உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா பற்றிய சில உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா என்னும் கட்டிடம் உலகின் மிகவும் உயரமான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில் சுமார் 163 மாடிகளைக் கொண்டது. இத்தகைய புர்ஜ் கலிஃபா ஈஃபிள் டவரை விட மூன்று மடங்கு உயரமானது, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2 மடங்கு உயரமானது.

இந்த கட்டிடம் 2010 ஆம் ஆண்டு தான் கட்டி முடிக்கப்பட்டது மற்றும் இதன் உயரத்தால் இது ஏராளமான உலக சாதனைகளைப் படைத்துள்ளது. இப்போது இந்த புர்ஜ் கலிஃபா பற்றிய சில உண்மைகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் தளங்கள் அதிகமாக இருப்பதோடு, இங்குள்ள எஸ்கலேட்டர் படிகள் ஒரு நொடிக்கு 10 மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் மிகவும் நீளமாக இருக்கும். மேலும் இங்குள்ள உயர்த்திகள் தான் உலகிலேயே நீளமானது.

உண்மை #2

உண்மை #2

இந்த கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை புர்ஜ் துபாய் என்ற அழைக்கப்பட்டது. ஆனால் துபாயின் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் சரிசெய்ததன் நன்றிக்கடனாக 'புர்ஜ் கலிஃபா' என்று பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.

உண்மை #3

உண்மை #3

புர்ஜ் கலிஃபாவின் 100 ஆவது மாடியை பெங்களூரைச் சேர்ந்தவரும், 1970-களில் அபுதாபிக்கு வந்து தற்போது மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் பி.ஆர். ஷெட்டி வாங்கியுள்ளார்.

உண்மை #4

உண்மை #4

இந்த கட்டிடத்தைக் கட்டுவதற்கு உதவியவர்களுள் பெரும்பாலானோர் இந்தியர்கள் தான்.

உண்மை #5

உண்மை #5

இந்த புர்ஜ் கலிஃபாவின் கட்டிடச் செலவு 1.5 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பீட்டின் படி இது நாம் நினைப்பதை விட பல மடங்கு அதிகமானது. மேலும் தினமும் இந்த கட்டிடத்திற்கு 250,000 காலன்கள் நீர் மற்றும் மின்சாரம் தொடர்ச்சியாக அன்றாட தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Truths about the Tallest Tower in the World

Here are some truths about the tallest tower in the world. Read on to know more...
Story first published: Tuesday, October 18, 2016, 16:15 [IST]
Subscribe Newsletter