Latest Updates
-
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம்
இந்த தமிழ் பிரபலங்களுக்கு மத்தியில் இருக்கும் உறவு முறை என்ன தெரியுமா? இதப்படிங்க!
திரையுலகில் அப்பா, மகன்; தாய், மகள் என்று மட்டுமில்லாமல் வேறு சில உறவுமுறை கொண்டும் பல பிரபலங்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
சிவாஜி - பிரபு, பிரபு - விக்ரம் பிரபு, சத்யராஜ் - சிபி ராஜ், கார்த்தி - கெளதம் கார்த்தி என பல அப்பா மகன் மற்றும் நடிகைகளின் மகள்கள் உறவு முறையில் திரைத்துறையில் பணியாற்றி வரும் நபர்களை தான் நாம் பார்த்திருப்போம். அறிந்திருப்போம்.
ஆனால், பெற்றோர் - பிள்ளை உறவு இல்லாமல் வேறு சில உறவு முறை கொண்டுள்ள தமிழ் திரை பிரபலங்களும் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்களை பற்றி தான் நாம் இங்கு காணவிருக்கிறோம்...

ஏ.ஆர். ரஹ்மான் - ஜி.வி. பிரகாஷ்!
ஏ. ஆர். ரஹ்மானின் மூத்த அக்கா ரெய்ஹனா மற்றும் ஜி. வெங்கடேஷ் எனும் பின்னணி பாடகரின் மகன் தான் ஜி.வி.பிரகாஷ். இந்த வகையில் பார்த்தல் ஜி.வி பிரகாஷ் ஏ.ஆர். ரஹ்மானுக்கு உடன் பிறந்தாரின் மகன் ஆகிறார்.

ஸ்ரீசாந்த் - பாடகர் மது பாலகிருஷ்ணன்!
மலையாள பாடகர் மது பாலகிருஷ்ணன்-க்கு ஸ்ரீசாந்த் மைத்துனன் / கொழுந்தன் முறை ஆகிறார்.

ரஹ்மான் - ரகுமான்!
சங்கமம் புகழ் நடிகர் ரகுமானுக்கு இசை புயல் ரஹ்மான் மைத்துனன் / கொழுந்தன் ஆவார்.

பிரியாமணி - வித்யா பாலன்!
பிரியாமணி - வித்யா பாலன் உறவும் இரண்டாவது சந்ததி மாமன் மகள் / அத்தை மகள் உறவு முறை கொண்டவர்கள். இருவரின் அப்பாக்களும் மாமா பையன், அத்தை பையன் உறவு முறை.

கமல் - மணிரத்னம்!
கமலின் சகோதரனின் மகளான சுஹாசினியை தான் மணிரத்னம் திருமணம் செய்துள்ளார்.

சோ - ரம்யா கிருஷ்ணன்!
மறைந்த எழுத்தாளர், நடிகர் சோவிற்கு மருமகள் முறை ஆகிறார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

சத்யராஜ் - சத்யன்!
சத்யராஜ்-க்கு மருமகன் முறை உறவுக்காரர் சத்யன்.

பிரகதி - அபினவ் முகந்!
பாடகி பிரகதி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் இவர்கள் இருவரும் அத்தை, மாமா; பெரியப்பா, பெரியம்மா மகன், மகள் உறவுமுறை கொண்டவர்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா - நடிகர் சிவா குமார்!
நடிகர் சிவகுமாருக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மருமகன் உறவு முறை ஆகிறார்.

ஒய். ஜி. மகேந்திரன் - ரஜினிகாந்த்!
சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு ஒய்.ஜி. மகேந்திரன் சகலை உறவு முறை ஆகிறார்.



Click it and Unblock the Notifications