உங்களுக்கு மிகவும் பிடித்த நிறத்தைக் கொண்டே உங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்!

By: Ashok CR
Subscribe to Boldsky

நிறம் என்பது உயிரோட்டம் நிறைந்தது, குதூகலமானது. நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாகவே திகழ்கிறது. நம் உணர்வுகள், நம் செயல்கள் மற்றும் நம்மை சுற்றியுள்ள பல்வேறு விஷயங்களுக்கு நாம் எப்படி பதில் கொடுக்கிறோம் போன்றவைகளில் நிறத்தின் பங்களிப்பு பெரியளவில் இருக்கலாம்.

உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம்!!!

நிறங்களையும் பற்றியும், அதன் செல்வாக்கை பற்றியும் பல ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்களுக்கு மிக பிடித்த நிறம் உங்களை பற்றி பல விஷயங்களைக் கூறும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நமக்கு பிடித்தது துடிப்பான ஆரஞ்சு நிறமோ அல்லது அமைதியான நீல நிறமோ, நமது குணநலனை புரிந்து கொள்ள மிகப்பெரிய பங்கை நம் நிறத் தேர்வுகள் கொண்டுள்ளது.

பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

உங்களுக்கு பிடித்தமான நிறத்தைப் பற்றி நம் நிறம் வல்லுநர் என்ன கூறுகிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? உங்களைப் பற்றி அவை என்ன தான் சொல்ல போகிறது? வாங்க பார்க்கலாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை

வெள்ளை

தூய்மை, தீங்கின்மை மற்றும் எளிமையை குறிக்கும் வெள்ளை நிறம், இளமை மற்றும் தூய்மையின் மீது திடமான சித்தாந்தங்களை கொண்டுள்ளது. நீங்கள் வயதானவராக இருந்து, உங்களுக்கு வெள்ளை நிறம் பிடித்திருந்தால், நீங்கள் பூர்ணத்துவம் மற்றும் இயலாத கொள்கைகளின் மீது ஆர்வம் கொண்டவராக இருப்பீர்கள். சொல்லப்போனால் தொலைத்த உங்கள் இளமை மற்றும் புத்துணர்ச்சியை கைப்பற்றும் முயற்சியாக இதனை பார்க்கலாம். மேலும் எளிய வாழ்க்கையின் மீதான நாட்டத்தையும் இது குறிக்கும்.

சிகப்பு

சிகப்பு

வலிமை, ஆரோக்கியம் மற்றும் உற்சாகத்தை குறிக்கும் சிகப்பு நிறம் வெளிப்படை, ஆக்கிரமிப்பு, தீவிரம் மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர்களுக்கு பிடித்த நிறமாக இருக்கும். இந்த நிறத்தை விருப்பத் தேர்வாக கொண்டவர்கள் நம்பிக்கை மிகுந்தவர்களாகவும், சலிப்பூட்டுவதை தாங்கி கொள்ள முடியாதவர்களாகவும் இருப்பார்கள். மாறாக, இவர்கள் எல்லாம் அமைதியற்றவர்களாக இருப்பார்களே தவிர சுயபரிசோதனை மேற்கொள்பவர்களாக இருக்கமாட்டார்கள். அதனால் அவர்களுடைய சொந்த குறைபாடுகள் அவர்களுக்கே தெரியாமல் இருக்கும். குறிக்கோளுடன் இருக்க சிரமப்படும் இவர்கள், நடந்த தவறுகளுக்கு அடுத்தவர்களை குறை கூறுபவர்களாக இருப்பார்கள்.

கருஞ்சிவப்பு/மெரூன்

கருஞ்சிவப்பு/மெரூன்

மிக மோசமான அனுபவங்கள் தான் கருஞ்சிவப்பை விருப்பத்தேர்வாக கொண்டவர்களை விரும்பக்கூடியவர்களாகவும், பெருந்தன்மை உள்ளவர்களாகவும் காண்பிக்கும். வாழ்க்கை எனும் அலையில் அடிபட்டாலும் அதை எதிர்கொண்டு வந்தவர்களுக்கு இது மிகவும் பிடித்தமான நிறமாக இருக்கும். நல்ல ஒழுக்கத்துடன் கூடிய குணநலனை கொண்டவர்களான இவர்கள் கடுமையான அனுபவங்களை கடந்து வந்திருப்பார்கள். அதிலிருந்து மீளவில்லை என்றாலும் கூட, இவ்வகையான விஷயங்களில் பக்குவம் அடைந்திருப்பார்கள்.

