For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குகை ஓவியங்கள் புகழ் சித்தன்னவாசலின் வரலாற்று சிறப்பு மற்றும் அதிசயங்கள்!!!

By John
|

கலைகளிலும், திறமைகளிலும் நம்மவர்கள் மேலோங்கி இருந்ததற்கு பல சான்றுகள் இருக்கின்றன. நமது வரலாற்று பக்கங்களில் வீரத்திற்கு பஞ்சமே இல்லை. அந்த அளவிற்கு சோழர், சேர, பாண்டியர்கள் தங்களது சுவடுகளை மிக வலுவாய் பதித்து சென்றிருக்கின்றனர்.

இரண்டாம் சூரியவர்மன் கட்டிய அங்கோர் வாட் பற்றிய அதிசயிக்க வைக்கும் வரலாற்றுக் கூற்றுகள்!!!

சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாய் நமது ஊர்களில் போல கோவில்கள் வானுயர்ந்து நிற்கும் போது, ஓவியக் கலைக்கு தனித்து மிக கம்பீரமாய் நிற்கிறது சித்தன்னவாசல் குகை ஓவியங்கள். இதன் பெருமைகளுக்கும், புகழுக்கும் காரணம், இந்த குகை ஓவியங்களின் தனித்தன்மை தான்.

புராணங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அறிவியலா? கட்டுக்கதையா? - ஓர் பார்வை!!

இரண்டாம் நூற்றாண்டில் இவ்வளவு பிரமிப்பூட்டும் வண்ண ஓவியங்கள் எவ்வாறு தீட்டப்பட்டது என நினைக்கும் போதே, மயிர்கூச்செறிகிறது. ஆஹா, ஓஹோ.. என்ற வார்த்தைகள் கூட இந்த ஓவியங்களுக்கு முன்பு அடக்கமாக தான் இருக்க வேண்டும்.

மனிதன் மற்றும் தமிழனத்தின் எழுச்சியைப் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!

புதுக்கோட்டையின் புகழுக்கு சித்தன்னவாசல் ஓர் பெரும் காரணம் என்பது நிதர்சனம். இனி, குகை ஓவியங்கள் புகழ் சித்தன்னவாசலின் வரலாற்று சிறப்பு மற்றும் அதிசயங்கள் பற்றிக் காணலாம்....

நன்றி: புதுக்கோட்டை வரலாற்று குறிப்புகள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொல்லியல் பாரம்பரியம் கொண்ட சிற்றூர்

தொல்லியல் பாரம்பரியம் கொண்ட சிற்றூர்

சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு சிற்றூர் ஆகும் . புதுக்கோட்டையில், தொல்லியல் பாரம்பரியம் மிக்க இடங்களில் புகழ்பெற்றது இந்த இடம்.

அழியும் தருவாயில் ஓவியங்கள்

அழியும் தருவாயில் ஓவியங்கள்

சித்தன்னவாசலின் புகழே, அங்கு அமைந்திருக்கும் குகை ஓவியங்கள் தான். ஆனால், அவை அழியும் தருவாயில் உள்ளன.

சமணர்களின் பங்களிப்பு

சமணர்களின் பங்களிப்பு

பழங்கால ஓவியம், அந்த ஓவியம் அமைந்துள்ள குகைக்கோயில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுக்கள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும்.

சமணர்கள் தங்கியிருந்ததற்கான சான்றுகள்

சமணர்கள் தங்கியிருந்ததற்கான சான்றுகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமணர்கள் பல காலம் தங்கியிருந்தனர். இதற்கான சான்றுகளும் அதிக அளவில் கிடைத்துள்ளன. சில ஊர்களில் இதற்கு சான்றாக அவர்கள் வாழ்ந்திருந்த, இடிந்து போய் அடிவாரம் வரை மிச்சமுள்ள சமணர் கோயில்களும், அனாதையாக கைவிடப்பட்டுள்ள சமணர் சிலைகளும் கிடைத்துள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த சமண துறவிகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த சமண துறவிகள்

