Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
உலக கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வுகள்!!!
ஹாக்கி தேசிய விளையாட்டு என்ற போதிலும் கூட இந்தியாவில் கிரிக்கெட் மீதான மோகம் தான் அதிகம். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது 1983-ம் ஆண்டு கைப்பற்றிய உலக கோப்பை. உலக கோப்பை போட்டிகள் எனது இந்திய ரசிகர்களுக்கு ஓர் திருவிழாவை போல, அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் என அனைவரையும் கட்டிப்போடும் தன்மை கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்கு இருக்கின்றனது.
அப்படிப்பட்ட கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் மறக்க முடியாத சம்பவங்களாக இருக்கும் சில நிகழ்வுகள் பற்றி இனிக் காணலாம்....

சச்சினின் ரன் அவுட்
1996-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியின் போது சச்சின் ரன் அவுட் ஆனார். சீட்டுக் கட்டில் இருந்து ஒரு கார்டை உருவினால் மடமடவென எல்லாம் கீழ விழுவது போல சச்சின் அவுட் ஆன பின்னர் அனைத்து விக்கெட்டுகளும் சரிய ஆரம்பித்தன. இரசிகர்களின் எல்லை மீறிய செயலினால் ஆட்டம் இரத்து செய்யப்பட்டு இலங்கை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கபில் தேவின் கேட்ச்
1983-ம் ஆண்டு ஏறத்தாழ 50 அடி தூரம் பின்னோக்கி ஓடி விவ் ரிச்சர்ட்ஸ்-ன் கேட்ச்சை பிடித்தார். இந்த கேட்ச் தான் இந்தியா உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.

ஸ்டீவ் வாக் கேட்ச் மிஸ்
1999-ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தின் போது ஸ்டீவ் வாக் கொடுத்த அருமையான கேட்ச்சை கிப்ஸ் நழுவவிட்டார். இதன் காரணமாக ஸ்டீவ் சதமடித்து ஆஸ்திரேலியா அந்த போட்டியில் வெற்றி பெற்றது.

ஒரு ரன்னில் தோல்வி
1987-ம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இதை யாராலும் மறக்க முடியாது.

ஜாவேத் மியாண்டட் கங்காரு போல குதித்தது
1992-ம் ஆண்டு ஜாவேத் மியாண்டட் இந்தியாவிடம் தோல்வி அடைந்த போட்டியின் போது, நடுவே கிரண் மோரேவை எதிர்நோக்கி கங்காரு போல குதித்து கேலி செய்த சம்பவம்.

தோனியின் சிக்ஸ்
2011-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியின் போது தோனி அடித்த அந்த கடைசி சிக்ஸ் இந்திய ரசிகர்களின் மனதில் இருந்து என்றும் நீங்காது.

ஜாண்டி ரோட்ஸ் டைவ்
1992-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இன்சமாமை ரன் அவுட் செய்ய ஓடி வந்து பாய்ந்து ஸ்டம்ப்பை தகர்த்த சம்பவம் கிரிக்கெட் இரசிகர்கள் வியக்க வைத்தது. இன்றளவும் அப்படி ஒரு ரன் அவுட் யாரும் செய்யவில்லை.



Click it and Unblock the Notifications