Latest Updates
-
Tamil New Year 2026 Rasi Palan: தமிழ் புத்தாண்டில் குபேர ராஜயோகம் - திடீர் ஜாக்பாட் யாருக்கு தெரியுமா? -
30 ஆண்டுக்கு பின் சனிபகவான்-புதன் மீன ராசியில் இணைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான கொத்தமல்லி மாங்காய் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து அசிங்கமாக இருக்கா? அப்ப இந்த நேச்சுரல் கிளென்சரை யூஸ் பண்ணுங்க! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டிலேயே எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? -
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லையாம் - இங்க அப்படி என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க!
சகாப்தம் படைத்த பழம்பெரும் சோழ மன்னர்கள் பற்றிய தகவல்கள்!!
சோழ மன்னர்கள் தோன்றிய காலக் கட்டம் பற்றிய தெளிவான குறிப்புகள் ஏதும் கிடைக்கப்படவில்லை. சுராதிராஜனின் மகனான விசயால சோழனின் ஆட்சி காலம் முதலே தெளிவான வரலாற்று பதிவுகள் கிடைத்துள்ளன. விசயால சோழனில் இருந்து அதிராசேந்திர சோழன் வரை விசயால வம்சாவளியை சார்ந்தவர்கள் தான் சோழ தேசத்தை ஆட்சி செய்து வந்துள்ளனர்.
பலரும் அறியாத அதிராஜேந்திர சோழன் பற்றிய வரலாற்று தகவல்கள்!!!
கலகம், சூழ்ச்சியின் காரணமாக ஏற்பட்ட அதிராசேந்திர சோழனின் மரணத்தின் காரணமாக, இது பின்னாளில் சாளுக்கிய வமசாளி கைக்கு மாறியது. சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, இலக்கியம், இசை, சிற்பம். நாடகம், ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது.
ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்!!!
மிகச்சிறந்த நிர்வாக திறன் கொண்டவர்களாக இருந்தனர் சோழ மன்னர்கள். இனி, சகாப்தம் படைத்த பழம்பெரும் சோழ மன்னர்கள் ஆட்சி காலங்களை பற்றி பார்க்கலாம்....

விசயாலய சோழன்
விசயாலய சோழன் ஆட்சி புரிந்த காலம் 848-871, இவர் சுராதிராஜனின் மகன். இவர் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்தார்.

ஆதித்த சோழன்
ஆதித்த சோழன் சோழனின் ஆட்சி காலம் 871-907, இவர் விசலாய சோழனின் வம்சாவளி ஆவார். இவரும் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு சோழ இராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வந்தார்.

முதலாம் பராந்தக சோழன்
முதலாம் பராந்தக சோழன் 907-950 ஆண்டுகளில் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு சோழ நாட்டை ஆட்சி செய்து வந்தார். இவர் ஆதித்த சோழனின் மகன் ஆவார்.

கண்டராதித்த சோழன்
கண்டராதித்த சோழன் 950-955 ஆண்டுகளில்சோழ நாட்டை ஆட சி செய்து வந்தார். இவரும் தஞ்சாவூரை தான் தலைநகராக கொண்டிருந்தார். இவர் முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் ஆவர்.

அரிஞ்சய சோழன்
அரிஞ்சய சோழன் ஓராண்டு காலம் மட்டுமே சோழ நாட்டை ஆட்சி செய்தார் (956-957). இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தார். இவர் முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன் ஆவார்.

இரண்டாம் பராந்தக சோழன்
இரண்டாம் பராந்தக சோழன் 957-973 ஆண்டுகளின் காலக்கட்டத்தில் சோழ பகுதியை ஆண்டு வந்தார். அரிஞ்சய சோழனின் மகன் இவர். இவர் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தார்.

ஆதித்த கரிகாலன்
ஆதித்த கரிகாலன் இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன் ஆவார். இவர் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு 957-969 ஆண்டு காலக்கட்டத்தில் சோழ சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்து வந்தார்.

உத்தம சோழன்
உத்தம சோழன், கண்டராதித்த சோழனின் மகன் ஆவார். இவர் மீண்டும் தஞ்சாவூரையே தலைநகராக கொண்டு 970-985 ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சி புரிந்தார்.

முதலாம் இராசராச சோழன்
முதலாம் இராசராச சோழன், இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன் ஆவார். இவர் தான் தஞ்சையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த கடைசி சோழ மன்னர். இவர் 985-1014 ஆண்டு காலக்கட்டத்தில் சோழ இராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வந்தார்.

