ஏன் ஆட்டோக்காரர்கள் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து வண்டி ஓட்டுகிறார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நாம் தினமும் கடந்து வரும், பார்த்து வரும் ஒரு சில காரியங்கள், ஏன் இப்படி நடக்கிறது, சில மக்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்ற கேள்வி மனதில் எழ காரணமாக இருக்கும். ஆனால், வேலை அவசரத்தின் காரணமாகவும், இதை ஆய்வு செய்து என்ன செய்ய போகிறோம் என்ற போக்கிலும், நாம் அதன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள மாட்டோம்.

அந்த விஷயங்களில் ஒன்று தான் ஆட்டோ ஓட்டுனர்கள், வண்டியின் ஓரத்தில் அமர்ந்து ஓட்டும் பழக்கமும். ஆம், நீங்கள் பல சமயங்களில் ஆட்டோவில் சவாரி செய்யும் போது இதை கண்டிருக்கலாம். ஆனால், ஏன் இப்படி இவர்கள் வண்டி ஓட்டுகிறார்கள் என நாம் யோசித்தது இல்லை.

இதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன என ஆட்டோ ஓட்டுனர்களே கூறுகின்றனர்....

Cover Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றுக்கொள்ளும் தருணம்!

கற்றுக்கொள்ளும் தருணம்!

பொதுவாக பல ஆட்டோ ஓட்டுனர்கள் கூறும் காரணம். ஆட்டோ ஓட்ட கற்றுக்கொள்ளும் போது உடன் ஒரு நபர் அமர்ந்திருப்பார். இதன் காரணத்தால் ஆரம்பத்தில் இருந்தே ஒரு ஓரமாக இருந்து ஓட்டுவது பழகிவிடுகிறது என கூறுகின்றனர்.

ஆட்டோ இன்ஜின்!

ஆட்டோ இன்ஜின்!

பழைய வகை ஆட்டோக்களில் இன்ஜின் இருக்கையின் கேளே தான் இருக்கும். அதனால் உண்டாகும் சூட்டை தவிர்க்கவும் ஓட்டுனர்கள் ஓரத்தில் அமர்ந்து வண்டி ஓட்டுகிறார்கள்.

பயணிகள்!

பயணிகள்!

சில ஆட்டோக்காரர்கள், முன் இருக்கையிலும் பயணம் செய்பவர்களை வைத்து ஆட்டோ ஓட்டுவார்கள். ஷேர் ஆட்டோக்களில் இது அதிகம். எனவே, இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

ஹாரன்!

ஹாரன்!

பழைய ஆட்டோக்களில் ஹாரன் வண்டியின் ஓரத்தில் தான் இருக்கும். எனவே, அவசர சமயத்தில் சில சமயங்களில் ஹாரனை எளிதாக அழுத்த முடியாது. இதன் காரணமாகவும் சில ஆட்டோ ஓட்டுனர்கள் வண்டியின் ஓரத்தில் அமர்ந்து ஓட்டுகிறார்கள்.

பேசுவது!

பேசுவது!

இது சற்று வேடிக்கையாக தான் இருக்கும். ஆனால், நீங்கள் பல சமயங்களில் கண்முன்னே பார்த்திருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆம், உடன் அருகே ஆட்டோ ஓட்டிவரும் ஓட்டுனருடன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

இதுப்போன்ற சில காரணத்தால் தான் ஆட்டோ ஓட்டுனர்களில் பலர் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து வண்டி ஓட்டுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why Do Most Auto Rickshaw Drivers Sit On The Edge

Why Do Most Auto Rickshaw Drivers Sit On The Edge, reasons are here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter