சூப்பர் ஹீரோஸ் எல்லாம் விளையாட வந்துட்டா? என்னென்ன ஸ்போர்ட்ஸ் சூஸ் பண்ணுவாங்க...

Posted By:
Subscribe to Boldsky

சூப்பர் ஹீரோக்கள் இல்லாத திரை உலகம் எப்படி இருந்திருக்கும். மாபெரும் சண்டை காட்சிகள் இல்லாமல், விசித்திரமான உடைகள் இல்லாமல், பேன்ட் மீது ஜட்டி போடாமல், அமைதியான, பெரிய விறுவிறுப்பு இல்லாத திரையுலகமாக இருந்திருக்கும்.

ஹாலிவுட்டில் தனக்கு ஒரு சூப்பர் ஹீரோ வேடம் கிடைத்துவிடாதா? என்ற ஏக்கத்தில் பல ஹீரோக்கள் இருக்கிறார்கள். ஒரு வேடம் கிடைத்துவிட்டால் போதுமே அதை வைத்து பல வருடங்கள் வண்டியை ஓட்டிவிடலாம்.

ஒருவேளை நாம் கண்டு ரசித்த நமது சூப்பர் ஹீரோக்கள் அதே சக்தியுடன் விளையாட வந்தால், என்தேந்தே ஹீரோ, எந்தெந்த விளையாட்டுகளில் தங்கள் பெயரை பதிவு செய்துக் கொள்வார்கள்...? வாங்க பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்பைடர்மேன்!

ஸ்பைடர்மேன்!

ஸ்பைடர்மேன்-க்கு சரியான போட்டி ஃபுட்பால் தான். அதிலும் கோலி போஸ்ட் தான் கட்சிதமானது. ஸ்பைடர் வலைகளை பின்னிப் போட்டுவிட்டு டீக் குடிக்க கூட போயிட்டு வரலாம் பாஸ்...

கேப்டன் அமெரிக்கா...

கேப்டன் அமெரிக்கா...

கைலயே விளையாட்டு சாமான் இருக்குப்பா... டிஸ்க் த்ரோ எனப்படும் வட்டெரிதல் போட்டியில் இவர் பல உலக சாதனைகள் நிகழ்த்த வாய்ப்புகள் உள்ளன.

மிஸ்டர். ஃபென்டாஸ்டிக்!

மிஸ்டர். ஃபென்டாஸ்டிக்!

மிஸ்டர். ஃபென்டாஸ்டிக்கிற்கு சரியானது கூடைப்பந்து விளையாட்டு. எகிறிக் குதித்து தான் பந்தை கூடையில் போட வேண்டும் என்றில்லை. நின்றப்படியே தனது சக்தியின் மூலம் பந்தை எந்த மூலையில் நின்றும் போடலாம்.

ஃபிளேஷ் அன்ட் சோனிக்!

ஃபிளேஷ் அன்ட் சோனிக்!

இவங்க ரெண்டு பேருக்கும் இந்த விளையாட்ட விட்டா வேற எதுவும் கிடைக்காது. உசைன் போல்ட் சாதனைகள் எல்லாம் தவிடுபொடியாக்கிவிடுவார்கள்.

அயன்மேன்!

அயன்மேன்!

மாரத்தான் பல வகைகள் உண்டு. அதில் உடல் திறனை முற்றிலும் பரிசோதிக்கும் பந்தயம் தான் இந்த ஸ்விம் பைக் ரன். அயன்மேனிடம் இருக்கும் அந்த பிரத்தியோக உடை அணிந்து என்னே வேண்டுமானாலும் செய்யலாமே, இதெல்லாம் ஜுஜுபி!

ஹல்க்!

ஹல்க்!

ஹலக் உயரம் தாண்டுதல் மட்டுமல்ல, பளுதூக்கும் போட்டியில் கூட போட்டியிடலாம். ஆனாலும், ஹல்க் படங்களில் அதிகமாக தாண்டி குதித்தி விளையாடி பயிற்சி எடுத்திருப்பதால் உயரம் தாண்டுதல் விளையாடவே முயற்சிக்கலாம்.

பேட்மேன்!

பேட்மேன்!

சண்டையிட மிகவும் பிடித்த சூப்பர்ஹீரோ பேட்மேன், குத்துச்சண்டை தேர்வு செய்யலாம்.

சூப்பர் மேன்!

சூப்பர் மேன்!

சகலகலா வல்லவன் சூப்பர் மேன் எதை வேண்டுமானாலும் விளையாடலாம். இவரிடம் இருந்து ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது.

டி-1000

டி-1000

டெர்மினேட்டர் வில்லன் டி-1000, ஸ்டிக் கேம் எதில் வேண்டுமானாலும் பங்குபெறலாம்.

All Image Courtesy: Artist Flying Mouse

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Famous Characters in Sport by Flying Mouse!

Famous Characters in Sport by Flying Mouse!
Subscribe Newsletter