உண்ணும் உணவுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சில அருவெறுக்கத்தக்க பொருட்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஹோட்டல் உணவுகள் அசுத்தமானவை மட்டுமின்றி, ஆரோக்கியமற்றவையும் கூட என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அந்த உணவுகளின் சுவைக்கு நிறைய பேர் அடிமையாகியுள்ளனர். இதனால் மாதத்திற்கு ஒரு முறையாவது ஹோட்டல் உணவை சாப்பிடுவோம்.

உலகில் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திர உணவுகள்!

ஆனால், உலகில் சில பகுதிகளில் உள்ள ரெஸ்டாரண்டுகளில் விற்கப்படும் சில உணவுகளில் நமக்கு அருவெறுப்பை ஏற்படுத்தும் வகையிலான சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, எப்படி கேஎஃப்சி சிக்கனில் புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதோ, அதேப் போல் நிறைய உணவுகளில் இதை விட மோசமான பொருட்கள் எல்லாம் சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

யூதர்களின் 6 விந்தையான உணவு சட்டங்கள்!!!

இங்கு அப்படி வெளிநாடுகளில் விற்கப்படும் உணவுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சில அருவெறுக்கத்தக்க பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து இனிமேல் கவனமாக இருங்கள்.

பழங்குடியினரின் விநோதமான உணவுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாலட்டில் மனித விரல் துண்டு

சாலட்டில் மனித விரல் துண்டு

கலிபோர்னியாவில் உள்ள மிகவும் பிரபலமான ரெஸ்டாரண்ட் ஒன்றில், ஒரு பெண்மணி சிக்கன் சாலட்டில் மனித விரலின் முனைப்பகுதி துண்டு இருப்பதைக் கண்டுபிடித்தார். இதுக்குறித்து மேனேஜரிடம் கூறிய போது, அவர் சமைக்கும் போது தெரியாமல் இத்தவறு நடந்துவிட்டதாக கூறி மன்னிப்பு கேட்டார்.

Image Courtesy

தயிரில் விந்தணு

தயிரில் விந்தணு

இந்த செய்தியை படித்தப் பின் இனிமேல் தயிர் சாப்பிடவே பலரும் யோசிப்போம். ஏனெனில் அந்தோனி என்னும் ஒரு நபர், தயிர் மாதிரி என்று கூறி, தன் விந்துவை தயிருடன் சேர்த்து கலந்து, 4 பெண்களுக்கு கொடுத்துள்ளார்.

Image Courtesy

உணவில் மீன் கொக்கி

உணவில் மீன் கொக்கி

நியூயார்க்கில் ஒரு பெண் தன் துணையுடன் அருகில் இருந்த இத்தாலியன் ரெஸ்டாரண்ட்டில் மீனை ஆர்டர் செய்து சாப்பிடும் போது, அதில் இருந்த மீன் கொக்கி அவரது நாக்கை கிழிந்துவிட்டது. இதுக்குறித்து அந்த பெண் இந்த ரெஸ்டாரண்ட் மீது வழக்கு தொடர்ந்து நஸ்டஈடு கேட்டார்.

Image Courtesy

குழந்தைகளின் உணவில் எலியின் பாதம்

குழந்தைகளின் உணவில் எலியின் பாதம்

நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் குழந்தைக்கு சாசேஜ் கொடுக்க வாங்கினார். அதை குழந்தைக்கு கொடுக்கும் போது, அதில் வித்தியாசமான ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தார். பார்ப்பதற்கு அது எலியின் பாதம் போன்று இருந்தது. உடனே அப்பெண் அந்த சூப்பர் மார்கெட்டிற்கு போன் செய்து நஷ்ட ஈடு கேட்டதோடு, அந்த சாசேஜ் கம்பெனியின் மீது வழக்கும் தொடர்ந்தார்.

Image Courtesy

சைனீஸ் பஃபெட்டில் முழு எலி

சைனீஸ் பஃபெட்டில் முழு எலி

சைனீஸ் பஃபெட் ஒன்றில் ஒரு பெண் உணவில் நீளமாக வால் போன்று ஏதோ ஒன்று இருப்பதை அறிந்து, அதை எடுக்கும் போது ஒரு முழு எலியே வந்தது. இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பெண் கூச்சலிட்டு, இந்த ரெஸ்டாரண்ட்டையே ஒரு வழி செய்துவிட்டார்.

Image Courtesy

சாண்விட்ச்சில் அந்தரங்க முடி

சாண்விட்ச்சில் அந்தரங்க முடி

போலீஸை பழி வாங்க நினைத்த ரேயன் என்னும் நபர், போலீஸிற்கு சாண்விட்ச்சில் தனது அந்தரங்க முடியை சிறிது தூவி, அதன் மேலே சீஸ் போன்ற டாப்பிங்ஸ் சேர்த்து கொடுத்தார். மேலும் இதை ரேயன் அந்த போலீஸ் உட்கொள்ளும் வரை பார்த்துக் கொண்டிருக்க, பின் இதை அறிந்த போலீஸ் உடனே கைது செய்தார்.

Image Courtesy

பீன்ஸ் கேனில் பாம்பின் தலை

பீன்ஸ் கேனில் பாம்பின் தலை

வெளிநாடுகளில் கேன்களில் ஏராளமான பொருட்கள் விற்கப்படும். அந்த வகையில் பீன்ஸ் கேன் ஒன்றை ஒரு பெண் வாங்கி வந்து, சமைத்தார். அப்போது ஒரே ஒரு பீன்ஸ் மட்டும் கருக ஆரம்பித்தது. உடனே அப்பெண் அது என்னவென்று பார்த்தால், அது பாம்பின் தலை. உடனே கூச்சலிட்டு, அந்த கம்பெனிக்கு போன் செய்து வழக்கு தொடர்ந்தார்.

Image Courtesy

பிரட் பாக்கெட்டில் எலியின் தலை

பிரட் பாக்கெட்டில் எலியின் தலை

ஒரு பெண் பேக்கரி ஒன்றில் பிரட் பாக்கெட் ஒன்றை வாங்கி வந்து, பேக் செய்யும் போது, கருகும் வாசனையைக் கொண்டு என்னவென்று துண்டுகளாக்கிப் பார்த்த போது, அதில் எலியின் தலை இருப்பதை அறிந்து ஆச்சரியமடைந்தார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Disgusting Things Found In Food

Heres a list of nasty things found in food. These are the things that will make you puke. Find out more.
Subscribe Newsletter