முதலாம் இராசேந்திர சோழன்
முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் இராசராச சோழன் வம்சாவளி ஆவார். இவர் தான் காலம் காலமாக சோழர்களின் தலைநகராக இருந்து வந்த தஞ்சையை மாற்றி. கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகர் ஆக்கினார். இவரது ஆட்சிக் காலம் 1012-1044.

முதலாம் இராசாதிராச சோழன்
முதலாம் இராசாதிராச சோழன், முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன் ஆவார். இவர் தொடர்ந்து கங்கைக் கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு சோழ தேசத்தை ஆட்சி செய்துவந்தார். இவரது ஆட்சி காலம் 1018-1054.

இரண்டாம் இராசேந்திர சோழன்
இரண்டாம் இராசேந்திர சோழன், முதலாம் இராசேந்திர சோழனின் இரண்டாவது மகன் ஆவார். இவரது ஆட்சி காலம் 1051-1063 ஆண்டுகள் ஆகும்.

வீரராசேந்திர சோழன்
வீரராசேந்திர சோழன், இரண்டாம் இராசேந்திர சோழனின் மகன் ஆவார். இவர் 1063-1070 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலத்தில் சோழ தேசத்தை ஆட்சி செய்து வந்தார்.

அதிராசேந்திர சோழன்
வீரராசேந்திர சோழனின் மரணத்திற்கு பிறகு ஆட்சி பொறுப்பேற்ற அதிராசேந்திர சோழன் ஒருசில மாதங்களிலேயே சூழ்ச்சி மற்றும் கலகங்களின் காரணமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் 1070ஆம் ஆண்டில் ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தார். விசயாலய சோழனில் தொடங்கி அதிராசேந்திர சோழன் வரையிலான அரசர்கள் மட்டுமே விசயாலய வம்சத்தை சேர்ந்தவர்கள். அதிராசேந்திர சோழனின் மறைவிற்கு பிறகு சாளுக்கிய வம்சம் சோழ தேசத்தை ஆட்சி செய்ய தொடங்கியது.

முதலாம் குலோத்துங்க சோழன்
அதிராசேந்திர சோழனின் மறைவுக்கு பிறகு சாளுக்கிய வம்சத்தில் இருந்து முதலாம் குலோத்துங்க சோழன் சோழ தேசத்தை ஆட்சி செய்ய தொடங்கினான். இவர், 1070-1120 ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சி செய்து வந்தார்.

விக்கிரம சோழன்
விக்கிரம சோழன், முதலாம் குலோத்துங்க சோழனின் மகன். இவர் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு 1118-1136 ஆண்டு காலகட்டத்தில் ஆட்சி செய்து வந்தார்.

இரண்டாம் குலோத்துங்க சோழன்
இரண்டாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழனின் மகன் ஆவார். இவரது ஆட்சி காலம் 1133-1150 ஆண்டுகளுக்கு உட்பட்டது ஆகும்.

இரண்டாம் இராசராச சோழன்
இரண்டாம் இராசராச சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன் ஆவார். இவர் சோழ தேசத்தை 1146-1163 ஆண்டுகளில் ஆட்சி செய்து வந்தார்.

இரண்டாம் இராசாதிராச சோழன்
இரண்டாம் இராசாதிராச சோழன், இரண்டாம் இராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன் ஆவார். இவர் 1163-1178 ஆண்டுகளில் சோழ தேசத்தை ஆட்சி செய்து வந்தார்.

மூன்றாம் குலோத்துங்க சோழன்
மூன்றாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழனின் மகன். இவர் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு, சோழ தேசத்தை 1173-1218 ஆண்டு காலக்கட்டத்தில் ஆட்சி செய்தார்.

மூன்றாம் இராசராச சோழன்
மூன்றாம் இராசராச சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழனின் மகனாவார். இவர் 1216-1256 ஆண்டுகளில் சோழ தேசத்தை ஆட்சி செய்தார்.

மூன்றாம் இராசேந்திர சோழன்
மூன்றாம் இராசேந்திர சோழன், மூன்றாம் இராசராச சோழனின் மகன். இவர் 1246-1279ஆண்டுகளில் சோழ சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வந்துள்ளார்.



Click it and Unblock the Notifications











