ராஜா ரவி வர்மாவின் ஓவியத்தில் இதையெல்லாம் கவனித்திருக்கிறீர்களா?

Subscribe to Boldsky

ஓவியம் என்றாலே அது மேற்குலகத்தின் ஓர் கலை என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தியர்களின் ஓவியத்திறமையை பறைசாற்றி , இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை எடுத்துக்காட்டிய ராஜா ரவி வர்மா பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.

மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இவர், இந்திய பாரம்பரிய கலைக்கும், சமகால கலைக்குமிடையே ஒரு முக்கிய இணைப்பை வழங்கினார். இதன் மூலமாக, உலகத்தின் கவனத்தை இந்திய ஓவியங்கள் பக்கமாக திசை திருப்பினார்.

பெண்களை தெய்வீகமாக சித்தரித்தார். அவர் சம்பிரதாயப் பற்றுடையவர்கள் மத்தியில் தற்காலத்தவராகவும், தற்காலத்தவர்கள் மத்தியில் ஒரு பகுத்தறிவுவாதியாகவும் கருதப்பட்டார்.

உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்து, நவீன காலத்துக்கு ஏற்றவாறு மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தியவரான ராஜா ரவி வர்மா பற்றியும் அவரது ஓவியங்களைப் பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரச குடும்பம் :

அரச குடும்பம் :

கேரளாவில் திருவனந்தபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலுள்ள கிளிமனூர் அரண்மனையில் அரச குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார் இவர்.வீட்டில் இசை ஓவியம் என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் சிறந்து விளங்கினார்

இவருக்கு ஓவியக்கலையின் மீது எல்லையில்லா ஆர்வம் வருவதற்கு இவரின் மாமாவான ராஜா ராஜவர்மா காரணம்.அவரிடம் ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார் .

Image Courtesy

சிக்கல் :

சிக்கல் :

இந்திய ஓவியங்களில் ஒரு சிக்கல் அதில் உபயோகிக்கப்படும் வண்ணங்கள் .மரம், இலை, பூக்கள், கற்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்ட வண்ணங்கள் ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டன. ஓவியங்கள் காலப்போக்கில் மங்குவது இதனால் நடக்க ஆரம்பித்தது.

வாட்டர் பெய்ண்டிங் முறையை ராமசாமி நாயுடு கற்றுத்தந்தார் .தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடமும் அறிந்து கொண்டார்.

Image Courtesy

 கற்றுத்தர மறுப்பு :

கற்றுத்தர மறுப்பு :

ஆயில் பெயிண்டிங் தெரிந்த ஒரே நபரான மதுரையை சேர்ந்த ஓர் ஓவியர் அதை சொல்லித்தர மறுத்துவிட்டார் .அவரின் சீடர் ஆறுமுகம் பிள்ளை இரவோடு இரவாக இவருக்கு அதன் நுணுக்கங்களை மட்டும் சொல்லிவிட்டு போனார்

தியடோர் ஜென்சன் எனும் ஒரு ஆங்கிலேய ஓவியரிடம் "ஆயில் பைன்டிங்" எனப்படும் எண்ணெய் கலந்த வண்ணக்கலவை கொண்டு ஓவியம் வரையும் கலையைக் கற்றார்.

Image Courtesy

 நுணுக்கமான மாற்றங்கள் :

நுணுக்கமான மாற்றங்கள் :

எண்ணற்ற புராண கதாப்பத்திரங்களை ஓவியங்களாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். இன்றைக்கு நம் வீட்டு காலண்டரில் இருக்கக்கூடிய சாமிப்படங்கள் எல்லாம் இவரது ஓவியத்தின் தாக்கம் என்றே சொல்லலாம்.

இந்தியாவின் செறிவான வண்ணங்கள் அழகியல் ஆகியவற்றோடு எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஐரோப்பிய முறையை கலந்து கொண்டார் .இயல்பான இயற்கை சூழலில் இந்திய தெய்வங்களை அவர் வரைந்தது பலரைக்கவர்ந்தது .அவரின் ஓவியங்களில் தெய்வங்களை கோயில்களில் இருக்கும் சிலையைப்போல வரைவதை அவர் தவிர்த்தார் .சேலை அணிந்த அழகிய தென்னிந்திய பெண்களை மாதிரியாக கொண்டு தெய்வங்களை வரைந்தார்.

