For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளை கண்காணிப்பதற்காக ஃபேஸ்புக்கிற்கு தாவும் பெற்றோர்கள்!

By Boopathi Lakshmanan
|

இன்றைய நாட்களில், ஒரு மனிதரைப் பற்றி உங்களுக்கு ஓரளவு மட்டுமே தெரியும், ஆனால் மேலும் பல விபரங்களை தெரிந்து கொள்ள நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் மனதிற்கு முதலில் வருவது ஃபேஸ்புக் தான். ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயதை சேர்ந்தவர்கள் மட்டும் தான் ஃபேஸ்புக் பயன்படுத்தலாம் என்பதையும், தாண்டி அனைவரையும் கவர்ந்த சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் உள்ளது.

தற்போதைய ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு வயது வரம்புகள் எதுவும் இல்லை. அதிலும், பிள்ளைகளைப் பெற்றவர்கள் பலரும், தங்களுடைய குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் விதமாக, ஃபேஸ்புக்கில் உறுப்பினர்களாக சேர்ந்து வருவது இந்த சமூக வலைதளத்தின் புதிய பரிணாமமாக உள்ளது.

உங்களுடைய பெற்றோர்கள் ஃபேஸ்புக்கில் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஃபேஸ்புக்கில் நுழைந்தவுடன், உங்களுடைய தாய் அல்லது தந்தையின் நண்பருக்கான கோரிக்கை வரவேற்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்? இந்த சூழலுக்கு தயாராகிக் கொள்ளுங்கள். இவ்வாறு நிகழ்வதற்கு பின்னணியில் என்ன காரணம் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா? ஃபேஸ்புக்கில் பெற்றோர்கள் சேர்வது, 'சாட்' செய்யவோ, மற்றவர்களுடன் பழகவோ அல்லது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவோ இல்லை. இதற்கு மாறாக, தங்களுடைய குழந்தைகளின் நடவடிக்கைகளை அவர்கள் கவனிக்க, ஃபேஸ்புக்கை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Parents Switching To Facebook To Keep Track Of Their Children

Parents join Facebook not to socialize or have fun by posting status and photos. Instead, they are there to keep an eye on their children.
Desktop Bottom Promotion