Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
எகிப்திய அழகி கிளியோபாட்ரா பற்றி யாரும் அறிந்திராத சில சுவாரஸ்ய தகவல்கள்!!!
பெண்கள் என்றாலே அழகு தான். ஆனால், நம்மவர்கள் பண்டைய காலம் முதலே செவ்விதழ், மலர் கொடி, வெண்ணிலா என வெள்ளை, சிவப்பாக இருப்பது தான் அழகு என்று கூறிப் பாடி சென்றுவிட்டார்கள். கிளியோபாட்ராவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால், ஆங்கில படங்களில் காண்பிக்கப்படுவதை போல கிளியோபாட்ரா வெள்ளை நிறத்துடையாள் அல்ல.
ஆம், எகிப்திய அழகியான கிளியோபாட்ரா கருப்பு பேரழகி. அவளின் அழகில் மயங்கி ஷேக்ஸ்பியரின் நாயகன் ஜூலியஸ் சீசர் ஓர் பிரம்மாண்ட அரண்மனையே கட்டினான். அவளது கட்டழகும், கவர்ச்சியும் கண்டு மயங்காத ஆண் விழியே கிடையாது என்று பல வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.
பேரும், புகழும் குவியும் இடத்தில் தான், உண்மைகளும், கருப்பு பக்கங்களும் மறைக்கடிக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் எகிப்திய அழகி கிளியோபாட்ரா பற்றிய சில அரிய தகவல்கள்.....

உண்மையான கிளியோபாட்ரா
சரித்திரங்களில் புகழப்படும் கிளியோபாட்ரா, கிளியோபாட்ரா VII ஆவாள். வரலாற்றில் இவளுக்கு முன்பு ஆறு கிளியோபாட்ராக்கள் இருக்கின்றனர்.

சீசரும், அந்தோனியும்
கிளியோபாட்ராவுடன் சீசரும், அந்தோனியும் உறவில் இருந்ததற்கு நிறைய காரணங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், முதன்மை காரணமாக கருதப்பட்டது அரசியல் பின்புலம் தான். அதுவும், ரோமபுரி மற்றும் எகிப்த் நாடுகளுக்கு மத்தியிலான அரசியல் உறவு தான் காரணம் என்று கூறப்படுகிறது.

எழுத்தாளர் கிளியோபாட்ரா
கிளியோபாட்ரா ஓர் எழுத்தாளரும் ஆவாள். "காஸ்மெடிக்ஸ்" என்ற மருத்துவ ஆய்வுப் புத்தகத்தை கிளியோபாட்ரா எழுதியிருந்ததாக கூறப்படுகிறது.

உடன் பிறந்தவர்கள் கொன்றால்
கிளியோபாட்ராவுக்கு முன்பு அந்நாட்டை ஆண்டுவந்த அவளது இரு சகோதரர்களை அடுத்தடுத்து கொன்றால் கிளியோபாட்ரா. ஏனெனில், அந்த நாட்டை தானே ஆள வேண்டும் என்று நினைத்தால் கிளியோபாட்ரா.

முதல் திருமணம்
கிளியோபாட்ரா, தனது உடன் பிறந்த சகோதரனையே திருமணம் செய்துக் கொண்டதாக சில வரலாற்று கூற்றுகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், நிறைய கிளியோபாட்ராக்கள் பற்றிய வரலாறுகளின் குவியலில் அது எந்த கிளியோபாட்ரா என்ற குழப்பம் நிலவுகிறது.

சீசர் இறந்த போது
சீசர் கொலை செய்யப்பட்ட போது கிளியோபாட்ரா ரோமபுரியில் தான் இருந்தாள் என்று கூறப்படுகிறது.

கிரேக்க நாட்டை சேர்ந்தவள்
எகிப்திய அழகி, எகிப்து நாட்டை ஆண்டவள் என்று கூறப்படும் கிளியோபாட்ரா, உண்மையில் கிரேக்க நாட்டை சேர்ந்தவள் என்றும் சில வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளியோபாட்ராவின் மகன்கள்
கிளியோபாட்ராவுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அதில் ஓர் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அந்த நால்வர்களில் ஒருவரை தவிர மற்ற மூவரும் சிறு வயதிலேயே இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வெற்றிகரமாக தனது ராஜ்ஜாங்கத்தை நகர்த்தினால்
கிளியோபாட்ரா சீசருடனும், சீசர் இறந்தவுடன் அந்தோனியுடனும் உறவில் இருந்தாலும் தனது இராஜ்ஜியத்தை பெரிதாக்குவதில் சிறுதும் கோட்டைவிடவில்லை. ஓர் பெண்ணாக இருந்தாலும் அரசியல் விளையாட்டில் மிக நேர்த்தியாக வென்றவள் கிளியோபாட்ரா.

கிளியோபாட்ராவின் இறப்பு
கிளியோபாட்ரா பாம்பு கடித்து இறந்ததாக கூறப்படுகிறது. ஆயினும் கிளியோபாட்ரா வாழ்ந்த காலத்தில் இது போன்ற மரணங்கள் ஏற்பட்டதாக கூற்றுகள் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். ஒருவேளை, ஊசி மூலமாக விஷத்தை அவளது உடலில் செலுத்து அதை பாம்பு கடித்ததாக மாற்றி இருக்கலாம் அல்லது மக்களை அவ்வாறு நம்ப வைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications