உலகத்தில் உள்ள மிகவும் ஊழல் மிக்க காவல் துறைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

ஒரு நாட்டின் காவல் துறை திறம்பட செயல்படுவதன் அடிப்படையில் தான் அந்த நாடு அமைதியான நாடாக கருதப்படும் என்பது அனைவரும் நன்கு அறிந்த தகவலே. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, உலகத்தில் பல நாடுகளில் உள்ள காவல் துறைகள் தகுதியற்று, போதிய பணியாளர்கள் இல்லாமால், போதிய பயிற்சி இல்லாமல், போதிய ஊக்கம் இல்லாமல் மற்றும் முக்கியமாக ஊழல் நிறைந்து உள்ளனர். ஊழல் நிறைந்த காவல் துறை இருக்கும் நாடு என்றுமே வளமை அடையாது. அதே போல் அந்நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வருகை தருபவர்களையும் அதன் அழகு ஈர்க்காது. இப்போது அப்படி உலகத்தில் உள்ள மிகவும் ஊழல் நிறைந்த காவல் துறையைப் பற்றி தான் இன்று நாம் பார்க்க போகிறோம்.

உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான 11 நாடுகள்!!!

உலகத்தில் உள்ள மிகவும் ஊழல் நிறைந்த காவல் துறையை பார்க்கையில், ஒன்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; அந்நாட்டின் அரசாங்கத்தை நடத்தி கொண்டிருப்பவர்கள் ஊழல் அரசாங்கங்கள். அதனால் மறைமுகமாக உலகத்தில் உள்ள ஊழல் நிறைந்த அரசாங்கங்களைப் பற்றியும் நாம் பார்க்க போகிறோம். இருப்பினும் நாம் நேரடியாக கவனம் செலுத்த போவது ஊழல் நிறைந்த காவல் துறை பற்றி தான். அதன் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உலகத்தில் உள்ள முதன்மையான 10 சக்தி வாய்ந்த ராணுவங்கள்!!!

உலகத்தில் ஊழல் மிக்க 8 காவல் துறைகளை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். போதிய நடவடிக்கை எடுக்காமை, பயனின்மை, தகுதியின்மை மற்றும் உணர்ச்சி அல்லாத அடிப்படையில் ஏறு வரிசையில் அவர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெக்சிகோ

மெக்சிகோ

மெக்சிகம் காவல் துறை, முக்கியமாக அமெரிக்க எல்லையில் உள்ளவர்கள், கடமை தவறுவதற்காக நன்கு அறியப்படுபவர்கள். போதை வணிகம் மற்றும் எல்லையில் அதனை கடத்துவதற்கும் அவர்கள் துணை போகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம்.

இந்திய காவல் துறை

இந்திய காவல் துறை

உணர்ச்சியற்ற, ஊக்கமற்ற மற்றும் தகுதியற்றவர்களாக அறியப்படும் இந்திய காவல் துறையில் இந்திய அரசியல்வாத அமைப்பினால், அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது. உலகத்தில் உள்ள மிகவும் மெதுவான காவல் துறைகளில் இந்தியாவும் ஒன்று. காவல் துறையின் அக்கறையின்மை பரவலான ஒன்றே. பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு மற்றும் வன்முறைக்கான வழக்குக்களை சில பொருத்தமற்ற காவல் அதிகாரிகள் தவிர்ப்பதும் நன்கு அறியப்பட்டதே.

சூடான்

சூடான்

சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் அங்கீகாரத்துடன் தனி நாடாக தெற்கு சூடான் மாறும் வரை, அங்கே உள்நாட்டு போர்கள் பரவலாக நடைபெற்று வந்தது. சூடான் நாட்டின் காவல் துறை மிகவும் ஊழல் மிக்கவர்கள். மேலும் தகுதியற்றவர்களும் கூட.

சோமாலியா

சோமாலியா

இந்த பட்டியலில் முற்றுகையிடப்பட்ட சோமாலியா நாடு இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. போதைப் பொருட்களின் மன்னர்களும், கடற்கொள்ளையர்களும் தான் சோமாலியாவில் ஆட்சி புரிகின்றனர். இங்கே உள்ள காவல் துறையினர் அதிகபட்சமான தகுதியின்மையை வெளிக்காட்டியுள்ளனர்.

கென்யா

கென்யா

இந்த பட்டியலில் அடுத்து வருவது கென்யா நாட்டு காவல் துறை. காவல் துறையிடம் பிடிபடும் போது, கென்யா நாட்டு ஜனத்தொகையில் 90% பேர்கள் லஞ்சம் கொடுத்து தப்பித்து கொள்கின்றனர்.

பாகிஸ்தான் காவல் துறை

பாகிஸ்தான் காவல் துறை

சோம்பேறித்தனம் மற்றும் அதிக அளவிலான பயனற்றதன்மைக்கு புகழ் பெற்றவர்களாக விளங்குகின்றனர் பாகிஸ்தான் நாட்டு காவல் துறை. சொல்லப்போனால் அவர்களின் தகுதியின்மையின் அளவுகளை பார்க்கையில் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.

ஈராக் நாட்டு காவல் துறை

ஈராக் நாட்டு காவல் துறை

ஈராக் நாட்டில் சமீபத்தில் நடந்த உள்நாட்டு போர் நிலைமைகளை மோசமடையச் செய்துள்ளது. சொல்லப்போனால் காவல் துறையினரே இங்கு மிகப்பெரிய குற்றவாளிகளாக உள்ளனர்.

சிரியா

சிரியா

அந்நாட்டு ராணுவத்துடன் உடந்தையாக செயல்பட்டு ஆயிரக்கணக்கான குடிமகன்களை சிரியா நாட்டு காவல் துறை கொன்று குவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிலடங்கானவை. மேலும் இங்கு காவல் துரையின் தகுதியின்மையும், கடமை தவறுதலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Corrupt Police Forces In The World

Here are the 8 most corrupt police forces in the world.We look at the most corrupt police forces in increasing order of inaction,inefficacy & incompetence.
Subscribe Newsletter