இங்கே சமண துறவிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி சமய சேவைகள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

வழிபாட்டில் உள்ள சமணர் சிலைகள்

வழிபாட்டில் உள்ள சமணர் சிலைகள்

கைவிடப்பட்டுள்ள சில சமணர் சிலைகள், சில இடங்களில் வழிபாட்டிலும் இருக்கின்றன. அதில், மொட்டைப் பிள்ளையார், சடையர் என்று மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பெயர் சூட்டி, சமணர் சிலைகள் வழிபட்டும் வருகின்றனர்.

சமணர் படுக்கைகள் மற்றும் எழுத்துருக்கள் உள்ள ஏழடிப்பட்டம்

சமணர் படுக்கைகள் மற்றும் எழுத்துருக்கள் உள்ள ஏழடிப்பட்டம்

குகைக் கோயிலும் ஓவியமும் உள்ள அறிவர் கோயில் மலை உச்சியில் ஒரு சுனை, நவ்வாச்சுனை என்று ஒரு பாதி நாளுக்கு வரலாற்றுசு் சுற்றுலா கொண்டாட ஏதுவான வசதிகள் அனைத்தும் உண்டு.இந்த இடத்தை ஏழடிப்பட்டம் என்று கூறுகிறார்கள்.

இயற்கையாக அமைந்த குகை

இயற்கையாக அமைந்த குகை

ஏழடிப்பட்டம் என்பது இயற்கையாகவே மலையில் அமைந்த ஒரு குகை. மலையில் மடிப்பு மாதிரியான ஒரு அமைப்பு உடையது இந்த ஏழடிப்பட்டம் குகை.

பழமையான எழுத்து வடிவம்

பழமையான எழுத்து வடிவம்

இங்குள்ள சில படுக்கைகளை சுற்றித்தான் தென்னிந்தியாவின் மிகப் பழமையான எழுத்துவடிவம் கல்வெட்டாய் கிடைத்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. தமிழ் மொழியை அசோக பிராமியில் பதித்துள்ளார்கள். இதன் காலம் கிமு 2 அல்லது 3ஆம் நூற்றாண்டு. கிட்டத்தட்ட 20௦௦ பழமையானது.

நிறைய கல்வெட்டுகள்

நிறைய கல்வெட்டுகள்

பெரும்பாலும் இங்குள்ள அனைத்து படுக்கைகளிலும் கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில், அங்கிருந்தவர்களை பற்றிய தகவல்களும் கிடைக்கின்றன. சில படுக்கைகளில், ஒன்றிற்கும் மேற்பட்டவர்களின் குறிப்புகள் கிடைத்திருப்பதால், ஒருவர் பின் ஒருவர் என நிறைய பேர் அங்கு தங்கியிருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சித்தன்னவாசலின் தரம்

சித்தன்னவாசலின் தரம்

சித்தன்னவாசல் ஓவியங்கள், கிமு 2- கிபி 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஜந்தா, 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை சிகிரியா, 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாக் குகை ஓவியங்கள் (மத்தியபிரதேசம்) இவற்றுடன் காலத்திலும், வரையும் முறையிலும், தரத்திலும் ஒப்பிடத்தக்கது.

தாழிகள்

தாழிகள்

இவை பட்டுமின்ற சித்தன்னவாசலில் பல பழமையான முதுமக்கள் தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தென்னிந்தியாவின் சிறப்பு

தென்னிந்தியாவின் சிறப்பு

தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, சித்தன்னவாசல் மட்டுமே முற்கால சமண ஓவியங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Wonders And History Of Sittanavasal Paintings

Sittanavasal is a small hamlet in Pudukkottai district of Tamil Nadu. It is known for the Sittanavasal Cave, a 2nd-century Jain cave complex. FHere we have shared some wonders of Sittanavasal Cave Paintings.
Desktop Bottom Promotion