பிகினி அணிந்து வந்தால் இலவச பெட்ரோல், டீசல் தரும் விசித்திரமான பெட்ரோல் பங்க்!!!

Posted By:
Subscribe to Boldsky

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்ற பழமொழி இருக்கிறது. ஆனால், இலவசம் என்றால் எதையும் இழக்க தயாராகி வருகிறது இன்றைய சமுதாயம் என்பது நாடு, கண்டம் என்ற எல்லைகள் இன்றி பரவி இருக்கிறது. நமது ஊர்களில் இலவசம் என்றால் நினைவுக்கு வருவது ஓட்டு தான். பொருள்களை வாங்கிக் கொண்டு ஓட்டை இலவசமாக அளிக்கும் கொடுமை இங்கு தான் நடக்கிறது.

உயரத்தில் இருந்து நிர்வாணமாக குதித்து விளையாடிய பெண் - கேளிக்கை நிறுவனத்திற்கு அபராதம்!!

இலவசம் என்பது ஓர் விதமான வியாபார உக்தி என்பது தான் உண்மை. "இலவசம்" என்ற வார்த்தைக்கு புவிஈர்ப்பை விட அதிகமான ஈர்ப்பு சக்தி இருக்கிறது. இந்த இலவசம் என்ற வார்த்தையை பயன்படுத்தி ஓர் பெட்ரோல் பங்க உரிமையாளர் கிளுகிளுப்பான முறையியல் பெட்ரோல் விற்பனை செய்து வருகிறார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிவ், உக்ரைன்

கிவ், உக்ரைன்

உக்ரைன் நாட்டில் இருக்கும் கிவ் (Kiev) எனும் பகுதியில் செயல்பட்டு வரும் ஓர் பெட்ரோல் பங்கில் பிகினி அணிந்து வந்தால் பெட்ரோல், டீசல் காஸ் ஃப்ரீ என்று விற்கப்பட்டு வருகிறது.

வியாபார உக்தி

வியாபார உக்தி

நமது உலகம் வியாபாரம் என்ற கருபொருளை மதியாக வைத்து தான் இப்போது சுழன்று வருகிறது. வியாபாரம் பெருக வேண்டும் என்று காதில் கிலோமீட்டர் கணக்கில் பூ சுற்றுபவர்கள் ஏராளம். இந்த பிகினி மேட்டரும் கூட ஒரு வியாபார உக்தி தான் என்று இதன் உரிமையாளர் கூறுகிறார்.

வித்தியாசமான உக்தி

வித்தியாசமான உக்தி

சில பெட்ரோல் பங்கில் ஆரம்பித்த புதிதில் வாடிக்கையாளர்கள் அதிகம் வர வேண்டும் என்பதற்காக கார்களை துடைப்பது, தண்ணீர் பாட்டில்கள் கொடுப்பது, 5 - 10% சலுகை, இலவசமாக ஆயில் மாற்றுவது போன்றவற்றில் ஈடுபடுவது உண்டு. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாகவும், கிளிகிளுப்பாகவும் உள்ளது.

ஃபுல் டேன்க் பெட்ரோல்

ஃபுல் டேன்க் பெட்ரோல்

ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என்றில்லாமல், பிகினியில் வருபவர் எல்லாம் தங்கள் வாகனத்திற்கு ஃபுல் டேன்க் பெட்ரோல், டீசல் நிரப்பி செல்கின்றனர்.

ஆண்களும் பிகினி அணிகிறார்கள்

ஆண்களும் பிகினி அணிகிறார்கள்

பெண்களுக்கு மட்டும் தானா? எங்களுக்கு இல்லையா என சில ஆண்களும் பிகினி அணிந்து வந்து பெட்ரோல் நிரப்பி சென்றுள்ளார்கள் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது. (நம்ம ஊர்ல எவ்வளவோ பரவாயில்ல போல... )

வீடியோ எடுக்கப்படும்

வீடியோ எடுக்கப்படும்

நீங்கள் பிகினியில் வந்து ஃப்ரீயாக பெட்ரோல், டீசல் நிரப்பி செல்வதை வீடியோ எடுத்து இணையத்தில் பரப்பப்படும் (வியாபாரத்திற்காக) என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் கூட உக்ரைன் நாட்டு பெண்கள் அசராமல் கிவி பகுதியில் பெட்ரோல் நிரப்பி செல்கிறார்கள்.

கணவனுடன் வந்து செல்கிறார்கள்

கணவனுடன் வந்து செல்கிறார்கள்

பல பெண்கள் கணவன், குழந்தை என குடும்பமாக வந்து சென்று இலவசமாக பெட்ரோல் நிரப்பி செல்வதை வீடியோவில் காணும் போது "நல்ல குடும்பம்!" என்று சொல்ல தோன்றுகிறது. (மௌலி பாணியில்)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Wear Bikini And Get Fuel For Free

A gas station in kiev, Ukrain has giving free fuel for bikini customers.
Story first published: Tuesday, October 20, 2015, 11:24 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter