For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2 நிமிஷம் டைம் இருந்தா, இதுல என்ன வித்தியாசம் இருக்குன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்!

எதிர்பாராத பொருட்களை ஒன்றிணைத்து டிசைன் செய்து அசத்தும் ராண்டி லூயிஸ்!

|
American Designer Randy Lewis Combines Unexpected Objects Into Mind-Boggling Images

ராண்டி லூயிஸ் என்பவர் அமெரிக்காவை சேர்ந்த கிராபிக் டிசைனர் மற்றும் கிரியேட்டிவ் டைரக்டர் ஆவார். இவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இவர் போட்டோஷாப் மூலமாக அளவிலாத கற்பனை திறனையை உலகில் அள்ளித்தெளித்து வருகிறார்.

SurReal ArtWorks என்ற பெயரில் ராண்டி லூயிஸ் பல கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் செய்து வருகிறார். இவரது பல கலைகள், அட இப்படி கூட யோசிக்கலாமோ என சிந்திக்க வைக்கிறது. இவர் தேர்வு செய்யும் பொருள்களும், அதன் வெளிப்பாடும் வேறு வகையில் இருக்கிறது.

உதாரணமாக இவர் டிசைன் செய்திருந்த வாட்டர்மெலன், ஜெல்லி ஃபிஷ் மற்றும் பட்டர்ஃப்ளை போன்றவை எல்லாம் கற்பனையின் உச்சம் என கூறலாம். பேருக்கு எற்றப்படியும், உருவ தோற்றத்திற்கு எற்றப்படியும் கிராபிக் டிசைனில் புகுந்து விளையாடும் வல்லுநர் தான் ராண்டி லூயிஸ்.

இனி! ராண்டி லூயிஸின் சிலிர்ப்பூட்டும் டிசைன்கள் சிலவன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தர்பூசணி

தர்பூசணி

தர்பூசணி என்பதை ஆங்கிலத்தில் Water Melon என்று கூறுகிறோம். வாட்டர் என்பதை தர்பூசணியில் நாம் பெயராக மட்டுமே கண்டிருப்போம். ஆனால், ராண்டி லூயிஸ் கண்முன்னே கொண்டு வந்த காட்டியிருக்கிறார். நெசம்தானே... வாட்டர் மெலன்ல இதுக்கு முன்ன இப்படி வாட்டர் பாத்திருக்கீங்களா?

Instagram

இனி அள்ளி கொஞ்சலாம்...

இனி அள்ளி கொஞ்சலாம்...

முள்ளம்பன்றியை கண்டு நாம் அஞ்சுவதற்கு ஒரே காரணம் அதன் முள் போன்ற தோற்றம் தான். அப்படி முற்கள் இல்லை எனில், மனிதர்கள் எப்போதோ அதையும் உண்ணும் பட்டியலில் சேர்த்திருப்பார்கள். நம்மில் பெரும்பாலானோர் முள்ளம்பன்றியை படத்தில் மட்டும் தான் பார்த்திருப்போம். இப்படி ஒரு முள்ளம்பன்றி இருந்தால் முயல், பூனை, நாயை காட்டிலும் இது தான் பெருவாரியாக செல்லப் பிராணியாக இருக்கும்.

Instagram

சாப்பிட்டு தான் பாருங்களேன்...

சாப்பிட்டு தான் பாருங்களேன்...

பார்த்தும் கேண்டி என்பது தெரிகிறதா...? கொஞ்சம் உற்றுப் பாருங்கள் இது விஷமான கேண்டி என்பதும், இதை நீங்கள் கடித்தாலோ, அல்லது அதை உங்களை கடித்தலோ மரணம் என்பது நமக்கு தான் என்பது புரியும். பச்சை, மஞ்சள் பாம்பை கேண்டியில் சேர்த்துள்ளது ராண்டியின் கலை.

Instagram

உவேக்!

உவேக்!

நத்தையை இதற்கு முன்னர் இவ்வளவு க்ளோஸ்அப்பில் நாம் கண்டிருக்க வாய்ப்பில்லை. மேக்ரோ கேமரா லென்சில் பார்த்தல் மட்டுமே நத்தையின் இந்த தோற்றம் தென்படும். நத்தையின் உடல் சருமமும் பெஸ்ட் போல தான் இருக்குமோ? அது கொஞ்சம் வழவழ கொழகொழன்னு தான் இருக்கும். ஆனால், இத்துடன் சேர்த்து டிசைன் செய்ய ராண்டிக்கு எப்படி தோன்றியதோ?

Instagram

நீங்க வெஜ்டேரியனா?

நீங்க வெஜ்டேரியனா?

இது வெஜ்டேரியன்களுக்கான ஆடு. சாப்பிட முடியாது என்றாலும் படமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம்.ஒருவேளை உங்கள் வீட்டில் இன்று அம்மா விரதம் இருந்தால் இந்த காலிபிளவர் வாங்கிக் கொடுத்து சமைத்து தர கூறுங்கள். (அடிக்க ஏதுவான பொருட்களை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு கூறினால் உங்களுக்கு நல்லது.)

Instagram

ஜீனியஸ்!

ஜீனியஸ்!

