Latest Updates
-
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சிந்து சமவெளி நாகரீகத்தை பற்றி பலரும் அறியாத தகவல்கள்!
பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழே இந்தியா இருந்த போது, சார்ல்ஸ் (Charless massan) என்ற அதிகாரி பிரிட்டிஷ் அரசின் கீழ் பணிபுரிந்து வந்தார். வேலையில் அலுப்பு ஏற்படவே அவர் தனது வேலையை 1826-ம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு, ஆப்கானிஸ்தான்- பலூசிஸ்தான் பகுதியில் மலையேற்ற பயணத்தை துவங்கினார்.
தற்போதைய பாகிஸ்தானில் ஓடி கொண்டிருக்கும் சிந்து நதியின் ஓர் கிளை நதியான ரவி எனும் நதியின் இடது புறமாக சார்லஸ் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது பாழடைந்த ஓர் நகரினை கண்ணுற்றார்.
பெண்கள் மேலாடை அணிய தடைவிதிக்கப்பட்ட சாதியக் கொடுமை - கருப்பு வரலாறு!!
மேலும், அவரது குறிப்பேட்டில் ஹரப்பா என்ற பகுதியில் அவர் கண்டாய் அழிந்து போன செங்கல் கோட்டையை கண்டதாக குறிப்பும் எழுதி வைத்தார். இந்த தகவல் தான் ஹரப்பா பற்றிய முதல் தகவல் ஆகும்.
இனி, சிந்து சமவெளி ஆராய்ச்சிகள் எப்படி விரிவடைந்தது, யார் யார் ஆய்வுகள் மேற்கொண்டனர், என்னென்ன கண்டறிந்தனர் போன்ற வரலாற்று தகவல்கள் குறித்து காணலாம்...
மனித வரலாற்றில் மர்மம் விலகாமல் நீடிக்கும் தற்செயலாக நடந்த சில சுவாரஸ்யங்கள்!

அலக்சாண்டர் பர்ன்ஸ்
பிறகு 1833-ம் ஆண்டு மற்றொரு ஆய்வாளரான சார் அலக்சாண்டர் பர்ன்ஸ் என்பவர் இந்த பகுதியில் ஆய்வுக்கு சென்றார். இந்த பகுதி அழிவு நிலை அடைந்ததற்கு காரணம் அரசர்கள் செய்த கொடும் செயல்களுக்கு கடவுள் தந்த தண்டனை என அப்பகுதி மக்கள் கூறினர் என பதிவு செய்திருந்தார்.

பிரான்டன் சகோதரர்கள்
1850-ல் ஸ்காட்லாந்து பொறியியலாளர் பிரான்டன் சகோதரர்கள் (ஜான் மற்றும் ராபர்ட் பிரான்டன்) கராச்சி மற்றும் லாகூர் பகுதிகளுக்கு இடையே ரயில் தடங்கள் உருவாக்கும் பணியில் அப்பகுதியில் முகாமிட்டிருந்தார்கள்.

பிரான்டன் சகோதரர்கள்
தொழிலாளர்கள் ரயில் பாதை அமைப்பு வேலைகளுக்காக ஹரப்பா பகுதியில் இருந்து செங்கற்களை அதிகமாக பயன்படுத்துவதை பிரான்டன் சகோதரர்கள் கவனித்தனர். அந்த கற்கள் மிகும் பழமையானவை என ஆய்வின் மூலம் கண்டறிந்த இவர்கள் அவற்றை தவிர்த்தனர்.

பிரான்டன் சகோதரர்கள்
பிரான்டன் சகோதரர்கள் அனுப்பிய தகவல் அறிக்கையை வைத்து. புதியதாக ஆரம்பிக்கப்பட்ட இந்திய தொல்பொருள் ஆய்வு துறை அதிகாரியான அலக்சாண்டர் (Alexander Cunningam) 1850-ல் இந்த பகுதியை தொல்பொருள் ஆராய்ச்சி பகுதியாக பிரகடனம் செய்தார்.

