Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
வறுமை நீங்கி செல்வம் கொழிக்க, வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டியவைகள்!
மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி உணவு, உடை, இருப்பிடம் அவசியமோ, இன்றைய காலத்தில் அத்துடன் பணமும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. பணம் இல்லாவிட்டால் வாழ்வதே கடினம் என்ற நிலையில் நாம் உள்ளோம். எனவே ஒவ்வொருவரும் பணம் சம்பாதிப்பதற்கு சற்றும் ஓய்வெடுக்காமல் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
வீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து டிப்ஸ்...
நம் நாட்டில் வாஸ்து மீது அலாதியான நம்பிக்கை உள்ளது. அந்த வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டின் வறுமை நீங்கி, செல்வம் கொழிக்க வேண்டுமானால் வீட்டினுள் ஒருசில பொருட்களை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் அவை வீட்டில் செல்வத்தை தங்கவிடாமல் தடுக்குமாம்.
வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்!
இங்கு ஒருவரின் வீட்டில் செல்வம் கொழிக்க வேண்டுமானால் எவற்றையெல்லாம் வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது.

புறா கூடு
வீட்டில் புறா கூடு இருந்தால், அது வீட்டின் வறுமையை அதிகரித்து, உறுதியற்ற நிலையை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் பணம் சேர வேண்டுமானால், உங்கள் வீட்டினுள் இருக்கும் புறா கூட்டினை வெளியேற்றுங்கள்.

தேன் கூடு
வீட்டினுள் தேன் கூடு இருப்பது ஆபத்தானது மட்டுமின்றி, வீட்டில் வறுமை மற்றும் துரதிர்ஷ்டத்தை ஈர்க்கும். உங்கள் வீட்டில் தேன் இருப்பின், உடனே அதனை வெளியேற்றுங்கள்.

சிலந்தி வலை
வீட்டில் சிலந்தி வலை இருப்பது என்பது வாழ்வில் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறியாகும். எனவே வீட்டில் சிலந்து வலையைக் கண்டால், உடனே அதை சுத்தம் செய்துவிடுங்கள்.

உடைந்த கண்ணாடி
வாஸ்து சாஸ்திரப் படி, உடைந்த கண்ணாடிகளை வீட்டில் வைத்திருப்பது என்பது வீட்டில் வறுமையை அதிகரித்து எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதாக கருதப்படுகிறது. ஆகவே உங்கள் வீட்டில் ஏதேனும் உடைந்த கண்ணாடி இருப்பின், அதை பத்திரப்படுத்தாமல் உடனே தூக்கி எறிந்துவிடுங்கள்.

வவ்வால்
வவ்வால் உடல்நல பிரச்சனை, மோசமான சம்பவங்கள், வறுமை அல்லது இறப்பைக் குறிப்பதாக கருதப்படும் ஒன்று. இத்தகைய வவ்வால் வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டினுள் நுழைவது கெட்ட சகுணம். எனவே மாலை நேரத்திற்கு பின் வீட்டின் ஜன்னல் கதவுகளை அடைத்துவிடுங்கள்.

வீட்டு சுவர்களில் விரிசல்
உங்கள் வீட்டின் சுவர்களில் ஏதேனும் பிளவுகள் அல்லது விரிசல்கள் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்யுங்கள். ஏனெனில், இம்மாதிரியான சுவர்கள் வீட்டின் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்திற்கு இடையூறை ஏற்படுத்தி, வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும்.

ஒழுகும் குழாய்
வீட்டினுள் இருக்கும் குழாயில் இருந்து எப்போதும் நீர் வடிந்து கொண்டிருந்தால், அதனால் நீர் மட்டும் வீணாவதில்லை, வீட்டின் நேர்மறை ஆற்றல்களும் வெளியேறிக் கொண்டிருக்கின்றன என்று அர்த்தம். எனவே இம்மாதிரியான குழாய் வீட்டில் இருப்பின் உடனடியாக சரிசெய்யுங்கள்.

மொட்டை மாடி
பலரும் வீட்டின் மொட்டை மாடியின் ஒரு மூலையில் பழைய, உபயோகமில்லாத பொருட்களை வைத்து குப்பை போன்று வைத்திருப்பார்கள். நீங்களும் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் அப்படி வைத்திருந்தால், உடனே அதை அப்புறப்படுத்துங்கள். ஏனெனில் வாஸ்து சாஸ்திரப்படி, அசுத்தமான மொட்டைமாடி, வீட்டின் வறுமையை மேன்மேலும் அதிகரிக்கும்.

காய்ந்த மலர்கள்
பூஜை அறையில் சாமிக்கு பூக்களைக் கொண்டு அலங்கரிப்பது வழக்கம். அப்படி அலங்கரிக்கும் பூக்கள் காய்ந்து பல நாட்களாக பூஜை அறையில் இருப்பது, வீட்டின் செல்வ வளத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே தினமும் தவறாமல் பூஜை அறையை சுத்தம் செய்யுங்கள்.

காய்ந்த இலைகள்
வீட்டினுள் அலங்கார செடிகள் வைத்து வளர்த்து வருபவராயின், தினமும் அதை சூதானமாக கவனித்து பராமரித்து வாருங்கள். ஒருவேளை அந்த செடியின் இலைகள் காய்ந்தால், அதை உடனே அப்புறப்படுத்துங்கள். ஏனெனில் வீட்டினுள் காய்ந்த இலைகள் இருந்தால், அது எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்து, நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications