மக்களால் உருவாக்கப்பட்ட சில விந்தையான மதங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும், அங்கே வாழும் மக்களால், ஆன்மீக ரீதியாக ஏதோ ஒரு மதத்தை பின்பற்றி வரும் பழக்கம் இருக்கும். அது அவர்களதுகலாச்சாரத்தோடு பிணைந்து காணப்படும். அவர்களுக்கென தனி வாழ்வியல் முறை, கோட்பாடுகள் என சட்டத்திட்டங்கள் வகுத்திருப்பார்கள்.

ஒரு மதம் சரி என்பதை, இன்னொரு மதம் தவறு என கூறுவதில்லை. மதம் என்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு கம்பெனியில் இருக்கும் எச்.ஆர் பாலிசி போல தான். அதன் கவர் நிறம், ஃபான்ட் வெவ்வேறாக இருப்பினும், அது கூறவரும் பொருள் ஒரே மாதிரியதாக தான் இருக்கும்.

மதம் என்பது மக்களை ஒன்றிணைக்கவும், ஒழுங்கப்படுத்தவும் தான். அப்படி தான் நாம் இதுவரை அறிந்த மதங்கள் இருக்கின்றன. ஆனால், மதங்களிலும் கூட சற்றே விசித்திரமானவை நம் உலகில் இருக்கின்றன. பேய் படங்களில் சாத்தானை வழிப்படுவது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். அதற்கு பெயர் ஒன்று சூட்டி மதமாக கருதி, அதை வெறித்தனமாக பின்பற்றி வருவோரும் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நுவௌபியனிஸம்

நுவௌபியனிஸம்

நுவௌபியனிஸம் (Nuwaubianism) என்பது நியூயார்க்கில் 1970-களில் காணப்பட்ட கருப்பு இஸ்லாமியர்கள் மதமாக கருதப்படுகிறது. ட்வைட் யார்க் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு, வழிநடத்தி செல்லப்பட்ட மதம் இது. யூத மற்றும் கிறிஸ்துவ மத கோட்பாடுகளை கொண்டு இந்த நுவௌபியனிஸ நம்பிக்கைகள் இருந்ததாக கூறப்படுகிறது. வெள்ளையர்கள் எதிர்ப்பு மற்றும் ஏலியன் போன்ற சில பழக்கங்கள் இவர்களிடம் விசித்திரமாக காணப்பட்டன.

வேம்பயர்ஸம்

வேம்பயர்ஸம்

வேம்பயர்ஸம் (Vampirism) என்பது, இரத்தக் காட்டேறிகள் இந்த உலகில் இருக்கிறது என நம்பி, அதற்கு ஒரு மதத்தை உருவாக்கி பின்பற்றி வாழ்ந்த மக்களின் அமைப்பாகும். இவர்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் இரத்தத்தை உணவாக அருந்தி வந்தவர்கள். இன்றளவும் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மதத்தை பின்தொடர்ந்து வருவதாக அறியப்படுகிறது.

ஃப்ரிஸ்பீடரியனிஸம்

ஃப்ரிஸ்பீடரியனிஸம்

ஃப்ரிஸ்பீடரியனிஸம் (Frisbeertarianism) என்பது குறித்து பிரபல காமெடியன் ஜியார்ஜ் கார்லின், "நீங்கள் இறந்தவுடன் உயிர் எங்கே செல்கிறது? தனது முடிவு காலம் எட்டும் வரை வீட்டு கூரை மேல் தான் சுற்றிக் கொண்டிருக்கும் என கூறியிருக்கிறார். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த ஃப்ரிஸ்பீடரியனிஸம் முட்டாள்தனமானது என கூறியிருக்கிறார்கள். மேலும், ஜியார்ஜ் ஒருவர் வந்து பெரிய குச்சியை வைத்து தட்டி எழுப்பும் வரை, அந்த உயிரின் அடுத்த பிறப்பு துவங்காது என்றும் கூறியிருக்கிறார். இவர் காமெடிக்காக கூறினாரா? என தெரியவில்லை.

அகோரி!

அகோரி!

இந்து மதத்தின் விசித்திரமான விஷயங்களில் அகோரி கோட்பாடுகளும் ஒன்று. அகோரிகளுக்கு மதம் கிடையாது. அவர்கள் சிவனை வணங்கி வருவதால், அவர்கள் இந்துக்கள் என கூறி அழைக்கப்படுகிறார்கள். உண்மையில் அகோரிகள் என்பதே தனித்துவம் கொண்டதாக தான் காணப்படுகிறது. மண்டை ஓடுகளுடன் ஆலங்கரித்து கொண்டு, எரிந்த உடலின் சாம்பலை உடல் முழுக்க போசிக் கொண்டு, பிணங்களை திண்ணும் பழக்கம் கொண்டிருக்கும் அகோரிகளை உலக அளவில் கொஞ்சம் அச்சத்துடன் தான் காண்கிறார்கள்.

