புது ஆடைகள் அணியும் போது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

புது ஆடைகள் என்றாலே நம் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. விசேஷங்களின் போது தான் பலரும் புது ஆடைகளை அணிகிறார்கள். இருப்பினும் அனைவரையும் ஈர்ப்பதற்காக சிலர் புது ஆடைகளை அணிகிறார்கள்.

ஆனால் புது ஆடைகளை அணிவதற்கு முன்பு நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை சில உள்ளது. இதனால் அனைத்து வகையான வியாதிகள், எதிர்மறையான ஆற்றல் திறன்கள் மற்றும் தீய நோக்கங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். புது ஆடைகளை அணியும் போது நீங்கள் செய்ய வேண்டியவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

Things To Remember Every Time You Wear New Clothes

* புது ஆடைகளை அணியும் போது சிலர் ஏதாவது நோய்வாய் படுவார்கள் அல்லது ஏதேனும் பிரச்சனையை சந்திப்பார்கள். அப்படி திடீரென அவர்கள் நோய்வாய் பட்டால், அது எதிர்மறை ஆற்றல் திறனால் தான் என நம்புவார்கள். இவ்வகையான எதிர்மறை ஆற்றல் திறன்களில் இருந்து ஒருவர் தப்பிக்க, புது ஆடைகளை அணியும் போது நாம் ஒரு சின்ன விஷயத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். புது ஆடைகளை அணிவதற்கு முன்பாக அதை கண்டிப்பாக ஒரு முறை துவைக்க வேண்டும். அப்படி செய்வதால் ஆடைகளில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கும். பொதுவாகவே ஆடைகளை வாங்கும் போது பலரும் அதனை அணிந்து பார்ப்பார்கள். அதனால் நீங்கள் வாங்கும் ஆடையை அதற்கு முன்பாக பலரும் அணிந்து பார்த்திருக்கலாம் அல்லவா? அதனால் புது ஆடைகளை அணிவதற்கு முன்பாக அதை துவைப்பது நல்லது.

* நீங்கள் வாங்கியிருக்கும் புது ஆடைகளை இதற்கு முன் யாரெல்லாம் அணிவித்து பார்த்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியாது. அவர்களில் சிலருக்கு சில வியாதிகள் அல்லது சரும நோய்கள் இருந்திருக்கக்கூடும். அப்படிப்பட்ட துணிகளை நீங்கள் துவைக்காமல் அணிந்தால், நீங்களும் நோய்வாய் படலாம். அணிவதற்கு முன்பு புது ஆடையை துவைக்க விருப்பமில்லை என்றால், அதை அணிவதற்கு முன்பு சூரிய ஒளியிலாவது சிறிது நேரம் அதனை காட்டவும்.

* உங்கள் பழைய ஆடைகளை கழிக்க போகிறீர்கள் என்றால் எப்போதுமே அதனை சற்று கிழித்து விட்ட பிறகே அதனை கழிக்க வேண்டும். இதனால் உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் குறையும். உங்கள் ஆடைகளை தானமாக அளித்தீர்கள் என்றால், அதனை பெற்றுக் கொண்டவர்கள் அதனை கண்டிப்பாக அணிகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு உதவியை இருக்கும்.

* புது ஆடைகளோடு சில நல்ல சகுனங்களும், கெட்ட சகுனங்களும் சம்பந்தப்படுத்தபடும். ஒருவர் புது ஆடை அணியும் போது, அது கிழிந்து விட்டாலோ அல்லது தீயில் பட்டு விட்டாலோ அதனை ஒரு கெட்ட சகுனமாக கருதுவர். அப்படியானால் உங்களுக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட போகிறது என்பதை சுட்டிக்காட்டும் அறிகுறியாக இது கருதப்படும்.

* ஆடைகள் வாங்குவதற்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. சனிக்கிழமைகளில் புது ஆடைகள் வாங்குவதை தவிர்க்கவும். அதே போல் ஞாயிறுக்கிழமைகளில் புது ஆடைகளை அணியாதீர்கள்.

English summary

Things To Remember Every Time You Wear New Clothes

One thing has to be remembered while wearing new clothes so that they become a protective shield against all diseases, negative energies and bad intentions.Click on this slide show to know what you should do every time you wear new clothes….
Subscribe Newsletter