Latest Updates
-
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
பாரம்பரிய உடையே நடிகை தியாவின் அடையாளம்!
தியா மிர்ஸாவை உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆம், பாலிவுட்டின் தேவதை. டிசம்பர் 9, 1982 ல் பிறந்தார் தியா மிர்ஸா சங்கா. 2000 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் மிஸ் ஆசியா பசிபிக் என்ற பட்டத்தை வென்றார். இவர் ஒரு இந்திய மாடல், நடிகை, தயாரிப்பாளர் என பல விதங்களில் கலக்குகின்றார். பாலிவுட்டில் வலம் வந்த தியா தற்பொழுது பரவலாக அறியப்படுவது அவரது சமூக பணி மூலமாகத் தான். சமூக பணிகளில் நல்ல சேவை செய்து வருகின்றார். இவருடைய கணவர் சாஹில் சங்காவுடன் இணைந்து Born Free Entertainment என்ற தயாரிப்பின் உரிமையாளராகவும் இருந்து வருகின்றார். 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அவர்களுடைய முதல் படமான Love Breakups Zindazi வெளியிடப்பட்டது. ஆனாலும் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இவர் தனது சமூக நல சிந்தனையின் மூலமாகவே அறியப்பட்டார்.
தியாவைப் பற்றி பேசினாலே அவருடைய ஸ்டைல், அழகு, பண்பு மற்றும் கருணை ஆகியவற்றைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. இவர் வந்தாலே இன்று என்ன புடவை கட்டி வருகின்றார், என்ன சிகை அலங்காரம் செய்துள்ளார் என்று பார்க்கவே காத்திருப்பார்கள் இவரது ரசிகர்கள். இவரை பலமுறை நாங்கள் பல நிகழ்ச்சிகளில் புகைப்படம் எடுத்துள்ளோம். கண்ணைப் பறிக்கும் அழகுடன் இவர் வலம் வருவார். பாலிவுட்டின் சிறந்த அம்சமாக திகழும் இவர் பாரம்பரிய உடைகள் அணிவதை அதிகமாக விரும்புகின்றார். இவரை பலமுறை புடவைகளிலும், சல்வாரிலும் பார்க்க முடிகின்றது. அந்தளவிற்கு பாரம்பரிய உடைகளுக்கு இவர் முக்கியத்துவம் அளிக்கின்றார். இது அவருடைய சிக்னேச்சர் ஸ்டைல் என்றே சொல்லலாம். இதை உறுதிபடுத்த எங்களிடம் தியாவின் மூன்று புகைப்படங்கள் உள்ளன.
தமன்னா பஞ்சாபி கபூர் வடைவமைத்த ஆடையில் தியா

கன்ஸ்யூமர் ஜூவல்லரி நிகழ்ச்சி ஒன்றில் காண்போரை வசியப்படுத்தினார். இந்த ஆடையுடன் அனைவருடைய கண்ணையும் கவர்ந்தார். இந்த சல்வார் வெள்ளை மற்றும் வெளிர் பிங்க் நிறத்தில் இருந்தது. சல்வாரின் கீழ் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட எம்பிராய்ட்ரி ஜொலித்தது. கழுத்தில் இருந்து பாதம் வரை ஜொலிக்கும் டிசைன்கள் காண்போரைக் கவரும் விதமாக இருந்தது. இந்த உடை சீன ஸ்டைல் காலருடன் மேலும் அழகூட்டப்பட்டுள்ளது.
புடவையில் தியா
தியாவின் அழகு சல்வாரில் ஜொலித்தது என்று கூறினால் புடவையில் எப்படி இருக்கும் பாருங்கள். 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு' என்ற பாடலுக்கு அற்புதமாக இருந்தார் தியா. இவருடைய புடவையின் அழகை கூற வார்த்தையே இல்லை. பாரம்பரிய உடையான புடவையில் இவர் வரும் பொழுது வானிலிருந்து தேவதை வந்தது போன்று தோன்றும். நீலம் மற்றும் பிஸ்தா பச்சை புடவையில் இவர் வந்தது அழகோ அழகு. புடவையை விட இவர் அதை அணிந்த விதம் எல்லோரையும் கவர்ந்தது. தியாவின் தோற்றத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது. மேகத்தை போன்று ரம்மியமாக காட்சியளித்த தியா உடுத்திய புடவை மூக்கின் மேல் விரல் வைக்க தூண்டியது என்றே கூற வேண்டும்.
மஞ்சள் நிற புடவையில் தியா
புது தில்லியில் சுனார் ஜூவல்லரி வெளியீட்டு விழாவில் ஒரு மஞ்சள் நிற புடவையில் காணப்பட்டார் தியா. சொல்லவா வேண்டும். கண்ணை கவரும் அழகுடன் காணப்பட்டார். புடவையை மிக நேர்த்தியாக அணிந்திருந்தார். தியாவின் புடவை கட்டும் நேர்த்திக்கே போடலாம் ஒரு சலாம். அதுவும் அவருடைய சிகை அலங்காரம் காண அற்புதம். முன் முடியை லேசாக பிண்னி gagra ஸ்டைலில் தியா தேவதையே தான். புடவைக்கு தியாவால் அழகா, இல்லை தியாவுக்கு புடவையால் அழகா என்று குழம்பும்படி அழகாய் இருந்தார்.



Click it and Unblock the Notifications