Image Courtesy

தனி தபால் நிலையம் :

தனி தபால் நிலையம் :

ஓவியம் என்பது ஒருவரோடு போய்விடக்கூடாது என்பதற்காக ஒலியோகிராபி பிரஸ் ஒன்றை மும்பையில் ஆரம்பித்தார் அவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருந்தார் என்றால் அவரின் ஓவியங்களை கேட்டு வந்த கடிதங்களை பெறுவதற்காகவே அவர் ஊரில் ஒரு தனி அஞ்சல் நிலையம் திறந்தார்கள் .

Image Courtesy

சாந்தனு மற்றும் சத்யவதி :

சாந்தனு மற்றும் சத்யவதி :

இந்த கதாப்பாத்திரங்கள் மஹாபாரதத்தில் வருகிறது. ஓவியத்திறமை மட்டுமல்ல மிகவும் வினோதமான கற்பனை திறனும் கொண்டவர் ராஜா ரவி வர்மா. கடவுளை மனித வடிவில் சித்தரித்து மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக காட்டியது ராஜா ரவி வர்மா தான்.

துவக்கத்தில் பெண் தெய்வங்களை அரை நிர்வாணமாக காட்டுவதாக பயங்கரமான குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தன் ஓவியங்களின் மீது அசாரத நம்பிக்கை வைத்து எந்த மாற்றமும் செய்யவில்லை .

Image Courtesy

பெண்கள் :

பெண்கள் :

ராஜா ரவி வர்மா வின் ஓவியத்தில் மிகவும் பிரசத்தி வாய்ந்தது பெண்களின் ஓவியங்கள் தான். அதனை ஆர்டிஸ்டிக்காக பார்க்காமல் தத்ரூபமாக அதாவது இன்றைக்கு நாம் கேண்டிட் என்று சொல்லப்படக்கூடிய யதார்த்தமான காட்சிகளாக உருவகப்படுத்தினார்.

இது ஓவியத்தை எல்லாரும் ரசிக்கும்படியாக மாற்றியது.

Image Courtesy

எமோஷன் :

எமோஷன் :

ரவி வர்மா தன் ஓவியத்தில் எமோஷன்களை அதிகம் வெளிப்படுத்தினார். கோபம், மெய்மறந்து நிற்பது அல்லது ரசிப்பது, ஒருவரின் தனித்திறமையை பறைசாற்றும் விதமாகவும் அவரது ஓவியங்கள் இருந்தன.

அந்த ஓவியத்தின் மூலமாக அங்கு நடந்துக் கொண்டிருக்கும் காட்சிகளை நம்மால் விவரிக்க இயலும்.

Image Courtesy

இயற்கை :

இயற்கை :

ரவி வர்மா தன் ஓவியத்தில் அதிகமாக இயற்கை காட்சிகளை இடம் பெறச் செய்தார். கொட்டும் அருவி, அடந்த காடு, ஓடும் ஆறு,பூத்துக்குலுங்கும் செடி கொடிகள் என பசுமைக் காட்சிகளுக்கு மத்தியில் ஓவியக் கதாப்பத்திரம் நிற்பது போல இருக்கும். அல்லது இயற்கையை காட்சியை ரசித்துக் கொண்டிருப்பது போல ஓவியம் இருக்கும்.

Image Courtesy

 மூன்று வகை :

மூன்று வகை :

ரவிவர்மாவின் ஓவியங்களை மூன்றுவகையாக வகைப்படுத்தலாம். உருவச்சித்திரம், உருவச்சித்திரம் சார்ந்த படைப்புகள், புராண மற்றும் சரித்திரக்கதைகள் சார்ந்த காட்சிப்படைப்புகள்.

இந்தியப் புராணங்களிலும் இலக்கியங்களிலும் அவர் கொண்ட நாட்டமும் மேலும் அவற்றைக் காட்சிப்படுத்த அவர் கையாண்டிருக்கும் பாங்கும் தனித்துவமானது.

Image Courtesy

தனித்துவம் :

தனித்துவம் :

பெண்மையைக் கொண்டாடும் பாங்கிலும் ரவி வர்மா இணையில்லாதவர். பிரமிக்க வைக்கும் நுணுக்கங்களை உடைய ராணி லக்ஷ்மிபாயின் ஓவியம் , அனைவரும் வியக்கும் அன்னமும் தமயந்தியும், பதற்றம் மிக்க சைரந்திரியான திரௌபதி,

மையலும் நாணமும் சேர்ந்த மத்சஸ்கந்தா, தனது மகனை ருக்மாங்கதனிடம் கொல்லச் சொல்லும் மோகினி, கவலையும் அழுகையுமாய் கணவனால் விற்கப்பட்ட சந்திரமதி, வெகுளியான பால்காரப் பெண்ணின் நீர்ம ஓவியம், கம்பீரமான முகத்துடன் கள் விற்கும் மலையாளப் பெண் போன்ற பல்வேறு வாழ்க்கைப் பின்னணியிலுள்ள பாரதப்பெண்களின் முகங்களை இயல் ஓவியமாக தீட்டிய பெருமை இவரையே சாரும்.

