உலக மக்களை ஆச்சரியப்படுத்தும் இந்தியாவில் மட்டுமே நடக்கும் சில அமானுஷ்யமான செயல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பல விஷயங்களை, நமது பாட்டன் அந்த காலத்திலேயே ஏடுகளிலும், கல்வெட்டுகளிலும் பதித்து வைத்து சென்றுவிட்டனர். எடுத்துக்காட்டாக, சில வருடங்களுக்கு முன்பு தான் ப்ளுடோ நமது சூரிய குடும்பத்தை சேர்ந்தது அல்ல. நமது சூரியனை சுற்றி எட்டு கிரகங்கள் தான் சுற்றி வருகிறது என கண்டறிந்தனர் நாசா விஞ்ஞானிகள்.

இந்தியா மற்றும் கிரேக்க நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே மாதிரியானப் புராணக் கதைகள்!!!

ஆனால், நமது முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, நவகிரக வழிபாடு என கூறி, அதில் சூரியனை சுற்றி எட்டு கிரகங்கள் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். நம்மவர் எப்படி எந்த தொழில்நுட்பமும் இன்றி அப்போதே இவற்றை கண்டுபிடித்தனர் என உலக மக்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

இந்தியாவில் நடைமுறையில் உள்ள விநோதமான பழக்கங்கள்!!!

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, நமது இந்தியாவில், உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்களே வியக்கும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றன. இதை சிலர் அறிவியல் பார்வையில் பார்கின்றனர். சிலர் அமானுஷ்யம் என்று கூறுகின்றனர்.....

பண்டையக் காலத்தில் கருத்தரிப்பதை தவிர்க்க கடைப்பிடிக்கப்பட்ட சில வினோத முறைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காந்த மலை

காந்த மலை

லடாக்கில் இருக்கும் காந்த மலை. இந்த மலையின் அருகில் செல்லும் போது, இரும்பு பொருள்கள் மற்றும் வாகனங்கள் கூட தானாக நகர்கிறது. இந்த மலையை புவியீர்ப்பு மலை என்றும் பரவலாக கூறுகின்றனர்.

எலும்புகூடு ஏரி

எலும்புகூடு ஏரி

உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூப்குந்த் எனும் பகுதியில் இருக்கிறது இந்த எலும்புகூடு ஏரி. இதை பனி ஏரி என்றும் கூறுகிறார்கள். இது இமாலயா மலைபகுதியை ஒட்டி இருக்கிறது. இந்த ஏரிக்கரையில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. இதனால், இதை எலும்புக்கூடு ஏரி என கூறுகிறார்கள்.

இரட்டையர்கள் அதிகம் வாழும் பகுதி

இரட்டையர்கள் அதிகம் வாழும் பகுதி

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஓர் கிராமம் தான் குதின்ஹி. இந்த கிராமத்தில் இருப்பதே மொத்தம் 2,000 குடியிருப்புகள் தான். ஆனால், இந்த சிறிய பகுதியில் 250க்கும் மேற்ப்பட்ட இரட்டையர்கள் இருக்கிறார்கள். சர்வதேச அளவில் இந்த கிராமம் இரட்டையர்களுக்கு புகழ்பெற்று இருக்கிறது. இந்த கிராமத்தை ட்வின் டவுன் என்றும் அழைக்கிறார்கள்.

மிதக்கும் தூண் கொண்ட கோவில்

மிதக்கும் தூண் கொண்ட கோவில்

லேபக்ஷி கோவில், இது ஆந்திராவில் இருக்கும் ஆனந்தபுரா என்னும் பகுதியில் இருக்கிறது. பெங்களூரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலில் தான் தூண் மிதந்துக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளது. மற்றும் இந்த கோவில், சிவன், விஷ்ணு மற்றும் வீரபத்திரா என மூன்று சன்னதிகள் கொண்டுள்ளது இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

சிவாப்பூர் மிதக்கும் கல்

சிவாப்பூர் மிதக்கும் கல்

மகாராஷ்டிராவின் சிவாப்பூர் பகுதியில் இருக்கும் தர்கா ஒன்றில் மிதக்கும் கல் மிகவும் பிரபலமானது. இந்த பகுதியில் மட்டும் ஏன் அந்த கல் மிதக்கிறது என தெரியவில்லை. மற்றும் ஏறத்தாழ 6-7 அடி உயரம் வரையில் கல் மிதப்பது போன்ற பல புகைப்படங்கள் இணையங்களில் பரவியுள்ளது.

கொங்கா லா (Kongka La)

கொங்கா லா (Kongka La)

லடாக்கில் இருக்கும் சங் செம்னோ எனும் மலைத்தொடர் பகுதியில் இருக்கும் இடம் தான் இந்த கொங்கா லா எனும் இடம். இந்த பகுதியில் இருக்கும் மக்கள் பறக்கும் தட்டை இயல்பாகவே பல முறை பார்த்ததாக கூறுகிறார்கள். உலக அறிவியல் ஆராய்ச்சியாளர்களையே இது வியக்க வைக்கிறது.

ஒரே இரவில் மாயமான கிராமம்

ஒரே இரவில் மாயமான கிராமம்

இந்தியாவின் ராஜாஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஓர் கிராமம் தான் குல்தாரா. 500 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வந்த 1500க்கும் மேற்ப்பட்ட குடியிருப்புகள் திடீரென ஒரே நாள் இரவில் மாயமாயினார். இப்போது இந்த கிராமத்தை பேய் கிராமம் என கூறுகிறார்கள். உண்மையில் இங்கே ஏற்பட்ட ஏதோ வினோதமான சம்பவத்தினால் தான், ஒரே இரவில் ஒட்டுமொத்த கிரமாமும் வீடுகளை காலி செய்துவிட்டு கிளம்பிட்டனர் என கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Mysterious Facts About India Which Will Leave You Stunned

Everyone should know these mysterious facts about India, which leave you stunned. Take a look.
Subscribe Newsletter