For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம் வயதிலேயே மரணத்தை தழுவிய புகழ் பெற்ற மனிதர்கள்!!!

By Ashok CR
|

புகழ் பெற்றவர்களின் விரைவான மரணத்தின் பின்னணியில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. அப்படி என்ன தான் நடந்திருக்கும் என கண்டிப்பாக நீங்கள் யோசிப்பீர்கள். நம் பண்பாட்டு வாழ்க்கையை ஆண்ட அவர்களுக்கு அழிவில்லை என்று தான் நாம் நினைத்திருப்போம்.

ஆனால் உண்மை என்னவென்றால் சீற்றம் மற்றும் பைத்தியகாரத்தனத்தால் அவர்கள் தங்களை தாங்களே மாய்த்திருப்பார்கள் என்பது ஒரு சோகமான உண்மையாகும். இள வயதிலேயே மரணத்தை தழுவியுள்ள புகழ்பெற்றவர்களின் பட்டியல் மிகவும் பெரியது. ஆனால் உண்மையில் அவர்கள் இறப்பதில்லை. இரவு வானில் இன்னமும் கூட நட்சத்திரமாக ஜொலித்து அவர்களின் தூய்மையினால் நம்மை அதிசயிக்க வைக்கிறார்கள்.

சுவாரஸ்யமான வேறு: பிரபலங்களின் திகைப்பூட்டும் மரணங்கள்!!!

இந்த உலகையே ஒரு புயலாக வளம் வந்த சில இசை கலைஞர்கள், ஓவியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் இருந்த சுவடே தெரியாமல் திடீரென மறைந்தும் போனார்கள். அவர்களின் சிலரைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜிம் மோரிசன்

ஜிம் மோரிசன்

ராக் அண்ட் ரோல் இசையை ஒரு புயலை போல் பரப்பிய பெருமை இந்த மிகப்பெரிய கலைஞனை தான் சாரும். பெரிய பாடகரான ஜிம் மோரிசன், 1971-ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் தன்னுடைய 27-ஆவது வயதில் இறந்தார். போதை பொருளான ஹெராயினை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால், தன் குளியல் தொட்டியில் பிணமாக கிடந்தார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரின் மரணத்தில் எந்த வித சந்தேகங்களும் எழவில்லை என்பதால், பிண ஆராய்வு எதுவும் செய்யப்படவில்லை. 27 வயதில் மோரிசன் இறந்ததால் 27 க்ளப்பில் அவர் உறுப்பினரானார்.

வின்சென்ட் வான் கோக்

வின்சென்ட் வான் கோக்

சிறந்த ஓவியர்களில் ஒருவரான வான் கோக், தன் நெஞ்சில் தன்னை தானே தன் 37-ஆவது வயதில் சுட்டுக்கொண்டார். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டார் என்ற நம்பிக்கையும் நிலவியது. தன் சுய உருவப்படங்கள், மற்றும் தினமும் தான் பார்த்த வாழ்க்கையை உலகஞ்சார்ந்த முறையில் வரைந்ததன் மூலம் ஓவியத்தில் ஒரு புரட்யையே ஏற்படுத்தினார். ஸ்டாரி நைட்ஸ், தி பொடேடோ ஈட்டர் மற்றும் தன் சுய உருவப்படும் போன்றவைகள் அவரின் புகழ் பெற்ற ஓவியங்களில் சில.

ப்ரூஸ்லீ

ப்ரூஸ்லீ

சீன மார்ஷியல் கலை வெற்றிப்படங்களை அளித்த ப்ரூஸ்லீ தன்னுடைய 32 வயதில் இறந்தார். திடமான கட்டமைப்புடன் இருந்த ப்ரூஸ்லீ ஹாங்காங்கில் உள்ள கோல்டன் ஹார்வெஸ்ட் ஸ்டுடியோஸில் "என்ட்டர் தி ட்ராகன் படத்திற்காக டப்பிங் செய்து கொண்டிருந்த போது, தலை வலியால் நிலை குலைந்து இறந்தார். மிகவும் விசித்திரமான முறையில் அவர் இறந்ததால், அவர் மரணத்தின் மீது பல சந்தேகங்களும் வியூகங்களும் எழுப்பப்பட்டன.

ஜேம்ஸ் டீன்

ஜேம்ஸ் டீன்

ஜேம்ஸ் டீன் 24 வயதில் இறந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாகும். அவர் காலத்தில் ஹாலிவுட் துறையில் மிகவும் புகழ் பெற்ற நட்சத்திரமாக விளங்கினார் அவர். மேலும் உலகம் முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்து வந்தவராவார். "ஈஸ்ட் ஆஃப் ஈடன்' என்ற அவருடைய படம் ஆஸ்கர் பரிந்துரையை பெறும் சில மாதங்களுக்கு முன்பு தான், ஒரு கொடூரமான கார் விபத்தில் அவர் மரணமடைந்தார்.

ஆர்தர் ரிம்பாத்

ஆர்தர் ரிம்பாத்

அறிவு ஜீவியான ஆர்தர் ரிம்பாத் ஒரு மிகப்பெரிய பிரெஞ்சு கவியாவார். தன்னுடைய 21-ஆவது வயதில் எழுதுவதை நிறுத்திய அவர், அதன் பின், ஆப்ரிக்காவில் பல வருடங்கள் வாழ்ந்தார். அப்போது வலது மூட்டு உறை அழற்சியால் பாதிக்கப்பட்டு தன்னுடைய 37-ஆவது வயதில் மார்சீல் என்ற இடத்தில் மரணமடைந்தார். சிம்பாளிஸ்ட் அமைப்பில், அக்காலத்தில் அவர் பெரும் புள்ளியாக திகழ்ந்தார். அதன் மூலம் புகழையும் பெற்றார்.

அமரு டுபாக் ஷகூர்

அமரு டுபாக் ஷகூர்

ஹிப் ஹாப் மற்றும் ராப் நடனத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த டுபாக் ஷகூர், தன்னுடைய 25-ஆவது வயதில் மரணமடைந்தார். லாஸ் வேகஸ், நெவடாவில் நடந்த மைக் டைசன் குத்துச் சந்தை போட்டியை கண்டு திரும்பும் வேளையில் அவர் சுடப்பட்டார். கறுப்பர்களின் உரிமை மற்றும் துன்பங்களை தன்னுடைய ராப் நடனம் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் இவர். அதனால் உலகத்தை சுற்றி அவருக்கு பல விசிறிகள் உண்டு. சொல்லப்போனால் அவர் தன் மரணத்தின் போது அதிகமான ரசிகர்களை பெற்றார்.

இப்போது கூட, இள வயதிலேயே பல கலைஞர்கள் இறக்கிறார்கள். அப்படி சமீபத்தில் மரணமடைந்தவர் பிலிப் செய்மோர் ஹாஃப்மேன்.

மகாகவி சுப்ரமணிய பாரதியார்

மகாகவி சுப்ரமணிய பாரதியார்

இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் தான் பாரதியார். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். இவர் 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டு, செப்டம்பர் 11, 1921 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Famous People Who Died Young

Here is a mix of musicians, painters, authors, and film stars who took the world by storm and died all of a sudden at young age.
 
Desktop Bottom Promotion