Latest Updates
-
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
இந்த ஒரு செயல் உங்களுக்கு அதிக பண கஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் தரும் தெரியுமா?
பறவைகளை கூண்டில் அடைப்பது பணக் கஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டவசத்தை அளிக்குமா?
வாஸ்து சாஸ்திரங்கள் மற்றும் பல புராண, இலக்கியங்களில் நமது முன்னோர்கள் எந்தெந்த காரியங்கள், செயல்கள் கஷ்டத்தை தரும், லாபத்தை தரும், மகிழ்ச்சியை தரும், இகழ்ச்சியை தரும் என நிறைய கூறி சென்றுள்ளனர்.
அதில் பறவைகளை கூண்டில் அடைப்பது பணக் கஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டவசத்தை அளிக்குமா? எதனால் இப்படி கூறப்படுகிறது என்பது குறித்து இங்கு காணலாம்...

அசௌகரிய அதிர்வுகள்!
வாஸ்து சாஸ்திரங்களின் படி, வீட்டில் பறவைகளை கூண்டில் அடைத்து வைப்பது தீய அதிர்வுகளை உண்டாக்கும் என கூறப்படுகிறது.
இதனால் அந்த வீட்டிலும், வீட்டில் வாழும் நபர்கள் வாழ்விலும் வெற்றிடம் நிரம்ப வாய்ப்புகள் இருக்கிறதாம்.

சரியான தகவல் அறிவதில்லை!
எதிர்பாராதவிதமாக, நாம் நமக்கு பிடித்த பிராணிகளை வாங்கி வீட்டில் வளர்க்கிறோம். இது அவரவர் சுய விருப்பமாக இருக்கிறது. இதில் நாம் பிராணிகளை எப்படி வளர்க்க வேண்டும் என சரியாக அறிவதில்லை.
ஆம், இது போன்று கூண்டில் பறவைகளை அடைத்து வளர்ப்பது தீய சக்தியையும், துரதிர்ஷ்டத்தையும் தரும் என தெரியாமலேயே பலர், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் எழ காரணமாகிவிடுகின்றனர்.

ஒன்றாக வாழ்பவை!
பறவைகள் ஒன்றாக சேர்ந்து வாழும் குணாதிசயம் கொண்டவை. இதை நாம் தினமும் வானத்திலேயே கண்கூட பார்க்கலாம்.
இப்படிப்பட்ட உயிரை நாம் தன்னந்தனியாக கூட்டில் அடைத்து வைப்பது, அதன் இயற்கை பண்பை, குணத்தை அளிக்க செய்கிறது.

கோபம்!
தனிமைப்படுத்தப்பட்ட நிலை, அலுப்பு போன்றவை அதன் இயற்கை குணத்தை இழந்து ஆக்ரோஷ குணத்திற்கு மாற வைக்குமாம்.

கர்மா!
வானத்தில் உயர பறந்து மகிழ்ந்திருந்த பறவையை கூண்டில் அடைத்து சோகத்தில் ஆழ்த்துவது, கர்மா போல உங்களை திருப்பி தாக்குமாம்.
இதனால், தான் வீட்டில் பறவைகளை கூண்டில் அடைத்து வளர்க்க கூடாது என கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
