இந்த வருடம் காதலர் தினம் கொண்டாட முடியாத நடிகர், நடிகைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

ஏதேனும் ஒரு விஷயத்தை மறக்காமல் இருக்க, நினைவுக் கூர்ந்து கொள்ள ஓர் தினத்தை கொண்டாடுவது தப்பில்லை. ஆனால், வருடத்தில் எல்லா நாட்களும் 24x7 கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பவர்கள் இந்த பிப்ரவரி 14-ம் தேதி மட்டுமே காதலித்துக் கொள்வது போல கோலாகலமாக கொண்டாடுவது பல சிங்கிள் இதயங்களில் இரத்தம் கசிய காரணியாக இருக்கிறது.

பிரபலங்களின் திருமணம் விவாகரத்தில் முடிய காரணங்கள் என்ன??

காதலை வருடம் முழுக்க வெளிப்படுத்த முடியாமல் தவித்தவர்கள் எல்லாம் மனதில் முழு தைரியத்தை கொண்டுவந்து காதலி வெளிபடுத்த முயல்வதும் இந்நாளில் தான். ஆனால், இந்த வருடம் இந்த இளைஞர்களின் கொண்டாட்ட தினத்தன்று காதலை கொண்டாட முடியாமல் சில பிரபலங்கள் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். அவர்களை பற்றி இனிக் காண்போம்...

தன்னை விட வயது அதிகமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட இந்திய பிரபலங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிம்பு

சிம்பு

ஏற்கனவே இரண்டு முறை காதல் முறிவில் இருந்து மீண்டு வந்து மீண்டும் ஹன்ஷிகா கைப்பிடித்தார் சிம்பு. இணையத்தில் இவர்கள் கட்டியணைத்து கொண்ட புகைப்படம் வெளியான பிறகு தான் காதலிக்கிறோம் என்றே ஒப்புக் கொண்டனர். ஆனால், எதிர்பாராத தருணத்தில் இவருடன் காதல் முறிவு ஏற்பட்டு இமயமலை வரை சென்று வந்தார் சிம்பு.

ஹன்சிகா

ஹன்சிகா

சின்ன குஷ்பு என்று புகழாரம் பெற்றவர் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்த போது. மகிழ்ச்சி அடைந்தவர்களை விட, வயிற்றில் புகைச்சல் அடைந்தவர்கள் தான் அதிகம். யார் விட்ட சாபமோ சேர்ந்த வேகத்தில் காரணம் கூறாமல் இவர்கள் பிரிந்திவிட்டனர்.

சித்தார்த்

சித்தார்த்

விழா மேடையில் கூட நாசூக்காக தங்கள் காதல் நாடகத்தை நடத்தியவர்கள் சித்தார்த்தும் சமந்தாவும். இருவரும் ஒன்றாகவே விருது வழங்கும் நிகழ்சிகளுக்கு வந்து சென்றனர். ஏனோ, இவர்களது காதலும் திருமணம் வரை செல்லவில்லை.

சமந்தா

சமந்தா

சமந்து பிள்ளை சமந்தாவிற்கு காதலா என்றவுடன். மனம் உடைந்து போனவர்கள் ஏராளம். இவரது பிரிவில் ஆச்சரியம் என்னவெனில், காதல் பிரிவிற்கு பிறகு தான் சிறப்பாக நடிக்க தொடங்கினார் சமந்தா.

ராணா

ராணா

சென்னைக்கு வந்தால் திரிஷா வீட்டிற்கு செல்ல மட்டும் தான் எனக்கு வழி தெரியும் என மேடையிலேயே கூறியவர் ராணா. வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை என்பதால் இவர்களது காதல் பிரிந்தது என கூறப்பட்டது.

திரிஷா

திரிஷா

ராணாவுடன் காதல் பிரிவு, பிறகு நிச்சயம் செய்து திருமணத்திற்கு முன்பே வருண் மணியனுடன் பிரிவு என திரிஷா தான் பெருமளவில் மனம் நொந்து போனவர். ஆயினும் மீண்டும் திரைப்படங்களில் அதே துடிப்புடன் நடிக்க துவங்கிவிட்டார்.

வருண் மணியன்

வருண் மணியன்

திரிஷாவுடன் நிச்சயம் செய்த நாளில் இருந்து இவர்கள் ஜோடியாக சிறகடித்து பறக்க துவங்கினர். இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என இவர்களது புகைப்படங்கள் சரவெடியாய் வெடித்தன. என்ன நடந்ததோ தெரியவில்லை இவர்களது திருமணம் ரத்து செய்யப்பட்டது.

பிரபாஸ்

பிரபாஸ்

மிர்ச்சியில் அனுஷ்காவுடன் இணைந்து நடித்த போதே இவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது என நிறைய செய்திகள் வெளிவந்தன. இதை தொடர்ந்து இருவரும் பாகுபலியிலும் ஜோடி சேர்ந்தனர்.

அனுஷ்கா

அனுஷ்கா

ஆனால், பாகுபலி முழுமை அடைவதற்குள் இவர்களது காதல் முடிவுக்கு வந்துவிட்டது என செய்திகள் வெளியாகிவிட்டன.

விராத் கோலி

விராத் கோலி

சமீபத்திய காதல் ரத்து ஆக்ரோஷமான விளையாட்டு வீரர் விராத் மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் காதல் பிரிவு. ஏறத்தாழ, உலகம் முழுதும் சுற்றி மகிழ்ந்த ஜோடி இது.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா

விராத் சொதப்பும் போதெல்லாம் அவரைத் தாக்கியதை விட மீடியா, ரசிகர்கள் மிகையாக தாக்கியது இவரை தான். மேலும் அனுஷ்கா திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பது தான் பிரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது

ரன்பீர் கபூர்

ரன்பீர் கபூர்

பாலிவுட்தில் காதல் பிரிவு என்பது வெள்ளிகிழமைகளில் திரைப்படம் வெளியாவதை போல ஆகிவிட்டது. அடிக்கடி காதல் பிரிவுகள் ஏற்படுகின்றன. இதில் ரன்பீர் கத்ரீனா ஜோடியும் சமீபத்தில் இணைந்தன.

கத்ரீனா கைஃப்

கத்ரீனா கைஃப்

இதில் ஆச்சரியம் என்னவெனில், இவர்கள் இருவருக்குமே இது முதல் காதல் பிரிவு அல்ல.

நயன்தாரா

நயன்தாரா

ஏறத்தாழ இருக்கா, இல்லையா, இருக்க ஏதாவது அறிகுறி இருக்கா? என்று ஓடிக் கொண்டிருக்கிறது நயன்தாராவின் புதிய காதல்.

விக்னேஷ்

விக்னேஷ்

"போடா போடி", "நானும் ரவுடி தான்" படங்களின் இயக்குனர் விக்னேஷ்-ம் நயனும் காதலிப்பதாய் செய்திகள் வெளியாகின. ஆனால், ராக்கெட் போல உயர பறப்பார்கள் என்று பார்த்தல், புஷ்வானம் போல ஒரே ஒரு புகைப்படத்திற்கு பிறகு இவர்களை பற்றிய செய்திகள் பெரியதாய் எதுவும் வரவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities Who Cant Celebrate Lovers Day This Year

Celebrities Who Cant Celebrate Lovers Day This Year, take a look.