பிங்க்

பிங்க்

சிகப்பு நிறத்தின் மென்மையான பகுதியை இந்த நிறம் குறிக்கும்; அதாவது பேரார்வம் இல்லாமல் அன்பையும் காதலையும் குறிப்பது. பிங்க் நிறம் பிடித்த பெண்கள் தாய் உள்ளத்துடன் இருப்பார்கள். பாதுகாப்பு, விசேஷமாக நடத்துதல், மற்றும் அடைக்கலம் சார்ந்த வாழ்க்கை ஆகியவற்றை பிங்க் நிறம் விரும்பும். பிங்க் நிறம் பிடித்தவர்கள் அன்பை எதிர்ப்பார்ப்பார்கள். அதே போல் காதலிக்கப்பட வேண்டும் என்றும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் எதிர்ப்பார்ப்பார்கள். தங்களை மென்மையானவர்களாக காட்டிக் கொள்ள அவர்கள் விரும்புவார்கள். மேலும் வசீகரம் மிக்கவராகவும், கனிவான உள்ளம் கொண்டவராகவும் இருப்பார்கள்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

அலங்காரமான மற்றும் குதூகலத்தை விரும்பும் நபராக இருந்து, சமுதாயத்தோடு நெருங்கி பழகுபவர்களுக்கு, ஆடம்பரம் மற்றும் இன்பத்தை குறிக்கும் இந்த நிறம் பிடிக்கும். இவர்கள் சற்று நாடகத்தனமாக இருப்பார்கள். அதனால் இவர்கள் கவனிக்கப்படுவார்கள். ஆனாலும் கூட அவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்களாகவும், புகழ் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். சற்று நிலையற்ற தன்மையுடன், உறுதியின்றி தயங்குபவராக இருந்தாலும் கூட, மொத்தத்தில் பார்க்கையில் அவர்களை ஒத்துக்கொள்ள வைப்பது சற்று கடினமே. இளமை, வலிமை, பயமின்மை, ஆர்வம் மற்றும் அமைதியின்மையை குறிக்கும் ஆரஞ்சு நிறம்.

மஞ்சள்

மஞ்சள்

சந்தோஷம், அறிவு மற்றும் கற்பனைக்கான நிறமான மஞ்சள் நிறத்தை மன ரீதியாக துணிவை கொண்டவர்கள், புதுமை மற்றும் சுய பூர்த்தியை தேடி அலைவார்கள் விரும்புவார்கள். பிரகாசமான மற்றும் சாதுர்யமான குணத்தை கொண்டவர்களுக்கும், நல்ல வணிக தலைமை மற்றும் நகைச்சுவை உணர்வை கொண்டவர்களுக்கும் இந்த நிறம் ஒத்துப்போகும். அறிவு சார்ந்த நிறமானது இந்த நிறம்.

பச்சை

பச்சை

நல்லிணக்கம் மற்றும் சமநிலையின் நிறமான பச்சை நம்பிக்கை, புதுப்பித்தல் மற்றும் அமைதியை குறிக்கும். மென்மையாகவும், உண்மையாகவும் இருப்பவர்களுக்கு இந்த நிறம் பிடிக்கும். பச்சை நிறத்தை பிடிப்பவர்கள் பொதுவாக வெளிப்படையாகவும், சமுதாய சிந்தனையோடும், ஓரளவிற்கு கூடிப்பழகும் இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள். ஆனாலும் கூட அமைதியை தான் விரும்புவார்கள். சுய புறக்கணிப்பு, எளிமை மற்றும் பொறுமைசாலியாகவும் இவர்கள் இருப்பார்கள். அதனால் மற்றவர்களால் மிக எளிதாக சுரண்டப்படுவார்கள். மேலும் இவர்கள் சுத்தரிக்கப்பட்ட எண்ணங்களுடன், நாகரீகமானவர்களாகவும், மரியாதைக்குரியவர்களாகவும் இருப்பார்கள்.