சாத்தான்!

சாத்தான்!

கடவுளை வணங்கும் அதே இடத்தில் தான் சாத்தானை வணங்குகிறார்கள். பாசிடிவ் எனர்ஜி இருக்கும் இடத்தில் கண்டிப்பாக நெகடிவ் எனர்ஜி இருக்கும் என அறிவியல் கூறுவது போல தான். கடவுள் இருக்கும் இடத்தில் சாத்தான் இருக்கும் என உலகின் பல பகுதிகளில் நம்பப்பட்டு வருகிறது. சாத்தானை வழிப்படும் முறை என்றிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது என தெளிவான தகவல்கள் ஏதுமில்லை. ஆனால், உலகின் பல்வேறு நாடுகளில், பல கால சமயங்களில் சாத்தானை பலர் வணங்கி வந்திருக்கிறார். இன்னும் சாத்தானை வணங்கி வரும் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் தங்களை சாத்தான் மதத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்

ரேலிஸம்

ரேலிஸம்

க்ளாட் வோரில்ஹோன் என்பவரால் துவக்கப்பட்ட மதம் இது. இது யு.எப்.ஒ மதமாகும். இந்த மதத்தின் கோட்பாடுகள் பற்றி, நமது உலகம் வேற்றுகிரக வாசிகளால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது. நமது உலகை அவர்கள் அறிவியல் ரீதியாக உருவாக்கியுள்ளனர் என்றும் இவர்கள் கருதுகிறார்கள். இந்த மதத்தை பின்பற்றும் மக்கள் அமைதிக்காக ஸ்வஸ்திக் சின்னத்தை வணங்கும் பழக்கம் கொண்டிருந்தனர். பின்னாட்களில் இந்த அமைதிக்கான சின்னத்தை இவர்கள் நட்ச்சத்திரமாகவும், சுழற்சியாகவும் மாற்றிக் கொண்டனர்.

பனாவேவ்

பனாவேவ்

பனாவேவ் என்பது ஒரு ஜப்பானிய மதம். இதை 1200 பேர் கொண்ட ஒரு குழு பின்பற்றி வருகிறது. இவர்கள் உலகின் மற்றும் வானிலை மாற்றங்களுக்கு எலக்ட்ரோமேக்னடிக் அலைகள் தான் காரணம் என நம்புகிறார்கள். மேலும், இவர்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களை கொள்ள இந்த எலக்ட்ரோமேக்னடிக் அலைகள் பயன்படுத்தப்பட்டன என்றும் கருதுகிறார்கள்.

பிரபஞ்ச மக்கள்!

பிரபஞ்ச மக்கள்!

Universe People என அழைக்கப்படும் இந்த மக்கள் ஏலியன் சார்ந்த ஈர்ப்பு கொண்ட மதத்தை பின்பற்றி வருகிறார்கள்.இந்த மதத்தை இவா பெண்டா என்பவரால் 1997ல் உருவாக்கப்பட்டது. இவர்கள் ஏலியன் கப்பலில் பறந்து வரும், அவர்கள் மிக தொலைவில் இருந்து உலகையும், மக்களையும் கண்காணித்து வருகிறார்கள் என நம்புகிறார்கள். அவரவர் கர்மாவின் படி அவரவர்களுக்கான விதி அமையும் என்றும் கூறுகிறார்கள். இந்த மதத்தில் நாளுக்கு, நாள் மக்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள்.

சயின்டோலாஜி

சயின்டோலாஜி

சயின்டோலாஜி என்பது எல்.ரோன் ஹப்பர்ட் என்பவரால் 1952ல் துவக்கப்பட்ட மதமாகும். இதில் பல அபாயகரமான நம்பிக்கைகள் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அறிவியலை கற்பிக்கிறார்கள், அறிவியலை நம்புகிறார்கள். அறிவியலையே தங்கள் ஆன்மீகமாக பின்தொடர்கிறார்கள்.

பஸ்தஃபாரியனிஸம்

பஸ்தஃபாரியனிஸம்

பஸ்தஃபாரியனிஸம் (Pastafarianism) எனும் மதத்தை சேர்ந்தவர்கள் பறக்கும் ஸ்பாகட்டி மான்ஸ்டரை வணங்கும் பழக்கம் கொண்டிருப்பவர்கள். பல மக்கள் இந்த மதம், மற்ற மதத்தை கிண்டல் செய்யும் மதமாக காண்கிறார்கள். ஆனால், பஸ்தஃபாரியனிஸ மதத்தை பின்தொடரும் நபர்கள் தாங்கள் எங்கள் மதத்தை உள்ளார்ந்து வணங்கி வருகிறோம் என கூறுகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bizarre Religions That Actually Exist Around The World!

Bizarre Religions That Actually Exist Around The World!
Subscribe Newsletter