ஆண்களின் அந்தரங்க உறுப்பைப் பற்றிய ரகசியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இரகசியங்களும், மூட நம்பிக்கைகளும் நிரம்பிய உலகம் இது. மிகுதியாக எப்போதும் தெய்வீகத்தை பற்றியும், கடவுள்கள் பற்றியும் தான் இவ்வாறான இரகசியங்களும், மூட நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், சில சமயங்களில் நமக்கே தெரியாது நமது வாழ்வியல் பற்றியும், நம்மை சுற்றி இருக்கும் சில விஷயங்கள் பற்றியும் துளியும் நம்ப முடியாத அளவு ரீலு விடுவார்கள். அவையும் சில வகையான மூட நம்பிக்கைகள் தான். இவ்வாறு கட்டுக்கதைகளை உருவி விடவே நம் ஊரில் பல குரூப்புகள் இருக்கின்றன.

ஆணுறுப்பு விறைக்கவில்லையா? அப்போ காரணம் இதுவா இருக்குமோ...?

இதெல்லாம் சரி, அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் இவர்கள் சொல்வது ஒரு ஆணின் ஆண்குறி பற்றி. உங்களில் பலர் இதை பற்றியக் கட்டுக்கதைகளை அறிந்திருக்கலாம். ஆனால், இதெல்லாம் உண்மையா? இல்லையா? என தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. இதில் என்ன பெரிய தலைவலி என்றால், இவர்கள் கூறும் வீண் கட்டுக்கதைகளை நம்பி, பெரும் குழப்பத்திலும், மன வேதனையிலும் இருப்பவர்கள் பல லட்ச ஆண்கள். இனி கவலையை விடுங்கள். இப்போது இத்தகையவர்கள் கூறும் ஆண்குறி பற்றிய கட்டுக்கதைகள் எந்த அளவு உண்மை என்பதனை தெரிந்துக் கொள்வோம்...

ஆண்களே! இதோ இயற்கை முறையில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க சில வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷூ சைஸ்

ஷூ சைஸ்

ஒருவரின் ஷூ சைஸ் வைத்து அவர்களது ஆண்குறியின் அளவை தெரிந்துக்கொள்ளலாம் என கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அப்படி பார்த்தல் உயரமாக இருப்பவர்களுக்கு மட்டும் தான் ஆண்குறி பெரியதாக இருக்க முடியுமா என்ன? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. ஆண் குறி என்பது எவ்வளவு அடி நீங்கள் உயரமாக உயர்ந்தாலும் உங்கள் டி.என்.ஏ மற்றும் உடற்திறனை பொறுத்து தான் அதன் வளர்ச்சி இருக்கும். மற்றபடி ஷூ சைஸ்க்கு ஏற்றவாறு எல்லாம் இருக்காது.

உடைந்துவிடும்

உடைந்துவிடும்

மிக வேகமாகவோ அல்லது மிருகத்தனமாகவோ உடலுறவுக்கொள்ளும் போது ஆண்குறி உடைந்துவிடும் என்று சிலர் கூறுவது உண்டு. அப்படி எல்லாம் இல்லை. ஏனெனில் முதலாவதாக நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியது , ஆண்குறி எலும்பால் ஆன பகுதி அல்ல என்பதே. ஆனால், ஆண்குறியில் காயங்களும், தசை கிழிதல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பெரியதாக்க

பெரியதாக்க

இந்த மாத்திரைகள் சாப்பிடுங்கள், இந்த க்ரீமை உபயோகியுங்கள், அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளுங்கள் உங்களது ஆண்குறி பெரியதாக்கிவிடலாம் என யாராவது கூறினால், துளியும் நம்பிவிட வேண்டாம் அப்படி எல்லாம் ஆண்குறியை பெரிதாக்க முடியாது. இயற்கையாக ஒரு ஆணுக்கு ஆண்குறி எவ்வளவு வளருமோ அவ்வளவு தான் வளரும். இது ஒவ்வொரு ஆணுக்கும் அவரவர் உடல்திறன் மற்றும் தன்மையை பொறுத்தது.

 விறைப்புத்தன்மை

விறைப்புத்தன்மை

உடலுறவுக் கொள்ளும் போது, ஒரு முறை பெண்ணுடன் உடலுறவுக் கொண்டப் பின்னரும் கூட சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை அப்படியே இருக்கும். இது நீங்கள் மறுமுறையும் உடல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்பதற்கான அறிகுறி எல்லாம் இல்லை. ஒவ்வொரு ஆணிற்கும் அவர்களது இரத்த ஓட்டத்தின் நிலைக்கு ஏற்றவாறு தான் விறைப்புத்தன்மை அதிகரிக்கும். ஒரு முறை உடலுறவுக் கொண்ட பின், உடனே மறுபடியும் உடலுறவில் ஈடுபட வேண்டாம். சற்று நேர அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள். இது இருபாலருக்கும் உகந்ததல்ல.

வளைந்து காணப்படுவது

வளைந்து காணப்படுவது

ஒரு சில ஆண்களுக்கு அவர்களது ஆண்குறி விறைப்படையும் போது சற்று வளைந்து காணப்படும். இதை பிரச்சனை என்பார்கள். அப்படி எல்லாம் இல்லை. பல ஆண்களுக்கு இது போல ஏற்படுவது உண்டு. ஆனால், மிகவும் வளைந்துக் கொண்டே போவதாக நீங்கள் உணர்ந்தால் தகுந்த மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். இது ஒரு வகையான ஆண்குறி நோயாக கூட இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Major Myths About Men's Secret Organ

Do you know about the 5 major myths about men's secret organ, read here.
Subscribe Newsletter