உலகில் உள்ள விநோதமான மற்றும் கொடுமையான சில கலாச்சாரங்கள்!!!

By: Babu
Subscribe to Boldsky

உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமான கலாச்சாரங்கள் இருக்கும். அந்த கலாச்சாரங்களானது தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்படும். அப்படி உலகின் சில பகுதிகளில் பின்பற்றப்படும் கலாச்சாரங்களானது வித்தியாசமாக இருப்பதோடு, புருவங்களை உயர்த்தும் வகையிலும் இருக்கும்.

மேலும் என்ன தான் நாகரீகம் வளர்ந்துவிட்டாலும், இன்றும் அந்த விசித்திரமான கலாச்சாரங்கள் இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இங்கு அப்படி உலகில் பின்பற்றப்படும் வித்தியாசமான கலாச்சாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விரல்களை வெட்டுதல்

விரல்களை வெட்டுதல்

இந்தோனேசியாவில் உள்ள டானி பழங்குடி மக்கள் வித்தியாசமான கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர். அது என்னவெனில் குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அக்குடும்பத்தில் உள்ள பெண், கட்டாயம் தன் ஒரு விரலை வெட்ட வேண்டுமாம். (என்ன கொடுமை சரவணா இது!)

அமேசான்

அமேசான்

அமேசான் மழைக்காடுகளில் உள்ள யனோமாமோ பழங்குடியினரின் ஒரு விநோதமான கலாச்சாரம் என்னவெனில், ஒருவர் இறந்த பின்னர், அந்த உடலை இலைகளால் 30-40 நாட்கள் மூடி, தசைப்பகுதிகளை பூச்சிகள் தின்ற பின்னர், எலும்புகளை சூப் போட்டு குடிப்பார்கள்.

நெருப்பில் நடப்பது

நெருப்பில் நடப்பது

மிகவும் சவாலான ஒரு சீன கலாச்சாரம், கணவன் தன் துணைவியை தூக்கிக் கொண்டு, நெருப்பில் நடந்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

குழந்தையை தாண்டுவது

குழந்தையை தாண்டுவது

மிகவும் வண்ணமயமான நாடான ஸ்பெயினில் உள்ள ஒரு விநோதமான கலாச்சாரம் தான் குழந்தையை தாண்டுவது. அதிலும் குழந்தையை படுக்க வைத்து, ஆண் பேய் போன்று உடையணிந்து குழந்தையை தாண்டினால், அவர்களை பேய் பிசாசு அண்டாதாம்.

அடிப்பது

அடிப்பது

செக் குடியரசில், ஈஸ்டரின் போது ஒரு ஆண் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, திருமணமான பெண்களை வில்லோ கிளைகளைக் கொண்டு, சந்தோஷமான மற்றும் வளமான வாழ்க்கை வாழ அடித்து வாழ்த்துவார்கள்.

பட்டை அடி

பட்டை அடி

டென்மார்க்கில் உள்ள வேடிக்கையான ஒரு பாரம்பரியம், ஒரு ஆண் 25 வயதாகியும் திருமணமாகாமல் இருந்தால், அவனது நண்பர்களும், குடும்பத்தினரும் இலவங்கப்பட்டையால் அடிக்கும் பழக்கம் உண்டு. அதுமட்டுமின்றி, 30 வயதாகியும் திருமணமாகாமல் இருந்தால், அவன் மீது மிளகை பொடி செய்து தலை முதல் கால் வரை தூவுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bizarre Cultures That Will Leave You Boggled

We think that only Indians have the weirdest culture but we dont know that there are many such indigenous tribes in the world that are more unusual.
Story first published: Saturday, May 30, 2015, 15:35 [IST]
Subscribe Newsletter