எருது சின்னம்
பிறகு 1870-ல் ஓய்வு பெற்ற பிறகு இவர், இப்பகுதியில் ஆய்வுககளை துரிதமாக துவங்கினார். மேலும், இந்திய தொல்பொருள் ஆய்வு துறை இவரது ஆய்வு தகவல்கள் வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில், ஹரப்பாவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிலவற்றில் வியப்பை ஏற்படுத்தும் வகையிலான எருது மீதி ஆறு புரியாத எழுத்து / இலட்சினை இருப்பது போன்ற முத்திரைகள் இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர்.பண்டார்கர்
1911-ம் ஆண்டு டாக்டர்.பண்டார்கர் என்பவர் ஹரப்பாவில் இருந்து தென்மேற்கு பகுதியில் 400 மைல்கள் தள்ளி இறந்தவர்கள் புதைக்கப்பட்ட குன்றுகள் இருப்பதை ஆய்வு செய்தார். அந்த பகுதி பிறகு மொகஞ்சதாரோ என அறியப்பட்டது.

சார் ஜான் மார்ஷல்
பிறகு 1923-34 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் சார் ஜான் மார்ஷல் என்பவர் சிந்து சமவெளி நாகரீகம் எனும் வார்த்தையை பயன்படுத்த துவங்கினார். சிந்து நதியில் இருந்து ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய பகுதிகளை வரை சிந்து சமவெளி நாகரீக பகுதியாக இவர் குறிப்பிட்டார்.

சுமேரிய நாகரீகம்
வரலாற்று தொல்பொருள் ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் சிந்து சமவெளி நாகரீகமானது 4000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு 2600 - 1600 ஆண்டுகளில் நிலைத்திருந்து இருக்கலாம் என கருதுகின்றனர். இதே காலக்கட்டத்தில் தான் எகிப்தின் சுமேரிய நாகரீகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்து சமவெளி மக்கள்
சிந்து சமவெளியில் வாழ்ந்த மக்கள் அப்போதே பார்லி, கோதுமை, எள்ளு மற்றும் தானிய உணவுகளை பயிர் செய்து உண்டு வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அவர்கள், வீடுகள் கட்ட செங்கற்கள், காற்றோட்டத்திற்காக ஜன்னல்கள், குடிக்க நீர் சேமிக்க கிணறுகள் வெட்டி முழுமையான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

சிறந்த நாகரீகம்
சுமேரிய நாகரீகத்தை காட்டிலும், சிந்து சமவெளி நாகரீகம் மேம்பட்டு, சிறந்து விளங்கி இருந்திருக்கிறது என டாக்டர். மேக்கே எனும் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். சாலைகள் முதற்கொண்டு சிந்து சமவெளி நாகரீகத்தில் வாழ்ந்த மக்கள் அமைத்து நகரமைப்புடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

புரியாத புதிர்
இவ்வளவு பெரும் நாகரீகத்துடன் வாழ்ந்த அந்த பகுதியில் என்ன ஆயிற்று, எங்கு வாழ்ந்த மக்கள் எங்கு சென்றனர். இயற்கை சீற்றங்களினால் அல்லது வறட்சியால் அவர்கள் அழிந்தோ, இடம்பெயர்ந்து போய்விட்டார்களா என்ற விடை தெரியாத புதிர் நீடித்து வருகிறது.

அனுமானம்
சிந்து சமவெளி நதி நீரோட்டத்தில் இயற்கை சீற்றத்தால் உண்டான தடையால், அந்த நதியின் பாதை வேறுபக்கம் திசை திரும்பி, விவசாயம் பாதிக்கப்பட்டு. நீர் நிலங்கள் வறண்டு, பசி பட்டினி காரணத்தால் சிந்து சமவெளி நாகரீக மக்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனரா என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



Click it and Unblock the Notifications