நீலம்

நீலம்

மென்மையான, இதமளிக்கக்கூடிய, இரக்கம் மற்றும் அக்கறை குணங்களை கொண்டுள்ள நீல நிறமானது ஆழ்ந்த சிந்தனை, சுய பரிசோதனை, பழமைவாதம் மற்றும் கடமைக்கான நிறமாகும். பொறுமை, விடா முயற்சி, நேர்மையான, உணர்ச்சிமிக்க மற்றும் சுய கட்டுப்பாடுகளை கொண்டவர்களாக இருப்பார்கள் இந்நிறத்தை விருப்பத் தேர்வாக கொண்டவர்கள். தங்களின் நிலையான குணம் மற்றும் அறிவிற்காக தாங்கள் பாராட்டப்பட வேண்டும் என நினைப்பார்கள். உண்மையுள்ளவர்களாக இருந்தாலும் கூட நெகிழ்வற்ற நம்பிக்கைகளுக்காக கவலை கொள்பவர்களாக இருப்பார்கள். அலங்கார குணம் என்றால் மிகுந்த எச்சரிக்கையுடனும் சந்தேகத்துடனும் இருப்பார்கள்.

நீலம்-பச்சை

நீலம்-பச்சை

வற்புறுத்துதல், தெரிவுமுறை, நிறைநிலை மற்றும் ஈர்க்கும் குணங்களை கொண்ட இந்த நிறத்தை விருப்பத் தேர்வாக கொண்டவர்கள் உணரச்சிமிக்கவர்களாக, அறிவாளியாக, சுத்தரிக்கப்பட்ட எண்ணங்களை கொண்டவர்களாக, விடா முயற்சியுள்ளவர்களாக, நிலையுடன் இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சிறந்த ரசனை இருக்கும். உபசரிக்கக்கூடிய மற்றும் வசீகரிக்கக்கூடிய குணத்தை கொண்ட இவர்கள் பிறருடைய உதவியையோ அல்லது வழிகாட்டலையோ மறுத்து விடுவார்கள்.

கருநீல பச்சை

கருநீல பச்சை

கருநீல பச்சை நிறத்தை தங்கள் விருப்பத் தேர்வாக கொண்டவர்கள் சிக்கலான, கற்பனை வளம் மற்றும் அசல்தன்மையை கொண்டவர்களாக இருப்பார்கள். வெளித்தோற்றத்திற்கு சாந்தமானவர்களாக இருந்தாலும், கொந்தளிப்பான நிலையில் இருப்பார்கள்.

லாவெண்டர்

லாவெண்டர்

உயர்ந்த நிலையில் வாழும் மனிதர்களுக்கு இந்த நிறம் பிடிக்கலாம். இத்தகையானவர்கள் இழிந்த எதையும் காண மாட்டார்கள்; எப்போதும் நேர்த்தியாகவும் அழகாக ஆடை அணிந்தும் காணப்படுவார்கள். பண்பாடு, வாழ்க்கையின் சுத்தரிக்கப்பட்ட விஷயங்கள், உன்னத காரணங்கள் போன்றவைகள் மீது தொடர்ச்சியான தேடலை கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்காக தங்கள் கைகளை அசுத்தமாக்கி கொள்ள மாட்டார்கள். லாவெண்டர் நிறத்தின் மீது விருப்பமுடையவர்கள் படைப்பு திறனுடன், வசீகரிக்கும் வகையில், நகைச்சுவை உணர்வுடன், நாகரீகமாக இருப்பார்கள்.

ஊதா

ஊதா

இந்த நிறத்தை விரும்புபவர்கள் தனித்துவம் வாய்ந்த, நகைச்சுவை உணர்வு மிக்க மற்றும் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பார்கள். மேலும் தனித்துவத்துடன் வேறுபட்டு இருக்க தீவிர நாட்டத்துடன் இருப்பார்கள். எளிதில் கோபம் அடைகிற, பிரம்மாண்டமான மற்றும் கலையாற்றல் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படும் போது, இவ்வகையானவர்கள் தனித்தும் வசைப்பாங்குடையவராகும் இருப்பார்கள். நீங்கள் இந்த நிறத்தை தேர்ந்தெடுக்கும் போது, வழக்கத்திற்கு மாறானவராக, பொறுமைசாலியாக மற்றும் கண்ணியமானவராக இருப்பீர்கள். அதனால் அதிகாரம் இருக்கும் நிலையை அடைவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Your Favorite Color & Your Personality

Did you know that your favorite color can actually say a lot about yourself. Find out what our color expert has to say about your favorite color. What does it reveal about who you really are?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter