உங்க பிறந்த நாள் என்னன்னு சொல்லுங்க, 2017 உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு புது வருடமும் புது கனவுகள், புது இலட்சியங்களுடன் தான் பிறக்கின்றன. சென்ற வருடம் நாம் செய்ய மறந்ததை, நம்மால் அடைய முடியாததை இந்த வருடமாவது அடைந்துவிட வேண்டும் என்பது தான் பலரின் குறிக்கோளாக இருக்கும்.

2017 Future Predictions based on your date of birth

உங்க பிறந்தநாள் என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்!!

ஜோதிடத்தில் பல வகைகள் இருக்கின்றன அதில் ஒன்று தான் எண் ஜோதிடம் எனப்படும் என்ன கணித முறை. இம்முறையில் உங்கள் பிறந்த நாளை வைத்து இந்த 2017 உங்களுக்கு எப்படி இருக்கும், உங்களுக்கான சிறந்த மாதம் எது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒன்று!

ஒன்று!

ஒன்று அல்லது பிறந்த நாளின் கூட்டுத்தொகை ஒன்றில் முடியும் பிறந்தநாள் கொண்டவர்களுக்கு...

தேதி: 1, 10, 19 மற்றும் 28.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவ்வருடம் மகிழ்ச்சியான வருடமாக இருக்கும். மேலும் நல்ல பயனளிக்கும் முற்போக்கான வருடமாகவும் அமையும். உங்கள் துறை சார்ந்து நீங்கள் சரியாக உழைத்தாலே போதுமானது. கவனமாக வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.

சிறந்த காலம்!

பிறந்த நாள் / கூட்டுத்தொகை ஒன்று வருபவர்களுக்கு ஏப்ரல், மே, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் நல்ல பலனளிக்கும் காலமாக அமையும். இந்த காலத்தில் நல்ல வாய்ப்புகள் அமையும்.

இரண்டு!

இரண்டு!

இரண்டு அல்லது பிறந்த நாளின் கூட்டுத்தொகை இரண்டில் முடியும் பிறந்தநாள் கொண்டவர்களுக்கு...

தேதி: 2, 11, 20 மற்றும் 29.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவ்வருடத்தில், நிறைவேறாத கனவுகள் கூட நிறைவேறும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிட்ட வாய்ப்புகள் உண்டு. உங்களது மேலதிகாரிகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

சிறந்த காலம்!

பிறந்த நாள் / கூட்டுத்தொகை இரண்டு வருபவர்களுக்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் சிறந்த காலமாக அமையும். குழந்தைகள் மூலமாக நற்செய்திகள் வர வாய்ப்புகள் உண்டு.

மூன்று!

மூன்று!

மூன்று அல்லது பிறந்த நாளின் கூட்டுத்தொகை மூன்றில் முடியும் பிறந்தநாள் கொண்டவர்களுக்கு...

தேதி: 3, 12, 21 மற்றும் 30.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவ்வருடத்தில் போராட்டங்களும், தடைகளும் சற்று அதிகம் இருக்கும். தொழில் ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். வேலையில் அதிக அக்கறை தேவை. கவன குறைவால் அபாயங்கள் ஏற்படலாம். மேலதிகாரிகளும் வாக்குவாதங்கள் தவிர்க்கவும்.

சிறந்த காலம்!

பிறந்த நாள் / கூட்டுத்தொகை மூன்று வருபவர்களுக்கு, மார்ச் மாதம் சிறந்த மாதமாக அமையும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

நான்கு!

நான்கு!

நான்கு அல்லது பிறந்த நாளின் கூட்டுத்தொகை நான்கில் முடியும் பிறந்தநாள் கொண்டவர்களுக்கு...

தேதி: 4, 13, 22nd மற்றும் 31.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவ்வருடத்தில் புதிய நம்பிக்கை, எதிர்பார்ப்பு பிறக்கும். வாழ்க்கை புதியதாக துவங்கும். வேலை ரீதியாக நிறைய வாய்ப்புகள் கிட்டும். ஊக்கமும், உத்வேகமும் உங்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். வெற்றிகரமான வருடமாக 2017 அமையும்.

சிறந்த காலம்!