மிக சிலரால் மட்டும் தான் ராண்டி போல யோசிக்க முடியும் Butterflyயில் இருக்கும் Butterஐ கொண்டு இந்த கிராபிக் டிசைன் செய்துள்ளார் ராண்டி லூயிஸ். ராண்டியின் கிரியேடிவ் வர்க்கில் இது மிகவும் சிறந்ததாக திகழ்கிறது.

Instagram

ஆமை!

ஆமை!

தர்பூசணி, பட்டாம்பூச்சியில் பெயரை வைத்து விளையாடிய ராண்டி லூயிஸ், இந்த பர்கரில் தோற்றத்தை வைத்து விளையாடியுள்ளார். பார்கரின் மேல் பகுதியின், ஆமையின் ஓடு பகுதியும் ஒரே வண்ணத்தில் இருந்தால் ஒருவேளை இப்படியாக தான் இருக்கும் என நாம் ஒருபோதும் யோசித்திருக்க மாட்டோம். ஆனால், ராண்டி அதை யோசித்து டிசைன் செய்து அசத்தியுள்ளார்.

Instagram

ஜெல்லி!

ஜெல்லி!

பட்டாம்பூச்சிக்கு பிறகு அதிகமாக கவர்ந்த ராண்டியின் டிஸைன் இது. ஜெல்லி ஃபிஷ் நாம் அறிந்திருப்போம், [பார்த்திருப்போம். ஏன், நம்மில் பலர் வளர்த்திருப்போம். ஆனால், இப்படி ஒரு ஜெல்லி ஃபிஷ் நாம் கற்பனை செய்து பார்த்திருக்க மாட்டோம்.

Instagram

வவ்வால்!

வவ்வால்!

வவ்வாலும் Bat தான், பேஸ்பால் பேட்டும் Bat தான். பெரும்பாலான ராண்டியின் இந்த பெயர் சார்ந்த கிரியேட்டிவ் கிராபிக் டிசைன்கள் அனைத்தும் அடடே! போட வைக்கின்றன. அதில் இந்த வவ்வால் டிசைனும் இணைந்துள்ளது.

Instagram

அழகு! ருசி?

அழகு! ருசி?

ஸ்ட்ராபெர்ரி பார்க்க அழகாக தான் இருக்கும். ஆனால், அதன் ருசி அவ்வளவு அழகாக இருக்காது. வாழைப் பழம் பார்க்க சாதாரணமாக இருந்தாலும், அதன் ருசி மிகுதியானது. எனவே தான் ருசியின் அழகையும், தோற்றத்தின் அழகையும் ஒன்றிணைத்து அழகுக்கே அழகு சேர்த்துள்ளார் ராண்டி லூயிஸ்.

Instagram

சிக்கன் பர்கர்!

சிக்கன் பர்கர்!

பர்கர் பிரியர்கள் அனைவரும் வகை வகையான சிக்கன் பர்கர் ருசித்திருப்பார்கள். ஆனால், இப்படி ஒரு சிக்கன் பர்கரை தங்கள் வாழ்வில் கண்டிருக்க மாட்டர்கள். இதை ருசிக்க முடியாது ஆனால் நன்கு ரசிக்க முடியும். முடிந்த வரை ரசித்துக் கொள்ளுங்கள்.

Instagram

எதுக்கு?

எதுக்கு?

அனைத்திலும் அழகை, மெருகேற்றி காண்பித்த ராண்டி லூயிஸ் இதில் தனது விஷமத்தனத்தை காட்டியுள்ளார். தவளையை பிடிக்கும் என கூறுவோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஏனெனில், பெரும்பலம் யாருக்கும் தவளை என்றால் பிடிக்காது. அதன் மேல் சருமம் மட்டும் காண நன்றாக இருந்தாலும், அதன் உடலை தொட்டு பார்க்க முடியாது.

ஆனால், பெண்களின் இதழ்களை யாராலும் தொட்டுப் பாராமல் இருக்க முடியாது. இப்படி எல்லாமா கற்பனை திறனை காண்பிக்க வேண்டும் ராண்டி?

Instagram

கேப்சூல் உணவு!

கேப்சூல் உணவு!

இந்த காலம் மிக தொலைவில் இல்லை என்பது மட்டும் சத்தியம். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் ஆப்பிள் ஸ்ட்ரிப் ஒன்று, மாதுளை ஸ்ட்ரிப் இரண்டு, கொய்யா ஸ்ட்ரிப் ஐந்து என பழங்களை அடைத்து விற்கும் மாத்திரைய ஸ்ட்ரிப்களாக நாம் வாங்கி உண்ணும் காலம் வரும்.

Instagram

பிகினி!

பிகினி!

நான் ஈயில் நடித்த ஈக்கு ஜோடி இருந்தால் எப்படி இருக்கும்? இதோ ஒருவேளை இப்படி இருக்கலாம். உடன ராஜ மௌலிக்கு கால் செய்து இந்த படத்தை காண்பிக்கலாம். இதற்கும் ஒரு ஸ்கிர்ப்ட் எழுதி நான் ஈ 2 எடுத்து கோடிகளாக மாற்ற அவருக்கு ஒரு கதை கிடைக்கும்.

Instagram

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

American Designer Randy Lewis Combines Unexpected Objects Into Mind-Boggling Images

American Designer Randy Lewis Combines Unexpected Objects Into Mind-Boggling Images
Desktop Bottom Promotion