For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரந்த மனப்பான்மை கொண்ட பொதுநலவாதிகள் பெறும் நன்மைகள்!!!

By Ashok CR
|

சமூகத்தில் குழுக்களாகவும், சமூக அமைப்புகளுக்காகவும் தங்கள் வாழ்வை அர்பணிப்பவர்கள் சமூக நல வாதிகள் அல்லது சமூக ஆர்வலர்கள். இவர்கள் சில நேரங்களில் தங்களுடைய பேச்சின் மூலம், மக்களை சுற்றி அமரச்செய்து, அவர்களின் பொழுது போக்கிகளாக அமைகின்றனர். அவர்கள் இருக்கும் இடம், எப்போதும் துடிப்பாக இருக்கும். அவர்களுடைய ஆர்வம் அவர்களுக்கு, எந்த சூழ்நிலையிலும் அதை சமாளிப்பதற்கான ஆற்றலைத் தரும். அனைவரிடமும் பேசி பழகி தொடர்பு கொள்ளும் திறமை அவர்களுக்கு அதிகம். இது அவர்களுக்கு ஒரு பெரிய நன்மையாக அமையும்.

சமூக ஆர்வலர்கள், பல நன்மைகளை பெறுவர். பொதுவாக அவர்களுக்கு புது மனிதர்களிடம் பழகும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கும். மேலும் நண்பர்கள் அதிக அளவில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். இதனால் அவர்களுக்கு தனிவாழ்விலும் பல பயன்கள் உள்ளன. அவர்கள் எப்போதும் பிரபலமாக பேசப்படுவர். அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள எதுவும் சிறப்பாக செய்ய வேண்டியதில்லை. அனைவரின் கவனமும் அவர்களின் மேல் எப்போதும் இருக்கும். இது அவர்களின் பிறப்புரிமை.

சமூக ஆர்வலராக இருப்பதால் விளையும் நன்மைகளை கீழே காணலாம்.

Benefits Of Being An Extrovert

சமூக எழுச்சி

சமூக ஆர்வலர்கள், பெரும்பாலும் மற்ற உயிர்களுக்காகவே வாழ்கின்றனர். இதனால் அவர்கள் எப்போதும் சமூக எழுச்சியுடனே இருக்கின்றனர். இதனால் அவர்கள் வாழ்வில் புது மனிதர்களிடம் தொடர்பு கொண்டும், புது அனுபவங்களை பெற்றுக் கொண்டும் வாழ்கின்றனர். இதனால் அவர்கள் மற்றவர்களை புரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுகின்றனர். மேலும் இவர்கள் எப்போதும் அனைவரின் கவனத்தையும் பெறுகின்றனர். இவர்கள் கவர்ந்திழுக்கும் தங்களின் பேச்சால், மக்களை வசப்படுத்துகின்றனர்.

துரித வளர்ச்சி

சமூக ஆர்வலர்கள், மற்றவர்களை விட வாழ்க்கை நெறியில் அதிக வளர்ச்சியை அடைகின்றனர். அவர்கள் தங்களுடைய மன உறுதியால் எளிதில், மக்களை கவர்ந்து இழுக்கின்றனர். அவர்கள் குறுகிய காலத்தில் பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனால் அவர்களின் லட்சியத்தை எளிதில் அடைகின்றனர். இது அவர்களின் துரித வளர்ச்சிக்கும், தொழில் முன்னேற்றத்திற்கும் மிகவும் நல்லது.

வெளிப்படுத்துதல்

பொது நல நோக்குள்ளவர்கள், சுயநலவாதிகளோடு ஒப்பிடும் போது, உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வல்லவர்கள். இவர்கள் அனைவரிடமும் மனம் திறந்து பழகுபவர்கள் ஆவர். உணர்வுகளை எளிதில் வெளிபடுத்தி விடும் அவர்களின் இந்த குணம், அவர்கள் மனதை பளுவின்றி, இளைப்பாறும் படி வைக்கும். இதனால் அவர்களின் மனஅழுத்தம் நீங்கி, இனிய மன நிலையை பெறுவர். பொது நல நோக்குள்ளவர்கள், உணர்வுகளை மற்றவர்களுக்கு முன்னிலையிலேயே வெளிப்படுத்துவதால், இவர்களுக்கு நண்பர்கள் அதிக அளவில் அமைகின்றனர். இந்த குணமே, சில நேரங்களில் எதிரிகளை தோற்றுவிக்கின்றன.

ஆரோக்கியம்

அதிக அளவில் பேசுவதாலும், உணர்வுகளை முழுவதும் வெளிப்படுத்துவதாலும் சமூக நல வாதிகள் நல்ல ஆரோக்கியத்தை பெறுகின்றனர். இந்த இரு பண்புகளால் அவர்களுடைய மனமும், ஆத்மாவும் நிம்மதியை பெறுகின்றன. எனவே மன அழுத்தமும், மன வேதனையும் குறைந்து, உடல் நலத்திற்கு எதிரான விளைவுகள் அனைத்தும் குறைகிறது. பொதுவாக, அனைவரிடமும் மனம் விட்டு பேசி, மகிழ்வோடு வாழ்பவர்களைக் காட்டிலும், தங்கள் மனத்திற்கு உள்ளே அனைத்தையும் புதைத்து வைத்து, யாரிடமும் பேசாமல், சிரிக்காமல் இருப்பவர்கள் எளிதில் உடல் நல குறைவிற்கு ஆளாவர்.

பொழுது போக்கு

பொதுவாக சமூக நலவாதிகள் எளிதில், சுவாரஸ்யமின்றி அலுத்து போக மாட்டார்கள். அவர்கள் ஏதேனும் ஒன்றை செய்து கொண்டும், அல்லது யாரிடமாவது எதையாவது பகிர்ந்து கொண்டும் இருப்பர். இதனால் அவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் அவர்களை மொய்த்துக் கொண்டு இருக்கும். இதன் மூலம் அவர்கள் ஊரில் புகழ் பெற்றவராகவும், முக்கியமானவராகவும் திகழ்வர். இதுவும் அவர்களுக்கு ஒரு நன்மையே. மக்கள் அனைவரையும் தங்களுடைய நடவடிக்கையால் கவர்ந்திழுப்பர். இதனால் அவர்களுடைய நட்பை எல்லோரும் விரும்புவர். சமூக நல வாதிகளின் அடையாளமே அவர்களுடைய ஆற்றல். ஆனால் அவர்கள் சில நேரங்களில் வெறும் கோமாளியாகவே கருதப்படுகின்றனர். இது அவர்கள் அடையும் தீமைகளில் ஒன்று. இதனால் மக்களுடன் பழகும் போது, அவர்களுடன் அளவான விருந்தோம்பலை கடைபிடிக்க வேண்டும்.

English summary

Benefits Of Being An Extrovert

Benefits of being an extrovert are plenty. Extroverts enjoy many advantages and have a big social circle. Here are some pros of being an extrovert.
Desktop Bottom Promotion