Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பிரேமம் செலின் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!!
பிரேமம் திரைப்படம் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்புப் பெற்றது. சென்னையில் சென்ற ஆண்டு 200 நாட்களை கடந்து ஓடியே ஒரே படம் இதுவாக தான் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்து சாய் பல்லவி மற்றும் கேரளத்து மடோனா செபாஸ்டியனும் கூட. தமிழ் பெண் சாய் பல்லவி கேரளா இளைஞர்கள் மத்தியிலும், கேரளத்து பெண் மடோனா செபாஸ்டியன் தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றனர்.
பலரும் அறியாத சில்க் ஸ்மிதா எனும் கவர்ச்சி கன்னியின் கண்ணீர் பக்கங்கள்!!
அதிலும் மடோனா செபாஸ்டியன் மெல்ல, மெல்ல சாய் பல்லவியை தாண்டி தமிழ் இளைஞர் மத்தியில் இடம் பிடித்தார். மடோனா செபாஸ்டியன் ஓர் அழகான நடிகை என்ற எண்ணம் கொண்டிருந்தால் இப்போதே மாற்றிக் கொள்ளுங்கள், அவர் அதைவிட அழகான பாடகி ஆவார். சொந்தமாக ஓர் இசை குழுவையும் தனது நண்பருடன் சேர்ந்து நடத்தி வருகிறார்.
ஆர்.ஜே. பாலாஜி பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்!!
இனி, பிரேமம் திரைப்பட புகழ் செலின் என்கிற மடோனா செபாஸ்டியன் பற்றி பலரும் அறியாத தகவல்கள் பற்றி காணலாம்...

பிறப்பும், படிப்பும்
செலின் என்கிற மடோனா செபாஸ்டியன் பிறந்தது எர்ணாகுளத்தில். இவர் பெங்களூரில் இவரது பட்டப்படிப்பை முடித்தார். இவர் பி.காம் பட்டதாரி ஆவார்.

இசை
நடிப்பு மட்டுமின்றி, இவர் ஓர் நல்ல பாடகியும் ஆவார். மற்றும் இவருக்கு இசை மீது சீரிய ஆர்வமும் உள்ளது. கர்நாடக மற்றும் மேற்கத்திய இசையை இவர் முறைப்படி கற்று தேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகியாக பிரபலம்
இவர் மலையாள இசை நிகழ்ச்சியான மியூசிக் மோஜோ ( Music Mojo) எனும் நிகழ்ச்சியில் பாடி வந்தார். இதன் மூலம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.

பாடகி டூ நடிகை
இதனை தொடர்ந்து சூர்யா டிவியில் ஓர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார், அப்போது இவரை டிவியில் கண்ட பிரேமம் திரைப்பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இவரை நடிப்பு தேர்வுக்கு அழைத்து, நடிகையாகவும் தேர்வு செய்தார் என கூறப்படுகிறது.

நடிப்பில் ஆர்வம் குறைவு
நடிப்பில் ஆர்வம் குறைவாக இருப்பினும் கூட இவர் தேர்வு செய்யப்பட்டார். முதலில் இவர் தான் பிரேமம் திரைப்படத்தில் மேரி கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்ததாம். பிறகு செலின் பாத்திரம் ஏற்று நடித்தார் என கூறப்படுகிறது.

இசை பயணம்
இவர் தீபக் தேவ் மற்றும் கோபி சுந்தர் போன்ற இசையமைப்பாளர்களிடம் பாடல்கள் பாடியுள்ளார். சிறு வயது முதலே இவருக்கு இசையில் ஆர்வம் அதிகம். "யூ டூ ப்ரூட்டஸ்" (You Too Brutus) என்ற படத்தில் "Raavukali" என்ற பாடலும் பாடியுள்ளார்.

சொந்தமான இசை குழு
ராபி ஆபிரகாம் என்பவருடன் இணைந்து "Everafter" என்ற இசை குழுவை நடத்தி வருகிறார் மடோனா செபாஸ்டியன். இந்த குழுவின் மூலம் திறமையுள்ள புதிய இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளார்.

முதல் ஆன்லைன் பாடல்
இந்தாண்டு ஆரம்பத்தில் இவர்களது முதல் ஆன்லைன் இசையான "Veruthe" வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றது.



Click it and Unblock the Notifications
