Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
இந்தியர்களால் பொறுமை காக்க முடியாத சில வேடிக்கையான விஷயங்கள்!!!
இந்தியர்கள், சுழியத்தை கண்டுபிடித்து கணக்கை முடிவிலி ஆக்கியவர்கள். நாசாவில் முக்கியமான பொறுப்புகளில் பணிபுரியும் எராலமானவர்களில் அதிகமானவர்கள் இந்தியர் என்ற கூற்று இருக்கிறது. ஈ-மெயிலில் இருந்து, போட்டோஷாப் வரை அனைத்திலும் இந்தியர்களின் பங்கு இருக்கிறது.
இவிங்கெல்லாம் ஐ.ஐ.என்'ல படிச்சிருந்தா என்ன படிச்சிருப்பாங்க!!! சும்மா உலலாச்சுக்கும்!!!!
இவர்கள் இவ்வளவு பொறுமையாக சாதித்ததால், இந்தியர்கள் பொறுமைசாலி என யாரும் தீர்மானம் செய்துவிட முடியாது. ஏனெனில், இந்தியர்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களும் கூட பட்டியலில் அடங்காது. அவற்றில் சிலவற்றை இனிக் காண்போம்...
இந்திய மக்கள் விரும்பி சாப்பிடும் சில விசித்திர உணவுகள்!!!

திருமண பந்தி
திருமணத்திற்கு வருபவர்கள் நிஜமாகவே, வாழ்த்த வருகிறார்களா அல்ல வைத்த மொய் பணத்திற்கு சாப்பிட வருகிறார்களா என்ற எண்ணம் வரும்படி, நம்ம ஆட்கள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அவருக்கு பின்னாடி நின்று இடம் பிடிப்பார்கள்.

போக்குவரத்து இடைஞ்சல்
டிராபிக் ஜாம் ஆனால், நம்ம ஆட்கள் வெகுண்டெழுந்து விடுவார்கள். ஆனால், பெரும்பாலும் யாரும் டிராபிக் ரூல்ஸை பின்பற்ற மாட்டார்கள். இது தான் பல டிராபிக் ஜாம் ஆகவே காரணமாக இருக்கின்றது.

சாலையில் மூத்திரம் கழிப்பது
ஆத்திரத்தை கூட அடக்க முடியும் ஆனால், மூத்திரத்தை அடக்குவது கடினம் என்பார்கள். இதில், அடக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இந்தியர்களின் அகராதியிலேயே இல்லை, "உச்சா வந்தா, செவுரு ஓரமா பீச்சி அடுச்சுட்டு போயின்னே இருப்போம்'ல.."

குழந்தை பெற்றுக்கொள்வது
இந்தியர்களை பொறுத்தவரை திருமணம் ஆன பத்தாவது மாதத்தில் குழந்தை பெற்றுவிட வேண்டும். இல்லையேல், அந்த பொண்ணுக்கு எதாச்சும் பிரச்சனையோ, ஒருவேளை பையன் தான் காரணமோ இருப்பானோ. ரெண்டு பேருக்கும் ஒத்துபோகல போல.. என்று பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பணம் செலவு செய்தல்
இந்தியர்களில் தான், தனக்கு என்ன வேண்டும் என்பதை உணர்ந்து வாங்கியதை விட, பக்கத்து வீட்டுக்காரன் வாங்கிவிட்டான், உறவுக்காரன் வாங்கிவிட்டான் என்று வெறும் பகட்டிற்கு பொருள் வாங்கும் முறை இருக்கிறது. கடைசியில் கடனாளியாக மாறுவது தான் மிச்சம்.

துணி மடிப்பது
இந்திய ஆண்களுக்கு தங்களது துணியை மடித்து வைக்க வேண்டும் என்றால் உயிரே போய்விடும். பெரும்பலும், அம்மாவும், மனைவி தான் மடித்து வைப்பார்கள். தனது துணியை மடித்து வைக்கவே இந்திய ஆண்களுக்கு பொறுமை இருப்பது இல்லை. சுருட்டி, கசக்கி திணித்து வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

மாமியார் மருமகள் சண்டை
இது இந்திய ஆண்களின் பொறுமையை சோதிக்கும் அஸ்திரம். மாமியார் மருமகள் சண்டையை பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு எந்த இந்திய ஆணுக்குமே பொறுமை கிடையாது.

ப்ராக்ரஸ் கார்டு
இந்திய ஆண்களுக்கு தாங்கள் வாங்கிய மதிப்பெண்ணை அப்பாவிடம் காட்டி, அடி, உதை, திட்டு வாங்கி, கெஞ்சி கூத்தாடி கையெழுத்து வாங்கும் அளவிற்கு பொறுமை இல்லாததால் தான் தாங்களே இறங்கி அப்பாவின் கையெழுத்தை போட்டுவிடுகின்றனர்.



Click it and Unblock the Notifications
