2048லிருந்து டைம் டிராவல் செய்த ஆண், 2018ல் ஏலியன் பூமியில் படையெடுக்கும் என எச்சரிக்கை!

Posted By:
Subscribe to Boldsky

எஸ்.ஜே சூர்யா பாணியில் இருக்கா? இல்லையா? என உலகில் இன்று வரை பெரும் கேள்விக்குறியாக இருந்து வருவது இரண்டு விஷயங்கள் ஒன்று ஏலியன்கள் மற்றொன்று டைம் டிராவல்.

இந்த இரண்டு விஷயங்கள் மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்த யார் காரணம் என்ற கேள்வி எழுகையில், அறிவியல் ஆராய்ச்சியாளர்களை காட்டிலும் சினிமா இயக்குனர்களே என்ற பதில் தான் கொஞ்சம் தலை தூக்கி நிற்கிறது.

எண்ணற்ற படங்கள், பற்பல கோணங்களில் இந்த ஏலியன் மற்றும் டைம் டிராவல் குறித்து விவாதித்துள்ளன. உலகின் பல்வேறு இடங்களை செந்த சிலர் நிஜமாகவே ஏலியன்களின் பறக்கும் தட்டை கண்டுள்ளதாக தங்கள் கருத்தையும் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், சென்ற மாதம் குடி போதையில் கைதான ஒரு அமெரிக்கர் தான் 2048ல் இருந்து வந்துள்ளவர் என்றும், அடுத்த வருடம் பூமியின் மீது ஏலியன்கள் படையெடுக்கும் எனவும் ஆச்சரியமான தகவல் கூறியுள்ளார். இது மெய்யா? பொய்யா? இவர் இப்படி கூற என்ன காரணம் என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காஸ்பர் நகரம்!

காஸ்பர் நகரம்!

அமெரிக்காவின் வயோமிங் என்ற பகுதியில் இருக்கும் நகரம் காஸ்பர். ஏறத்தாழ 60,000 பேர் வாழ்ந்து வரும் இந்த பகுதியில்குடி போதையில் இருந்த ஒரு ஆணை போலீசார் கடந்த அக்டோபர் மாதம் முதல் திங்கள் நள்ளிரவு கைது செய்துள்ளனர்.

இளைஞர் கைது!

இளைஞர் கைது!

பொது இடத்தில் குடித்துவிட்டு ரகளை செய்தால், எந்த ஊராக இருந்தாலும் கைது தான் செய்வார்கள். ஆனால், கைதான பிரையன்ட் ஜான்சன் அதன் பிறகு கூறிய விஷயங்கள் தான் ஆச்சரியமாக இருந்தது. தான் 2048ல் இருந்து டைம் டிராவல் மூலமாக 2017க்கு வந்துள்ளதாகவும். காஸ்பர் நகரின் அடுத்த வருடம் ஏலியன்கள் படையெடுப்பு நடக்கும் என்றும் இவர் கூறினார்.

வானொலி நிலையம்!

வானொலி நிலையம்!

காஸ்பர் நகரின் வானொலி நிலையமான கே.டி.டபிள்யூ.ஒ அளித்த தகவலின்படி பிடிப்பட்ட பிரையன்ட் ஜான்சன் எதிர்காலமான 2048ல் இருந்து நிகல்காலமான 2017க்கு வந்துள்ளதாகவும், அடுத்த வருடம் (2018), ஏலியன்கள் பூமியின் மீது படையெடுக்கும் என போலீஸில் தகவல் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கைதான போது...

கைதான போது...

போலீஸ் பிரையன்ட் ஜான்சனை கைது செய்யும் போது அவர் தெருவில் மக்களிடம் உடனே இந்த ஊரை காலி செய்துக் கொண்டு கிளம்பிவிடுங்கள். ஏலியன்கள் நம் மீது படையெடுத்து தாக்க போகின்றன. நான் சொல்வதை நம்புங்கள் என அனைவரிடமும் கெஞ்சிக் கொண்டிருந்துள்ளார்.

அதிபர்!

அதிபர்!

