Latest Updates
-
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும்
இந்தியாவில் வாழ்ந்த இரத்தக்காட்டேரிகள், ஆதாரங்கள்!
இந்தியாவில் தான் இரத்தக்காட்டேரிகள் தோன்றின என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், இது குறித்த சில ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பழைய இந்திய நிலப்பரப்பில் இருந்து தான் இரத்தக்காட்டேரி வகையிலான உயிரினங்கள் ரோமானியா, ரஷ்யா மற்றும் பல இடங்களுக்கு பரவியதாக கருதப்படுகிறது.
பேய் நகரங்கள் என்றழைக்கப்படும் இந்தியாவின் திகிலான இடங்கள்!!
உலகின் முதல் இரத்தக்காட்டேரி உயிரினங்கள் திபெத், சீனா வழியாக தான் பரவின என்றும் சிலர் கூறுகிறார்கள். மேலும், இவ்வாறு தான் மேற்கத்திய நாடுகளுக்கு இரத்தக்காட்டேரிகள் பரவின என்று கூறப்படுகிறது.
பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய வேடிக்கையான 10 தகவல்கள்!!!
இந்த விஞ்ஞான உலகில் இதை எல்லாமா நம்புவது எனிலும், உலகின் பெரும்பாலான கலாச்சாரங்களில் இரத்தம் குடிக்கும் உயிரினங்கள் பற்றிய குறிப்புகள் அவர்களது புராண கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. நமது இந்திய புராண கதைகளிலும் இதுப் போன்ற குறிப்புக்கள் இருக்கின்றன.
மக்கள் இறந்த பிறகு பேயாவதற்கான சில காரணங்கள்!!!
இதன் அடிப்படையில் இந்தியாவில் இரத்தக்காட்டேரிகள் இருந்தது என கூறப்படும் விடயங்கள் குறித்து இனிக் காணலாம்...

நாடோடி பாடல்கள்
நமது இந்தியாவில் இரத்தக்காட்டேரிகள் இருந்தன என்பதற்கான ஆதாரங்களாக பல நாடோடி பாடல்களும், கதைகளும் இருக்கின்றன. மேலும், இரத்தக்காட்டேரிகளில் பல வகைகள் இருந்ததற்கான கூற்றுகளும், கதைகளும் கூட இருக்கின்றன.

வேதாளம்
வேதாளம் என்பது ஓர் பெண் இரத்தக்காட்டேரி எனக் கூறப்படுகிறது. இந்து புராணங்களில் மனித உடலுக்குள் மிருக குணம் அல்லது சக்தி குடியேறும் போது அவை இவ்வாறு மாறுகின்றன என கூறப்படுகிறது.

வேதாளம்
இந்தியாவில் தோன்றியதாக கருதப்படும் இரத்தக்காட்டேரிகளில் வேதாளங்கள் தான் மிகவும் பிரபலமானவை எனவும், இவை குழந்தைகளை கொல்வதையும், கருச்சிதைவுகள் ஏற்படுத்துவதையும், மனிதர்களுக்கு பைத்தியம் பிடிக்க வைக்கவும் செய்யும் என்ற கூற்றுகள் பழங்காலத்தில் கூறப்பட்டுள்ளன.

ராட்சசன்
ராட்சசன் எனும் வார்த்தை சமஸ்கிருத மொழியில் இருந்து வந்த சொல். இதன் பொருள் பேய் அல்லது துர்தேவதை ஆகும். இந்திய புராணங்களில் இவை இரத்தக்காட்டேரி வகையை போன்ற ஓர் உயிரினம் என்பது போல கூறப்பட்டுள்ளது.

ராட்சசன்
ராட்சச உயிரினங்கள் தீங்கு விளைவிக்கும் மற்றும் கொடிய செயல்களை செய்ய முனையும் என்றும். இவைகளுக்கு என தனி தெய்வீக வழிப்பாடு இருக்கிறது மற்றும் இவை இலங்கையில் வாழ்ந்தவை என்றும் நம்பப்படுகிறது.

பிசாசு
பிசாசு என்பது மனித இறைச்சியை உண்ணும் மற்றொரு வகை இரத்தக்காட்டேரி வகை என கூறப்படுகிறது. பொதுவாக இது பெண்மை குணம் கொண்டவை என்றும் கூறப்படுகிறது. இவைகளின் கண்கள் மிகவும் சிவந்தும், நரம்புகள் புடைத்தும் இருக்கும்.

பிசாசு
பிசாசு பொதுவாக இரவு நேரங்களில் தான் வெளிவரும் என பல கதைகளில் கூறப்பட்டிருக்கிறது. பிசாசுகள் கண்ணுக்கு தெரியாமல் மறையும் தன்மை கொண்டவை எனவும், கூடு விட்டு கூடு பாயவும் செய்யும் எனவும் இந்தியாவில் நம்பப்பட்டு வந்தது.

பிசாசு
மேலும், பிசாசுகளை நேரில் கண்டவர்கள் ஒன்பது மாதத்திற்குள் இறந்துவிடுவார்கள் என்ற ஒரு நம்பிக்கையும் முன்பு இருந்துள்ளது.

வேதாளங்கள்
இறந்த பிறகும் உலாவி வரும் தீய ஆவிகளை வேதாளங்கள் என கூறப்படுவது உண்டு. விக்கிரமாதித்தன் போன்ற கதைகளில் தான் இந்த வகை வேதாளங்கள் பற்றி நிறைய கூறப்பட்டுள்ளன.

உலக புராணங்கள்
உலகளவில் அனைத்து கலாச்சார புராணங்களிலும் இரத்தம் உண்ணும் உயிரினங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. பகுதிகளுக்கு ஏற்றவாறு அதன் பெயர், குணாதிசயங்களில் சில வேறுபாடுகள் இருப்பினும் பொதுவாக அவை மிருக குணம் கொண்டவையாக உருவகுக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications
