For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் உள்ள மிகவும் விசித்திரமான சில கின்னஸ் சாதனைகள்!!!

By Maha
|

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அதில் சிலர் உலக அளவில் பிரபலமாக வேண்டும் என்று மிகவும் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு சாதனை படைக்க முயல்வார்கள். அப்படி உலகில் சாதனை படைத்தவர்கள் அனைவரது பெயரும் கின்னஸ் என்னும் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த புத்தகத்தில் இடம் பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு நிறைய கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும்.

உலகில் உள்ள 9 மிகப்பெரிய சாதனைகள்!!!

இங்கு அப்படி உலகில் மிகவும் விசித்திரமான சாதனைகளைப் படைத்தவர்களைப் பட்டியலிட்டுள்ளோம். இந்த சாதனைகள் அனைத்தும் நினைத்துப் பார்க்க முடியாதவை மட்டுமின்றி, நகைச்சுவையானதாகவும் இருக்கும். சரி, இப்போது உலகில் உள்ள மிகவும் விசித்திரமான 10 சாதனைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோட்டார் ரம்பம்

மோட்டார் ரம்பம்

சர்க்கஸ் சென்றால், அங்குள்ள கோமாளிகள் மூன்று பந்துகளை மேலே தூக்கிப் போட்டு பிடித்து விளையாடுவார்கள் அல்லவா? அதேப் போல் ஸ்லோவாகியாவைச் சேர்ந்த மிலன், 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம், பந்திற்கு பதிலாக 2-3 மோட்டார் ரம்பத்தை 62 முறை வெற்றிகரமாக தூக்கிப் போட்டு பிடித்துள்ளார். உண்மையிலேயே இந்த சாதனை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கும்.

விக்கல்

விக்கல்

அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் ஆஸ்போர்ன் விக்கலில் சாதனைப் படைத்துள்ளார். எப்படியெனில், 1922 இல் ஒருமுறை அவர் மீது 136 கிலோ எடையுள்ள பன்றி ஒன்று விழுந்தது. அப்போதிருந்து, 1990 வரை, சுமார் 68 ஆண்டுகளாக பத்து நொடிகளுக்கு ஒருமுறை விக்கிக் கொண்டே இருந்தார். என்ன ஒரு கொடுமை பார்த்தீர்களா? இருப்பினும் இதனால் அவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டார்.

வலிமையான தாடி

வலிமையான தாடி

பொதுவாக தலையில் இருந்து ஒரு முடியை இழுத்தாலே வலி தாங்க முடியாது. அதிலும் முகத்தில் என்றால் சொல்லவே வேண்டாம். இருப்பினும், ஸ்பெயினைச் சேர்ந்த ஸ்மாயில் ரிவாஸ் பால்கான், தனது தாடியால் 2,753,1 கிலோ எடையுள்ள ரயிலை 10 மீட்டர் இழுத்து சாதனைப் படைத்துள்ளார்.

ஸ்பூன் சாதனை

ஸ்பூன் சாதனை

சாதாரணமாக ஸ்பூனை சாப்பிட பயன்படுத்துவோம். அதே ஸ்பூனை வைத்து ஒரு விளையாட்டு உள்ளது. அது ஸ்பூன் மேலே எலுமிச்சையை வைத்து, அந்த எலுமிச்சை கீழே விழாமல் செல்ல வேண்டும். ஆனால் டிம் ஜான்ஸ்டன் சற்று வித்தியாசமாக, தனது 12 ஆவது வயதில் 15 ஸ்பூனை முகத்தில் 30 நொடிகள் தாங்கி, வித்தியாசமான உலக சாதனையைப் படைத்துள்ளார்.

பாம்பு மனிதன்

பாம்பு மனிதன்

பாம்பு என்றால் படையே நடுங்கும். ஆனால் அத்தகைய பாம்பைக் கொண்டே ஒருவர் சாதனைப் படைத்துள்ளார். அது என்னவெனில் அமெரிக்காவில் உள்ள ஜாக்கி பிப்பி என்பவர் 2001-இல் தனது வாயில் 8 சாரைப்பாம்புகளின் வால் பகுதியை தனது வாயால் கவ்விக் கொண்டு 12.5 நொடிகள் இருந்தார்.

லிப்-டூ-லிப் கிஸ்

லிப்-டூ-லிப் கிஸ்

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியர் 58 மணிநேரம் 35 நிமிடங்கள் மற்றும் 58 நொடிகள் உதட்டோடு உதடு முத்தத்தை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து பரிமாறி கின்னஸ் சாதனை படைத்தனர்.

உலகின் சிறந்த கஞ்சன்

உலகின் சிறந்த கஞ்சன்

எத்தனையோ விதவிதமான சாதனைகளில் ஒன்று தான் உலகின் சிறந்த கஞ்சன் என்ற சாதனை படைப்பது. அதில் சிறந்த கஞ்சன் என்ற சாதனையை ஹெட்டி கிரீன் என்ற பெண்மணி படைத்தார். இவர் ஒரு காலகட்டத்தில் மிகவும் பணக்கார பெண். ஆனால் இவர் எந்த செலவும் செய்யவேமாட்டார். அதில் குளிப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தமாட்டார். ஒரே ஒரு கருப்பு நிற உடை மற்றும் உள்ளாடையை கிழியும் வரை பயன்படுத்துவார். ஒருமுறை அவரது மகனது கால் உடைந்துவிட்டது. வலியால் அவரது மகன் துடிக்க, அப்போதும் மருத்துவ சிகிச்சை அளிக்க இலவச மருத்துவ முகாமை தேடியே சிகிச்சை அளித்தார். எப்படி ஒரு கஞ்சம் என்று பார்த்தீர்களா?

ஐஸ் மனிதன்

ஐஸ் மனிதன்

இது மற்றொரு விசித்திரமான சாதனை. அது என்னவெனில் விம் ஹோஃப் என்னும் டச்சுக்காரர் ஐஸ் கட்டிகளுக்கு நடுவே நீண்ட நேரம் இருந்து முதல் முறையாக சாதனை படைத்தார். அவரது சாதனையை அவரே 2011 இல் இரண்டு முறை முறியடித்தார். அதில் பிப்ரவரி மாதத்தில் இன்செல்லிலும், நியூயார்க்கில் நவம்பர் மாதத்திலும் முறியடித்தார். தற்போது அதிலும் 1 மணிநேரம் மற்றும் 52 நிமிடங்கள் மற்றும் 42 நொடிகள் ஐஸ்கட்டிகளுக்கு நடுவே இருந்தார். எவ்வளவு கடினமான மற்றும் வித்தியாசமான சாதனை என்று பார்த்தீர்களா?

மோசமான சாதனை

மோசமான சாதனை

இது தான் இருப்பதிலேயே அனைவரது மூக்கையும் மூடும் படியானது ஒரு மோசமான சாதனை. அது என்னவெனில் லண்டனைச் சேர்ந்த பெர்னார்ட் கிளிம்மன்ஸ் என்பவர் உலகிலேயே நீண்ட நேரம் வாயு (குசு) வெளியேற்றியவர். உங்களால் நம்ப முடியவில்லை தானே! அதிலும் இவர் 2 நிமிடம் 42 நொடிகள் வாயுடிவ தொடர்ச்சியாக வெளியேற்றினார்.

ஒருவேளை வயிற்றிற்கு உள்ளே ஏதாவது இயந்திரம் வெச்சிருப்பாரோ?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 9 Weird World Records

Here are the top 9 weirdest world records that would justify the audacity of people to hold records!
Desktop Bottom Promotion