எழும்பூர் எப்படி எக்மோர் ஆனது?

Posted By:
Subscribe to Boldsky

கூவத்தின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிங்கார சென்னையின் மிக முக்கியமான பகுதி எழும்பூர். வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கான ஒரு முக்கிய மையமாக விளங்குகிறது எழும்பூர்.

வரலாற்று முதலே எழும்பூராக விளங்கி வந்த இந்த பகுதி எப்படி எக்மோர் ஆனது என சென்னையில் வசிக்கும் சிலரே கூற அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் பின்னணில் ஒரு சுவாரசியமான காரணம் இருக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதலாம் குலோத்துங்க சோழன்!

முதலாம் குலோத்துங்க சோழன்!

வரலாற்றின் முன் பகுதியில் எழும்பூர் பகுதி சோழ அரசனான முதலாம் குலோத்துங்க சோழனின் கட்டுபாட்டுக்குள் தான் இருந்தது என்ற தகவல்கள் கிடைக்கின்றன.

நிர்வாக நகரம்!

நிர்வாக நகரம்!

முதலாம் குலோத்துங்க சோழனின் கீழ் அமைந்திருந்த அரசின் (நாட்டின்) நிர்வாக தலைமை பீடமாக திகழ்ந்த இடம் எழும்பூர் நாடு என்ற பகுதி. இந்த எழும்பூர் நாடு தான் காலப்போக்கில் எழும்பூர் ஆனது.

நெல்லூர் சோழ கல்வெட்டு!

நெல்லூர் சோழ கல்வெட்டு!

1264-ம் ஆண்டுவாக்கில் நெல்லூர் சோழ அரசர் விஜய கோபால் என்பவர் குறிப்பிட்டுள்ள கல்வெட்டில் எழுமூர் - துடர்முனி நாடு (Elumur-Tudarmuni Nadu) எனும் கிராமம் புழல் கோட்டத்தில் இருந்ததாக அறியப்படுகிறது.

விஜய நகர் காலம்!

விஜய நகர் காலம்!

விஜய நகர காலத்து ஸ்ரீரங்கநாத யாதவராயா கல்வெட்டில், திருவொற்றியூர் இருந்த மடத்திற்கு, எழுமூர் - துடர்முனி நாட்டின், இன்றைய சேத்துப்பட்டு பகுதியில் வசித்து வந்தவர்கள் மானியம் கட்டியதாக அறியவருகிறது.

ஆங்கிலேயர்கள்!

ஆங்கிலேயர்கள்!

1720-ல் இருந்து ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த பகுதிகளில் எழும்பூரும் ஒன்று. அப்போது எழும்பூர் எனும் பெயர் ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு ஏற்ப பெயரை ஆங்கில வழி படுத்தினர். அப்படி வந்த பெயர் தான் எக்மோர்.

பெயர் மாற்றங்கள்!

பெயர் மாற்றங்கள்!

காலம், காலமாக ஓர் காரணம் அல்லது அங்கு வாழ்ந்த பெரும் மனிதர் அல்லது அரசர், தொழில் சார்ந்து தான் அந்தந்த பகுதிகளுக்கு பெயர்கள் வந்துள்ளன.

சில பல காரணங்களால் நாம் அந்த பெயர்களை சுருக்கியோ, ஆங்கிலேயர் வருகைக்கு பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் காரணத்தாலும். ஒரு வரலாற்றை மறந்து வருகிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Ezhumbur Changed as Egmore

How Ezhumbur Changed as Egmore, read here in tamil.
Subscribe Newsletter