Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
டிடிவி தினகரன் பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய 8 உண்மைகள்!
மறைந்த ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் பற்றிய சில உண்மைகள்.
தற்போதைய அதிமுக துணை பொது செயலாளர் பதிவி வகிக்கும் டிடிவி தினகரன் யார்? அவர் இதற்கு முன்னர் அரசியலில் என்ன அனுபவம் கொண்டிருந்தார்? அவர் மீது பதியப்பட்ட வழக்குகள் என்னென்ன? நீதிமன்றம் இவருக்கு வழங்கிய தீர்ப்பு என்ன? நீங்கள் டிடிவி தினகரன் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில உன்மைகள்...

உண்மை #1
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா அவர்களின் அக்கா வனிதாமணியின் 3 மகன்களில் ஒருவர் தான் டி.டி.வி. தினகரன்.
ஜெயலலிதாவுடனான நெருக்கத்தின் காரணமாக சசிகலா அவரது அக்கா மகன்களை அரசியலுக்கு கொண்டு வந்தார். தினகரன், பாஸ்கரன் மற்றும் சுதாகரன் ஆகிய இவர்களை பொதுவாக டி.டி.வி சகோதரர்கள் என்றும் அழைக்கின்றனர்.

உண்மை #2
தினகரன், பாஸ்கரன் மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் அ.தி.மு.க-வில் சலுகைகளை பல பெற்று கட்சியின் முக்கிய நபர்களாக மாறினார்.
1988-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மரணமடைந்த பிறகு, தினகரன் அதிமுகவில் மேலோங்க ஆரம்பித்தார். சசிகலா கணவர் நடராஜனுக்கும், தினகரனுக்கும் இருந்த நட்பை அறிந்த ஜெயலலிதா, தினகரனை வட்டாரத்தில் இருந்து விலக்கி வைத்தார்.

உண்மை #3
சசிகலாவின் நட்பு காரணமாக ஜெயலலிதாவின் வட்டாரத்தில் மீண்டும் சேர்ந்தார் தினகரன். இதனால், பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்.

உண்மை #4
2011-ம் ஆண்டு சசிகலா உள்பட அவரின் குடும்ப உறவினர்கள் ஜெயலலிதாவிற்கு எதிராக செயல்பட்டதால், அவர்கள் அனைவரையும் தனது வீட்டில் இருந்து வெளியேற்றினார்.
அதன் பிறகு 2012-ல் மன்னிப்புக் கடிதம் தந்து சசிகலா போயஸ் தோட்டத்துக்குள் மீண்டும் நுழைந்தார். இதன் பிறகும் கூட டி.டி.வி உள்ளிட்ட மற்ற அனைவரையும் தன் வட்டாரத்தில் சேர்த்துக் கொள்ளவும் இல்லை, போயஸ் தோட்டத்துக்குள் அனுமதிக்கவும் இல்லை ஜெயலலிதா.

உண்மை #5
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கு எதிராக அந்நிய செலாவணி நெறிமுறை சட்டத்தின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கில் தீர்ப்பளித்தது. வெளிநாட்டு பணப் பரிவர்த்தனையில் முறைகேடு செய்ததாக அவருக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

உண்மை #6
1991-96-ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது டிடிவி தினகரன் இந்தியாவுக்கு வெளியே இருந்த வங்கிக் கணக்கில் அதிகமாக வைத்திருந்த டெபாசிட் தொகையை இந்தியாவுக்கு மாற்ற முயன்றதற்காக 2000-ம் ஆண்டில் 31 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. பிறகு மேல்முறையீட்டுக்கு பின்னர் 25 கோடி ரூபாயாக அபராதம் குறைக்கப்பட்டது.

உண்மை #7
ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டி. டி. வி. தினகரன் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

உண்மை #8
டிடிவி தினகரன் எமரால்டு கன்ஸ்ட்ரக்ஷன் (Emeralad Construction) என்ற கம்பெனியை 1991-ம் ஆண்டு நடத்தி வந்தார். ஆனால், இந்த கம்பெனி பெயரில் மற்றவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ, ஒருவர் இவர் மீது வழக்கு தொடுத்தார். பின்பு, ஹவாலா வழக்கிலும் சிக்கியுள்ளார் மறைந்த ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன்.



Click it and Unblock the Notifications











