Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
ஏலியன்கள் நமது உலகிற்கு வந்து சென்றதற்கான வியக்கவைக்கும் ஆதாரங்கள்!!!
உலகெங்கிலும் இருக்கும் பல பண்டையக் காலத்து புராணங்களில் வேற்றுகிரக வாசிகள், ஏலியன்கள் பூமிக்கு வந்தமைக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அது முழுமையாக அறியப்படாமல் இலைமறைக் காயாக இருந்து வருகிறது.
ஏலியன்கள் வாழும் கிரகங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கோள்கள்!!!
நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள விமானம், எகிப்து பிரமிடுகள், ஈஸ்டர் தீவில் உள்ள பெரும் தலைகள் போன்றவை அக்காலத்து மனிதர்கள் அல்லது அன்றிருந்த தொழில்நுட்பத்தை மட்டும் வைத்துக் கொண்டு உருவாக்கியிருக்க முடியும் என்பது சாத்தியமற்ற செயலாக தான் காணப்படுகிறது.
ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட 2000 வருடத்திற்கு முந்தைய ஏலியனின் மண்டை ஓடு!!!
ஒருவேளை, நாம் இப்போது மனிதர்கள் வாழ பிற உலகை தேடுவதை போல, வேற்றுகிரக வாசிகள் நமது உலகை தேடி வந்திருக்கலாம், இங்கு மனிதர்கள் வாழ்வதைக் கண்டு அவர்களுக்கு உதவியிருக்கலாம், அவர்கள் நம்மைவிட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருந்திருக்கலாம்... என்ற கேள்விகள் ஆராய்ச்சியாளர்களின் மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன....

நாஸ்கா கோடுகள் (Nazca Lines)
"பெரு" பகுதியில் ஏறத்தாழ 50 மைல் தூரத்திற்கு நீட்சியாக அகன்று பூமியில் வரையப்பட்டுள்ள கோடுகள் உள்ளன. வெறும் கோடுகளாக இன்றி, உருவங்களாக, வடிவமைப்புகளாக இவை இருக்கின்றன. ஏறத்தாழ 800 நேர் கோடுகளும், 300 வடிவியல் கோணங்களும் இருக்கின்றன. இந்த நாஸ்கா கோடுகள் 300 கி.மு - 800 கி.பி காலகட்டத்தில் உருவாக்கப்பட்டதாக தெரிகின்றன.
Image Courtesy

நாஸ்கா கோடுகள் (Nazca Lines)
வானத்தில் இருந்து பார்த்தால் தான் இந்த கோடுகளின் உருவத்தை பார்க்க முடியும். இந்த இடத்தில் காந்தவிசை மற்றும் மின்சார கடத்துமை அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். எனவே, இவை ஏலியன்கள் வந்து செல்லும் விமானங்களின் ஓடுபாதையாக (ரன்வே - Runway) இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
Image Courtesy

விமானங்கள்
நமது புராணங்களில் வானில் இருந்து விமானங்கள் வந்து சென்றதற்கான கூற்றுகள் இருக்கின்றன. சமஸ்கிருதத்தில் கூட விமானம் இருந்ததற்கான நிறை சான்றுகள் கூறப்பட்டுள்ளன. இவை எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வைக்கப்பட்டவை ஆகும்.
Image Courtesy

விமானங்கள்
இதையும் கூட, ஒருவேளை ஏலியன்கள் அல்லது வேற்றுகிரகவாசிகள் வந்து சென்றதற்கான சான்றாய் இருக்குமோ என்ற எண்ணம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
Image Courtesy

ஈஸ்டர் தீவு தலைகள் (Easter Island Heads)
ஏறத்தாழ 887 பெரிய மனித தலை உருவங்கள் ஈஸ்டர் தீவுவில் இருக்கின்றன. இவை 13 அடி உயரமும் 14 டன் எடையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை ரபா நுய் (Rapa Nui) எனும் மக்கள் எந்த ஒரு நவீன கருவிகளின் உதவியும் இன்றி செதுக்கியதாக கூறப்படுகிறது.
Image Courtesy

ஈஸ்டர் தீவு தலைகள் (Easter Island Heads)
மற்றும் இவ்வளவு பெரிய சிலை உருவங்களை அந்த மக்கள் எப்படி நகர்த்தி சென்றனர் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இந்த உருவங்களையும் கூட ஏலியன்களின் உதவியோடு அல்லது ஏலியன்களே கூட உருவாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Image Courtesy

பூமா புன்கு (Puma Punku)
பொலிவிய மலைநாட்டின் பகுதியில் அமைந்திருக்கிறது இந்த பூமா புன்கு எனும் கற்களால் ஆன நிலப்பகுதி. பெரிய, பெரிய கற்களால் பாறைகளில் சில வடிவங்கள் ஏதோ செய்திகளை கூறுவது போல இருக்கிறது. சதுரங்கம், செவ்வகம் போன்ற வடிவங்களில் உள்ள பாறைகளை கண்டிப்பாக நவீன கருவிகளின் உதவி இன்றி உருவாக்கியிருக்க முடியாது.
Image Courtesy

பூமா புன்கு (Puma Punku)
ஸ்மூத்தாக, கட்சிதமாக அறுக்கப்பட்டுள்ளது இந்த பாறைகள். லேசர் போன்ற அதிநவீன கருவிகளை கூட கையாண்டிருக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த வடிவங்கள் எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Courtesy

எசேக்கியேல் புத்தகம் (The Book of Ezekiel)
பைபிளில், தீர்க்கதரிசி ஒருவர் பறக்கும் தட்டினை நெருப்பு, புகை கிளப்பியப்படி பெரும் சத்தத்துடன் கண்டதாக இருக்கிறது. இது ஒருவேளை ஏலியன்கள் அல்லது வேற்றுகிரகவாசிகள் வந்து சென்றதற்கான அடையாளங்களாக /ஆதாரங்களாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நிலவுகின்றன.
Image Courtesy

ஆராய்ச்சியாளர்களின் அனுமானம்
இங்கு மேற்கூறியவைகள் எல்லாம் ஏலியன்கள் நமது உலகிற்கு வந்ததற்கான சான்றுகள் அல்லது ஆதாரங்களாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுபவை மட்டுமே ஆகும்.



Click it and Unblock the Notifications