பிறந்த நாள் / கூட்டுத்தொகை நான்கு வருபவர்களுக்கு, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் சிறந்த காலமாக அமையும். நல்ல செய்திகள், மகிழ்ச்சியும் அதிகம் பிறக்கும் காலமாக இது அமையும்.

ஐந்து!

ஐந்து!

ஐந்து அல்லது பிறந்த நாளின் கூட்டுத்தொகை ஐந்தில் முடியும் பிறந்தநாள் கொண்டவர்களுக்கு...

தேதி: 5, 14, 23.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவ்வருடம் அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி நிறைந்த வருடமாக இது அமையும். வாகனங்கள் வாங்கும் காலம் பிறக்கும். பொருளாதாரம் உயரும். சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வேலை ரீதியாக மேன்மை காண்பீர்கள்.

சிறந்த காலம்!

பிறந்த நாள் / கூட்டுத்தொகை ஐந்து வருபவர்களுக்கு, டிசம்பர் மாதம் சிறந்த மாதமாக அமையும். இந்த மாதம் லாபகரமான மாதமாகவும் அமையும்.

ஆறு!

ஆறு!

ஆறு அல்லது பிறந்த நாளின் கூட்டுத்தொகை ஆறில் முடியும் பிறந்தநாள் கொண்டவர்களுக்கு...

தேதி: 6, 15, 24.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவ்வருடம், தொழில் ரீதியாக சிறந்த வருடமாக அமையும். உங்கள் வேலைக்கான பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் மீது பொறமை படுபவர்களும் உங்கள் மீது ஈர்ப்பு கொள்வார்கள்.

சிறந்த காலம்!

பிறந்த நாள் / கூட்டுத்தொகை ஆறு வருபவர்களுக்கு, இவ்வருடத்தின் மத்திய காலம் சிறந்ததாக அமையும்.

ஏழு!

ஏழு!

ஏழு அல்லது பிறந்த நாளின் கூட்டுத்தொகை ஏழில் முடியும் பிறந்தநாள் கொண்டவர்களுக்கு...

தேதி: 7, 16, 25

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவ்வருடம், உங்களை நீங்களே நிரூபிக்க வேண்டிய வருடமாக அமையும். வேலை ரீதியாக உங்கள் போட்டியாளர்களை ஈர்க்க வேண்டும், ஆர்வமும், அனுபவமும் நிறைந்து பொங்கும் வருடமாக அமையும். வெற்றியை அதிகம் சுவைப்பீர்கள்.

குறிப்பு!

சிறந்த காலம் என்பதை தாண்டி, இந்த வருடம் ஆரோக்கியத்தின் மீது நீங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனைகள் செய்துக் கொள்வது நல்லது.

எட்டு!

எட்டு!

எட்டு அல்லது பிறந்த நாளின் கூட்டுத்தொகை எட்டில் முடியும் பிறந்தநாள் கொண்டவர்களுக்கு...

தேதி: 8, 17, 26.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவ்வருடம், திடீர் திடுப்பங்கள், சரிவுகள், போராட்டங்களை ஏற்படுத்தும். கடுமையான முயற்சி மட்டுமே உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். மன அழுத்தம் ஏற்படலாம். புதியதாக தொழில் தொடங்கும் போது சில இழப்புகள் ஏற்படலாம். பொருளாதாரத்தில் கவனமாக இருங்கள்.

குறிப்பு!

அபாயமான முயற்சிகள் எடுக்க வேண்டாம். உறவினர்கள் மீது அக்கறை செலுத்துங்கள். ஆரோக்கியம் சார்ந்து கவனமாக இருக்க தவற வேண்டாம்.

ஒன்பது!

ஒன்பது!

ஒன்பது அல்லது பிறந்த நாளின் கூட்டுத்தொகை ஒன்பதில் முடியும் பிறந்தநாள் கொண்டவர்களுக்கு...

தேதி: 9, 18, 27.

இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இவ்வருடம், தொழில் ரீதியாக சிறந்த வருடமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இவ்வருடம் உங்களுக்கு லக் அதிகமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

 

English summary

2017 Future Predictions based on your date of birth

2017 Future Predictions based on your date of birth
Subscribe Newsletter