Latest Updates
-
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
நீங்க பிறந்த கிழமைய சொல்லுங்க... உங்கள பத்தி நாங்க சொல்றோம்...
எப்படி நீங்கள் பிறந்த நேரம், பிறந்த நாள் உங்களைப் பற்றி சொல்கிறதோ, அதேப்போல் நீங்கள் பிறந்த கிழமையும் உங்களது குணங்களைப் பற்றி சொல்லும். ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் உள்ளன. இந்த ஏழு நாட்களும் ஒவ்வொரு குணங்களைக் குறிக்கிறது.
நீங்கள் பிறந்த தமிழ் மாதம் உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என தெரிந்து கொள்ள வேண்டுமா?
இப்போது நாம் எந்த கிழமையில் பிறந்தவர்கள், எம்மாதிரியான குணத்தைக் கொண்டவர்களாக இருப்பர் என்று பார்ப்போம். உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

ஞாயிற்று கிழமை
ஞாயிற்று கிழமைகளில் பிறந்தவர்கள் எந்த ஒரு கடினமான வேலைகளையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய திறமை கொண்டவர்களாக இருப்பர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் சொன்னதை செய்வார்கள். மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள்.
உதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள்.

திங்கட்கிழமை
திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் அனைவரும் விரும்பும் படியான அமைதியான மனம் படைந்தவர்களாக இருப்பர். அனைவரிடமும் அன்புடனும், உதவும் உள்ளத்துடனும் பழகுவார்கள். எதிரிகளை கூட நண்பர்களாகவே கருதுவார்கள். நல்ல கற்பனைவளம் கொண்டவர்களாக இருப்பர்.
இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு சொந்த தொழில் நல்ல கைக்கொடுக்கும். இவர்கள் வெற்றி பெறுவதற்காக அரும்பாடுபடுவார்கள்.

செவ்வாய் கிழமை
செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் எதிலும் வெற்றியைக் காண்பவர்கள். தான் சொல்வது தான் சரி என்னும் மனப்போக்கை கொண்டவர்கள். இவர்கள் நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்கு கெட்டவராகவும் இருப்பார்கள். இதனாலேயே இவர்களை பலருக்கு பிடிக்காது.
இருப்பினும் இவர்களுக்கு மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலையில்லை. எதிலும் நியாய தர்மத்துடன் நடந்து கொள்வார்கள்.

புதன் கிழமை
புதன் கிழமைகளில் பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பர். பல திறமைகளை தன்னுள் கொண்டவர்களாகவும் விளங்குவர். இவரிடம் ஒரு ரகசியத்தைக் கூறினால், அதை வாழ்நாள் முழுவதும் காப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.
எதையும் எளிதில் புரிந்து கொண்டு வேலையை சிறப்பாக முடிப்பார்கள். எந்நேரமும் ரிலாக்ஸாக இருப்பார்கள்.

வியாழக்கிழமை
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் மற்றவர்கள் போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்களாக இருப்பர். எதையும் நேர்வழியில் செய்யக் கூடியவர்கள். நியாயம், தர்மத்துடன் நடப்பார்கள். உற்றார் உறவினர்களுக்கு உதவி புரிவார்கள். எந்த துறையிலும் வெற்றி காண்பார்கள்.

வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் நல்ல பேச்சாற்றல்மிக்கவர்களாக இருப்பர். தன் பேச்சாலேயே பலரை தன்வசப்படுத்திக் கொள்வார்கள். எந்த ஒரு வேலையையும் மற்றவர்களின் உதவியின்றி எளிதில் முடிக்கும் திறமை கொண்டவர்களாக இருப்பர்.

சனிக்கிழமை
சனிக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமைசாலிகள் மற்றும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பவர். இந்த கிழமையில் பிறந்தவர்கள் ஸ்மார்ட்டாகவும், மிகவும் நம்பிக்கையுள்ளவர்களாகவும், முழு பொறுப்பையும் ஏற்று நடத்துவதில் சிறந்தவர்களாகவும் இருப்பர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார்கள்.



Click it and Unblock the Notifications