மேலும் போலீஸிடம், தன்னை அதிபரை காண அனுமதி வழங்குங்கள் நாம் அனைவரும் பெரும் அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கிறோம். ஏலியன் தாக்குதலில் இருந்து மனிதர்களை காக்க வேண்டும். காஸ்பரில் வாழும் மக்களை உடனே இப்பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் பல வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார் பிரையன்ட் ஜான்சன்.

குடிபோதை!

குடிபோதை!

பிறகு ஏன் நீ குடி போதையில் இருக்கிறாய்? என போலீஸ் பிரையன்ட் ஜான்சனிடம் கேட்ட போது, ஏலியன்கள் தான் என் வாயில் ஆல்கஹாலை ஊற்றினார்கள். அவர்கள் என்னை ஒரு பெரிய பேடில் வைத்திருந்தனர். அதிலிருந்து தான் நான் டைம் டிராவல் செய்து வந்தேன் என விசித்திரமாக பதில் கூறியுள்ளார்.

ஊடகம் கேலி!

ஊடகம் கேலி!

ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பதே பெரிய விவாத பொருளாக இருக்கையில். மேலும், ஏலியன்கள் ஏன் இவரை பூமிக்கு மீண்டும் மக்களை எச்சரிக்க டைம் டிராவலில் அனுப்ப வேண்டும் என அங்கே ஊடகங்களில் சிலர் கேலியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

மிதமிஞ்சிய போதை!

மிதமிஞ்சிய போதை!

ஏலியன்கள் வர போகின்றன, 2018ல் பூமியின் மீது படையெடுக்க போகிறது என மூச்சுக்கு முன்னூறு முறை கூறிய பிரையன்ட் ஜான்சணுக்கு போலீஸ் பி.எ.சி எனப்படும் Blood Alcohol Content பரிசோதனை செய்தனர்.

அதில் இரத்தத்தில் ஆல்கஹால் அளவு ௦.136 அளவு கலப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இரத்தத்தில் 0.08 அளவு ஆல்கஹால் கலப்பு இருந்தால் மிகமிஞ்சிய போதை என போலீசார் கூறுகிறார்கள்.

ரிலீஸ்!

ரிலீஸ்!

எனவே, பெரும் போதையில் போலீஸிடம் சிக்கி, அவர்களிடம் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் கண்டபடி உளறியுள்ளார் பிரையன்ட் ஜான்சன் என்பது இந்த பரிசோதனைக்கு பிறகு தான் முழுமையாக அறியவந்தது.

பிறகு கஸ்டடியில் இருந்த பிரையன்ட் ஜான்சனை போதை தெளிந்த பிறகு வீட்டுக்கு அனுப்பினர் போலீஸ்.

ஃபேஸ்புக் பக்கம்!

ஃபேஸ்புக் பக்கம்!

பிரையன்ட் ஜான்சனின் ஃபேஸ்புக்கை ஆராய்ந்த போது, அதில் முழுக்க முழுக்க ஏலியன்கள் பற்றிய தகவல்களே இருந்தன என்றும். கடந்த ஜூலை மாதம் இவர் தனது முகவிவர படமாக ஒரு ஏலியனின் முகத்தை மாற்றி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

முழுக்க, முழுக்க ஏலியனில் ஐக்கியமான பிரையன்ட் ஜான்சன், மிகுதியான குடி போதை அடைந்தவுடன் தன்னைத்தானே டைம் டிராவல் செய்து வந்ததாக கருதி அனைவரிடமும் கற்பனை கதை கூறி உளறியுள்ளார்.

(காலம், காலமா இவங்க சொல்லிட்டு இருக்க உலக அழிவே இன்னும் வரல. அதுக்குள்ள இந்த ஏலியன் வேற. அது ஏன் அமெரிக்காவுல மட்டும் எல்லாம் வருது. அவ்வளோ பாவம் பண்ண மக்களா அங்குட்டு இருக்காங்க??!?!?!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bryant Johnson, Who Claims Time Travel and Warns People About Aliens Invasion in 2018!

Bryant Johnson, Who Claims Time Travel and Warns People About Aliens Invasion in 2018!