Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
கேப்டன் கூல் தல தோனியின் மறக்க முடியாத தலைசிறந்த 10 இன்னிங்ஸ்!!
தோனி ஓர் தலைசிறந்த கேப்டன் என்பதையும் தாண்டி நான்காம் வரிசையில் இறங்கி தூள் கிளப்பக் கூடிய அதிரடி ஆட்டக்காரரும் கூட. கேப்டன் பதவி வந்த பிறகு கடைநிலையில் விளையாட வீரர்கள் இல்லாததால் தனது பொறுப்பினை உணர்ந்து கீழிறங்கி விளையாட ஆரம்பித்தார். ஓர் வீரர் சிறந்து விளையாடுவது என்பது பெரிதல்ல.
"தல" தோனியின் பஞ்ச் வசனங்கள்!!
ஆனால், ஆட்டம் அழுத்தமான தருணத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போதும் கூட திறமையான ஆட்டத்தை ஆடக் கூடியது தான் பெரிது. யாராக இருந்தாலும் கடைசி ஓவர்களில் 15 ரன்களுக்கு மேல் எடுப்பது என்பது மிகவும் கடினமானது, தோனியை தவிர. இதை யாராலும் மறுக்க முடியாது. எவ்வளவு கடினமான ஆட்டமாக இருந்தாலும் கூலாக அதை எதிர்கொள்ளும் திறன் தோனியிடம் மட்டுமே இருக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகள்!
இனி, கேப்டன் கூல் "தல" தோனியின் மறக்க முடியாத 10 இன்னிங்ஸ்கள் பற்றி பார்க்கலாம்....
கிரிக்கெட், இது எங்க ஏரியா! உலக ரசிகர்களை வியக்க வைக்கும் இந்திய ரசிகர்கள்!

கேப்டன் கூல் தல தோனியின் மறக்க முடியாத 10 இன்னிங்ஸ்!!
29 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த போது. உண்மையாகவே சிங்கம் போல களமிறங்கினார் தோனி. ஆட்டத்தில் அதிகப்படியான அழுத்தம் இருந்த போதிலும் கூட தனது பொறுப்பினை உணர்ந்து நிலைத்து விளையாடி 113 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆயினும் இப்போட்டியில் இந்தியா தோல்வியுற்றது.

183* இலங்கைக்கு எதிராக, ஜெய்ப்பூர்
தோனியின் தலை சிறந்த ஆட்டங்களில் இது எப்போதுமே முதன்மை வகிக்கும். வாஸ் மற்றும் முரளிதரன் போன்ற அப்போதைய முன்னணி பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார் தோனி. தொடக்கத்தில் இருந்து வாணவேடிக்கை காட்டிய தோனி 298 ரன்களை சேஸ் செய்து இந்தியாவை வெற்றியடைய செய்தார். உலகமே தோனி எனும் ஓர் வீரனை திரும்பி பார்த்த நாள் அது, டிசம்பர் 12, 2005.

91 அவுட் இலங்கைக்கு எதிராக, மும்பை
இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. 1983ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா உலக கோப்பையை கையில் ஏந்திய நாள் ஏப்ரல் 2, 2011. கம்பிரின் கச்சிதமான தொடக்கம் இருப்பினும், சச்சின், சேவாக், கோலி போன்றவர்களை இழந்து, கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் தோனி கலக்கிய இன்னிங்ஸ் அது.

139* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, மொகாலி
76 ரன்களுக்கு நான்கு விக்கெட் இழந்து மீண்டும் இந்தியா தடுமாறிக் கொண்டிருந்த போது களமிறங்கிய தோனி. முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி கடைசி பத்து ஓவர்களில் தூள் கிளப்பினார். 32 ஓவர் வரை 154/6 என்றிருந்த இந்தியாவின் ஸ்கோர் போர்டு கடைசியில் 303 ரன்களை எட்டியது.

92 அவுட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, இந்தூர்
ஓர் முனையில் விக்கெட்டுகள் சரிந்துக் கொண்டிருக்க, மறுமுனையில் இந்திய அணியின் ரன்களை உயர்த்திக் கொண்டிருந்தார் தோனி. கடைசிவரை போராடி இந்திய அணியின் ஸ்கோரை 247க்கு உயர்த்தினார் தோனி.

224 அவுட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, சென்னை
265 பந்துகளில் 224 ரன்கள் குவித்து இந்தியாவின் ஸ்கோர்போர்டை 572ரன்களுக்கு உயர்த்தினர் தோனி. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

76* இங்கிலாந்துக்கு எதிராக, லார்ட்ஸ்
இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டு இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளித்து டெஸ்ட் போட்டியை தோல்வியடையாமல் காப்பாற்றி தொடரை வெல்ல பெருமளவு உதவினார் தோனி.

95 அவுட் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, கிங்க்ஸ்டன்
இந்த போட்டி தோல்வியுற்ற போதிலும் கூட 82/8 என்று இருந்த நிலையில் 188 ரன்கள் வரை ஸ்கோரை உயர்த்த தோனி போராடினர்.

45* இலங்கைக்கு எதிராக போர்ட் ஆப் ஸ்பெயின்
இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத மற்றுமொரு ஆட்டமாக அமைந்தது இந்த போட்டி. முத்தரப்புப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்து ரன் ஏதுமில்லை. அடுத்த மூன்று பந்துகளில் முறையே 6,4,6 என பவுண்டரிகள் விளாசி இந்தியாவை வெற்றியடைய செய்தார் தோனி.

71 அவுட்இங்கிலாந்துக்கு எதிராக, மான்செஸ்டர்
டெஸ்ட் இன்னிங்ஸில் தோனியின் சிறந்த ஆட்டங்களில் இது மிக முக்கியமானது. எதிரணி வீரர்களும் கூட பாராட்டிய ஆட்டம் இது. அண்டர்சன் மற்றும் ஸ்டூவார்ட் போன்றவர்களது பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் நடையைக்கட்டினர். ஆனால், தோனி மட்டுமே தனித்து நின்று 133 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் தோனியின் ஆட்டம் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.



Click it and Unblock the Notifications