Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க
எமதர்ம ராஜாவும், மூன்று நல்ல அரசியல்வாதிகளும் - நகைச்சுவைக் கதை!!!
எமதர்ம ராஜன், நரகத்தின் தலைவன், மக்களின் பாவப் புண்ணியங்களை சரி பார்த்து அவர்களை சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் அனுப்புபவர். பாசக் கயிறை கொண்டு உயிர்களை பறிப்பது இவரது தொழில் என்பன நாம் அறிந்தது. இவரிடம் நமது நாட்டின் மூன்று நல்ல அரசியல்வாதிகள் ஒருமுறை சிக்குகிறார்கள்.
பூலோக மங்கையை திருமணம் செய்துக்கொண்டு அவஸ்தைப்பட்ட எமனின் நகைச்சுவையான கதை!!
மூவரும் நல்லவர்கள், மக்களுக்கு நல்லதை செய்தவர்கள், புண்ணியம் நிறைய சேர்த்து, சொர்க்கத்தை எதிர்பார்த்து எமலோகத்தில் காத்திருந்தனர். ஆனால், இருவருக்கு மட்டும் சொர்க்கமும், ஒருவருக்கு நரகமும் என நீதியளித்தார் எமன். அது ஏன்? இந்த கதையின் மூலம் தெரியவரும் கருத்து என்ன என்று இனிக் காணலாம்....
எமதர்மராஜா கூறியுள்ள மரண ரகசியங்கள்!!!
நன்றி: நகைச்சுவை நீதிக் கதைகள்!

மூன்று நல்ல அரசியல்வாதிகள்
மூன்று அரசியல்வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் மூவரும் திடீரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள். மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது.

மூவரின் பாவ புண்ணியக் கணக்கு
மூவரும், மேலோகம் சென்றார்கள். அங்கு யமதர்ம ராஜா அமர்ந்து எல்லோருடய பாவ, புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கிக் கொண்டு இருந்தார். அவரை பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும், பகட்டான தோற்றம் அளித்தார்.

இருவருக்கு சொர்க்கம், ஒருவருக்கு நரகம்
பயந்து கொண்டே இந்த மூவரும் தனித் தனியே அவர் அருகே செல்ல, முதல் இருவரையும் சொர்க்கத்துக்கு போக சொன்னார், இருவருக்கும் சந்தோஷம் தாங்க முடிய வில்லை. ஆனால், மூன்றாவதாக உள்ளவரை நரகத்துக்கு அனுப்பிவிட்டார்.

தீராத ஆத்திரம்
மூன்றாம் நபருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அவர் யமதர்ம ராஜாவிடம் சென்று நாங்கள் மூவரும் மக்களுக்கு தொண்டு புரிந்துள்ளோம். அப்படி இருந்தும் ஏன் எனக்கு மட்டும் இந்த தண்டனை என்று வினவ, உடனே எமதர்ம ராஜா அவர் கேட்டுக் கொண்டமைக்கு, உங்கள் மூவருக்கும் போட்டி வைக்கிறேன். நீயே போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய் என்று மூன்றாவது நபரிடம் எமதர்ம ராஜா உரைத்தார்.

முதல் போட்டி
நான் உங்கள் மூவருக்கும் முதலில் எழுத்து முறை தேர்வு வைக்கிறேன். முதல் போட்டி ஆரம்பம்...
நபர் 1 - ஆங்கிலத்தில் INDIA என்று எழுத சொன்னார். - பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 2 - ஆங்கிலத்தில் ENGLAND என்று எழுத சொன்னார். - பாஸ் பண்ணிவிட்டார்.

மூன்றாவது நபர் தோல்வி
நபர் 3 - ஆங்கிலத்தில் CZECHOSLOVAKIA என்று எழுத சொன்னார். அந்த தலைவருக்கு தெரியவில்லை. பாஸ் ஆகவில்லை.

மீண்டும் ஒரு வாய்ப்பு
மறுபடியும் அந்த மூன்றாவது நபர் மன்றாடி யமதர்ம ராஜாவிடம் ஒரு சான்ஸ் கேட்டார். அதற்கும், அப்படியே ஆகட்டும் என்று சொன்னார். இது தான் கடைசி சான்ஸ் என்பதால், இந்த போட்டியில் எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்று அவர் மனதில் ஒரு வெறி.

இரண்டாவது போட்டி
நபர் 1 - எப்பொழுது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது ? 1947என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார்.
நபர் 2 - அந்த போராட்டத்தில் எவ்வளவு வீரர்கள் இறந்தார்கள் என்று கேட்டார். அதற்கு அவர் மூன்று ஆப்ஷன் தந்தார் . 1,00,000 - 2,00,000 - 3,00,000. 2,00,000 என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார் நபர் 2.

மீண்டும் மூன்றாவது நபர் தோல்வி
நபர் 3 - அந்த 2,00,000 வீரர்களுடைய விலாசம் கேட்டார். அந்த மூன்றாவது நபர் அதிர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்டு நரகத்தை அடைந்தார்.

கதை சொல்லும் நீதி
"மானேஜ்மென்ட் ஸ்கெட்ச் போட்டுட்டாங்கனா தூக்காம விடமாட்டாங்க!!! எமன் தான் மேனேஜ்மெண்ட், அரசியல்வாதிகள் தான் அலுவலர்கள். நீங்கள் என்னதான் ப்ராஜக்ட் நிறைய நன்றாக செய்தலும் கூட (மக்களுக்கு தொண்டு), மேனேஜ்மெண்ட் மனது வைத்தால் தான் ப்ரொமோஷன், இல்லையேல் "பிங்க் ஸ்லிப்" தான்.



Click it and Unblock the Notifications