Image Courtesy

ஆயில் பெயிண்டிங் :

ஆயில் பெயிண்டிங் :

ரவி வர்மாவின் ஓவியங்கள் இன்றளவும் உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம், இயற்கையாக கிடைக்கும் வண்ணங்களைக் கொண்டு எல்லாரும் ஓவியம் வரையும் காலத்தில் அது காலப்போக்கில் அழிந்து விடும் என்பதையறிந்து ஆயில் பெயிண்டிங் முறையில் ஓவியத்தை வரைந்ததும் ஒர் காரணம் என்றே சொல்லலாம்.

திருவாங்கூர் அரண்மனையின் ஆஸ்தான ஓவியரான ராமசாமி நாயுடுவிற்கு எண்ணெய் வண்ணத்தைப் பற்றி ஓரளவுக்குத் தெரியும். அப்போது அந்தக் கலை இந்தியாவில் பிரபலமாகவும் இல்லை.

Image Courtesy

மறுத்துவிட்ட குரு :

மறுத்துவிட்ட குரு :

ஏற்கனவே ரவிவர்மாவின் திறமையைப் பற்றி அறிந்திருந்த ராமசாமி நாயுடு எங்கே தனக்குப் போட்டியாக வந்து விடுவாரோ என்று நினைத்து அக்கலையை கற்றுக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இது ரவிவர்மாவை மிகவும் பாதித்திருக்கிறது.

Image Courtesy

இத்தாலியக் கலை :

இத்தாலியக் கலை :

மகாராஜா தயவினால் இத்தாலிய ஓவியர்களின் அறிமுகம் கிடைத்தது. துல்லியமான எண்ணெய் வண்ண நுட்பங்களை கற்க முடியாவிட்டாலும் இத்தாலிய ஓவிய முறைகளை கற்றுத் தேர்ந்தார்.

மகாராஜாவைப் பார்க்க ஐரோப்பிய ஓவியரான தியோடர் ஜென்சன் என்பவர் வந்திருந்தார்.

Image Courtesy

பார்க்க மட்டுமே அனுமதி :

பார்க்க மட்டுமே அனுமதி :

ரவி வர்மாவும், ஜென்சனும் மகாராஜா மற்றும் மகாராணியை வரைந்தார்கள்.அப்போதே ரவி வர்மாவின் ஓவியம் தான் சிறப்பாக இருக்கிறது என்று புகழப்பட்டது.

ஜென்சனும் எங்கே ரவி வர்மா தன்னை விஞ்சி விடுவாரோ என்று சொல்லி எண்ணெய் வண்ண ஓவியக் கலையை கற்றுக் கொடுக்க முன்வரவில்லை. ஆனால் தான் வரையும் போது உடனிருந்து பார்க்க அனுமதித்தார்.

இப்படி உடனிருந்து கவனித்தே எண்ணெய் வண்ண ஓவியங்களின் நுட்பத்தை அறிந்து கொண்டார்.

Image Courtesy

ஓவியங்களின் மாதிரி :

ஓவியங்களின் மாதிரி :

திருவாங்கூர் அரண்மனைகளில் இருந்த பெண்கள், ஆடவர்கள் ஆகியரை மாதிரியாக நிறுத்தி ஓவியங்களை வரைந்தார். அரண்மனையில் இருந்தவர்கள் அணிந்த ஆடை ஆபரணங்களையே தன் ஓவியக் கதாப்பாத்திரங்களுக்கும் சூட்டி அழகு பார்த்தார்.

சுகுணா பாய் என்கிற மகாராஸ்டிர பெண்மணி தான் ரவிவர்மா வரைந்த லஷ்மி, சரஸ்வதி ஓவியங்களுக்கு மாதிரியாக இருந்தவர்.

Image Courtesy

வரையும் தருணம் :

வரையும் தருணம் :

ரவி வர்மா ஓவியம் வரைவது கூட தனித்துவமானது. விடியும் முன்னரே எழுந்து விடியும் வரை காத்திருந்து ஓவியத்தை வரைய ஆரம்பிப்பார். எப்போதும் இளந்தளிரான வெற்றிலையை மென்றபடி தான் வரைவார்.

ஓவியம் வரையும் போது மூக்குப் பொடி பயன்படுத்துவதும் உண்டு.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync pulse
    English summary

    Did You Notice This Things From Ravi Varma Paintings

    Did You Notice This Things From Ravi Varma Paintings
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more