ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

தெற்கு ஆசியாவின் மாபெரும் சாம்ராஜ்யமாக திகழ்ந்த சோழ இராஜியத்தின் தலை சிறந்த மன்னனாக திகழ்ந்த இராஜராஜ சோழனின் வீர தீர புத்திரன் தான் இராஜேந்திர சோழன். இந்தியாவில் மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் சோழர்களின் வெற்றி கொடி நாட்டியவன் இராஜேந்திர சோழன்.

கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

தென்னிந்தியா முழுதும் சோழ ராஜ்ஜியம் பரவியிருந்த காலகட்டத்தில், இராஜராஜ சோழன் ஒரு கட்டத்திற்கு பிறகு போர்களை நிறுத்திவிட்டு தன் மக்கள் அமைதியான சூழலில், நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணினார். அப்போது, இராஜேந்திர சோழன் தென்னிந்தியா மட்டுமின்றி இந்தியா தாண்டி சோழக் கொடி பறக்க வேண்டுமென்று முனைந்தார்.

மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!

ஓர் அரசன் இருக்கும் போதே இணை அரசனாக இருந்த பெருமைக்கு உரியவராக திகழ்ந்தார், இராஜேந்திர சோழன். போரிடுவதிலும், வீரத்திலும் ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமானவர் இராஜேந்திர சோழன். இனி, அவரைப் பற்றிய அறியக் குறிப்புக்கள் பற்றிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இணை அரசன் எனும் பெருமை...

இணை அரசன் எனும் பெருமை...

ஓர் அரசாங்கத்தில், அரசன் இருக்கும் போது அதே அதிகாரத்துடன் வேறு யாரும் இருக்க முடியாது. அந்த அரசனுக்கு பின் இளவரசனுக்கு திருமணம் முடித்து அரசனாக அரியணையில் அமர்த்தப்படுவர். ஆனால், இராஜேந்திர சோழன், அவரது தந்தையான இராஜராஜ சோழன் அரசனாக இருக்கும் போதே இணை அரசனாக பொறுப்பேற்று, அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் சோழ நாட்டிற்கு வெற்றியைத் தேடித் தந்தான்.

சோழ படைத்தலைவன்

சோழ படைத்தலைவன்

இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன்.

"மும்முடிச் சோழனின் களிறு"

வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மகா தண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான் இராஜேந்திர சோழன். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராஜேந்திரன்.

சேரனை விரட்டியடித்த இராஜேந்திரன்

சேரனை விரட்டியடித்த இராஜேந்திரன்

கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிரரையும் வென்றான் இராஜேந்திர சோழன்.

26 ஆண்டுகள்....

26 ஆண்டுகள்....

தனது தந்தை இராஜராஜ சோழனுடன் இனைந்து சோழ அரசாங்கத்தை 26 ஆண்டுகள் (கி.பி. 1018ல் இருந்து) ஆட்சி புரிந்து வந்திருக்கிறான் இராஜேந்திர சோழன்.

கங்கையை நோக்கிய படையெடுப்பு

கங்கையை நோக்கிய படையெடுப்பு

கி.பி 1019'ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கி தனது படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரிக் கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான்.

மகிபாலனை எதிர்த்து வெற்றி...

மகிபாலனை எதிர்த்து வெற்றி...

சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வம்சத்துப் புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.

கங்கை கொண்ட சோழன்

கங்கை கொண்ட சோழன்

தெற்கில் மட்டுமின்றி, மேற்கிலும் சோழர்களின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்று கங்கையை நோக்கி படையெடுத்து வெற்றியும் பெற்றான் இராஜேந்திரன். அது மட்டுமின்றி, கங்கையை தனது தலைநகரமாக ஏற்படுத்திக் கொண்டான். இதுவே, இராஜேந்திர சோழனுக்கு "கங்கை கொண்ட சோழன்" என்ற புனைப்பெயர் வரக் காரணமாக இருந்தது.

கடல் கடந்த படையெடுப்பு

கடல் கடந்த படையெடுப்பு

இந்திய அரசர்களில் முதன்முறையாக கடல்கடந்து படையெடுத்த அரசன் என்ற பெருமை இராஜேந்திர சோழனுக்கு இருக்கின்றது.

வெளிநாட்டு வெற்றிகள்

வெளிநாட்டு வெற்றிகள்

கடாரம், இலாமுரி தேசம், பண்ணை (பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும்), தற்போதைய சிங்கப்பூர், மலேசியா பகுதிகளிலும் இராஜேந்திர சோழனின் கடள் படைகள் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.

இராஜேந்திர சோழனின் விருதுகள்...

இராஜேந்திர சோழனின் விருதுகள்...

இராஜராஜ சோழனைப் போன்றே பல விருதுகளை பெற்றிருக்கின்றான் இராஜேந்திர சோழன். அவற்றில் குறிப்பிடத்தக்கவை முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன. இவன் ஒருமுறை வீர ராஜேந்திரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவற்றையெல்லாம் தவிர்த்து, இராஜேந்திர சோழனே பெருமையாக கருதிய விருதாக கருதுவது "கங்கை கொண்ட சோழன்" என்பதாகும்.

இராஜேந்திர சோழனின் சமாதி

இராஜேந்திர சோழனின் சமாதி

ராஜேந்திர சோழனின் சமாதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலிருந்து 30 கி.மீ தெலைவில் உள்ள நாட்டேரி என்ற ஊரின் அருகில் இருக்கும் பிரம்மதேசம் கிராமத்தில் இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட ஒரு பழங்கால கோவிலில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About The Great Emperor Rajendra Chozhan

Every indian should know about the great emperor rajendra chozhan.
Story first published: Wednesday, April 22, 2015, 12:58 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter