Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
இந்து திருமணத்தில் மாங்கல்யத்தின் முக்கியத்துவம்!!!
இந்து மத திருமணம் என்பது இரு தனிப்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வது என்பது மட்டுமல்ல. ஆனால் அதையும் தாண்டி புரிதல், அர்பணிப்பு, பரஸ்பர காதல், ஒருமை மற்றும் ஆன்மீக வளர்ச்சி ஆகியவைகளும் இதில் அடக்கம். பாரம்பரிய ரீதியாக பார்க்கையில், இந்து மத திருமணம் என்பது கொண்டாட்டங்கள் மற்றும் குதூகங்களையும் தாண்டியதாகும். திருமணத்துடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு சடங்குகளும், சம்பிரதாயங்களும் திருமணத்தின் உண்மையான சாராம்சத்தை வெளிப்படுத்தும்.
தமிழ் திருமண சடங்குகளின் முக்கியத்துவம்...!
மரபு ரீதியாக, இந்து மத பண்பாட்டின் படி, ஒரு பெண்ணுக்கு ஐந்து திருமண நிலைகள் உள்ளது - மாங்கல்யம், மெட்டி, குங்குமம், வளையல்கள் மற்றும் மூக்குத்தி. மாங்கலயத்தைப் பற்றி பேசுகையில், அந்த வார்த்தையே மிக முக்கியமான அர்த்தத்தை குறிக்கும்.
உலகில் உள்ள மிகவும் வினோதமான திருமண வழக்கங்கள்!
மாங்கல்யத்தை வட மொழியில் மங்கல்சூத்ரா என்றும் அழைப்பர். மங்கல் என்றால் மங்களகரமான என்றும் சூத்ரா என்றால் கயிறு என்றும் பொருள் தரும்.

மாங்கல்யத்தின் முக்கியத்துவம்
மாங்கல்யம் என்பதை வெறும் நகையாக கருத முடியாது. மாறாக திருமணமான பெண்ணால் அணிந்து கொள்ளப்படும், காதல் மற்றும் நன்மதிப்பை தாங்கும் புனிதமான கயிறாகும் இந்து திருமண நிகழ்ச்சியில் தவிர்க்க முடியாத பங்காக விளங்கும் மாங்கல்யம் திருமணத்தின் மதிப்பிற்குரிய சின்னமாக பார்க்கப்படுகிறது.

பல்வேறு பெயர்கள்
பன்முகத்தன்மை பூமியாக இந்தியா விளங்குவதால், நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் இந்த புனிதமான சின்னத்திற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. இதனை தென் இந்தியா பகுதிகளான கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழில் இதனை தாலி அல்லது மாங்கல்யம் என அழைப்பார்கள். வட இந்தியாவை சேர்ந்தவர்கள் இதனை மங்கல் சூத்ரா என அழைக்கிறார்கள். இந்த புனித கயிற்றின் கருத்தமைவு வேரூன்றியது தென் இந்தியாவில் இருந்து தான் என நம்பப்படுகிறது. மிகுந்த முக்கியத்துவத்தை கொண்டுள்ளதால், இதன் புகழ் வட இந்தியாவையும் சென்றடைந்தது. இன்று, திருமண வைபவம் என்றால் தாலி அதில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது.

மாங்கல்யம் என்றால் என்ன?
மாங்கல்யம் என்பது தன் கணவரால் ஒரு மனைவிக்கு வழங்கப்படும் கண்ணியம் மற்றும் காதலின் சின்னமாகும். திருமண நாளின் போது, அர்ச்சகர் வேதம் ஓத, மணப்பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவார். இது மணப்பெண் மற்றும் மணமகனின் ஐக்கியத்தை குறிக்கும். அதுவும் திருமணத்தில் வந்து கலந்து கொள்ளப்படுவதாக நம்பப்படும் தெய்வங்களின் முன்னிலையில், சில பகுதிகளில், தாலியின் முதல் முடிச்சை மணமகன் கட்டுவார். மீதமுள்ள முடிச்சுகளை அவருடைய அக்கா அல்லது தங்கை கட்டுவார்.

வட இந்திய மாங்கல்யம்
வட இந்தியாவில், இதன் தோற்றத்தைப் பற்றி பார்த்தோமானால், இந்த புனிதமான கயிறு சிறிய கருப்பு மணிகளை கொண்டு இரு கயறுகளை கொண்டிருக்கும். அதனுடன் ஒரு டாலரையும் காணலாம். சில நேரங்களில், சிறிய தங்க மணிகள் மற்றும் கருப்பு மணிகள் கலந்தும் இது செய்யப்பட்டிருக்கும். அதில் தங்கம் அல்லது வைர டாலர் சேர்க்கப்பட்டிருக்கும். திருமணமான பெண்களுக்கு இது மங்களகரமான ஒன்றாக விளங்குவதால், மாங்கல்யத்திற்கு தெய்வீக சக்திகள் உள்ளதாக நம்பப்படுகிறது.

கருப்பு மணியின் முக்கியத்துவம்
மாங்கல்யத்தில் உள்ள கருப்பு மணிகள் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பை குறிக்கும். மேலும் திருமணமான தம்பதிகளை காக்கும் என்றும், முக்கியமாக கணவரின் உயிரை காக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த புனிதமான கயிறு தொலைந்து போனாலோ அல்லது அறுந்து போனாலோ, நம் இந்திய பெண்கள் அதனை அபசகுனமாக கருதுவார்கள்.

இந்தியாவின் மற்ற பகுதியில் மாங்கல்யம்
தற்போதைய காலத்தில், பல்வேறு டிசைன் மற்றும் வகைகளில் மாங்கல்யம் கிடைக்கிறது. குஜராத்திகளும், மார்வாடிகளும் வைர டாலரை தான் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பார்கள். மகாராஷ்டிரா மக்களோ வேறு மாதிரியான வடிவத்தில் வாங்குவார்கள். வங்காள மக்களோ பவளம் சேர்க்கப்பட்ட டிசைனை வாங்குவார்கள்.



Click it and Unblock the Notifications