications