For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யூதர்களின் 6 விந்தையான உணவு சட்டங்கள்!!!

By Ashok CR
|

ஒவ்வொரு மதத்திலும், பண்பாட்டிலும் பல்வேறு வகையான சட்டங்கள் உள்ளன. நடத்தை, ஒழுக்கம் மற்றும் பழக்கங்களுக்கென பல சட்டங்கள் உள்ளது. சில சமயஞ்சார்ந்த சமுதாயங்கள் மற்றும் பண்பாடுகளில் ஒழுக்க நடத்தை, பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைக்கு பல வகையான சட்டங்கள் உள்ளன. இவை அனைத்திலுமே, உலகத்தை சுற்றி பல விசித்திரமான சட்டங்கள் உள்ளது.

சில சமுதயாங்களில் உணவுகளை சமைக்கவும் உணவு உண்ணும் பழக்க வழக்கங்களிலும் பல விசித்திரமான சட்டங்கள் உள்ளது. யூதர்களின் உணவு சட்டங்கள் மிகவும் விசித்திரமாக இருக்கும். அதை பல சமுதாயங்கள் கேள்வி பட்டிருக்கவே செய்யாது. அப்படிப்பட்ட சட்டங்களில் இருந்து ஒரு 6 விந்தையான யூதர்களின் உணவு சட்டங்களை பற்றி இப்போது பார்க்கலாமா?

சுவாரஸ்யமான வேறு: உலகத்தின் கிறுக்குத்தனமான 10 சட்டங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை சட்டம்

முட்டை சட்டம்

யூதர் உணவு சட்டப்படி, கருவில் லேசான இரத்தம் இருக்கும் முட்டையை உண்ணக்கூடாது. காரணம் கருவில் இருக்கும் முட்டை என்பதை ஒரு உயிர் என்று அவர்கள் கருதுவதாலேயே. அதனால் அதனை கொன்று உட்கொள்ள கூடாது என்பது அவர்களின் கருத்து. ஆனால் இதிலிருக்கும் விசித்திரம், லேசான இரத்தம் படிந்திருக்கும் முட்டையுடன், இரத்தம் இல்லாத இன்னும் சில முட்டைகளை அவிக்க போட்டால் அதனை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். யூதர்களின் உணவு சட்டங்களில் இதுவும் ஒன்று. மேலும் மிகவும் விசித்திரமான சட்டமும் கூட.

பால் மற்றும் இறைச்சி இணைப்பு

பால் மற்றும் இறைச்சி இணைப்பு

யூதர்கள் இறைச்சியையும் பாலையும் ஒரே நேரத்தில் உண்ண மாட்டார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இது இயல்பே. இன்னும் சில சமுதாயங்களும் கூட இதனை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் என்னவென்றால், செஃபர்டிக் யூதர்கள் பால் குடித்த 4 மணி நேரத்திற்காவது கோழிக் கறியை உண்ணுவதில்லை. அதே போல் 6 மணி குறைந்தது நேரத்திற்கு ஆட்டுக் கறி மற்றும் மாட்டிறைச்சியை உண்ணமாட்டார்கள். பிரிட்டிஷ் யூதர்கள் மூன்று மணி நேரத்திற்கு காத்திருப்பார்கள். இப்படி இவர்கள் நிர்ணயம் செய்திருக்கும் கால அவகாசம் விந்தையான ஒன்றாகும்.

உணவுகளை தேர்ந்தெடுப்பது கடினம்

உணவுகளை தேர்ந்தெடுப்பது கடினம்

யூதர் உணவு சட்டத்தில் மற்றொரு விந்தையான விஷயம் - யூதர் மரபுப்படி செய்யும் கசாப்பு மற்றும் அதனை உண்ணுவதற்கு முன்பாக, அதற்கு போதிய உடல் அமைப்பு இருக்க வேண்டும். இந்த சடங்குகள் அதனை கசாப்பு செய்வதற்கு மட்டுமல்லாது, அதனை சமைப்பதற்கும், அதனை உண்ணுவதற்கும் கூட உள்ளது. இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால், அந்த உணவு புனிதமானது அல்ல என்று முடிவு கட்டப்படும். சொல்லப்போனால் இது மிகவும் விந்தையான சட்டமாகும்.

மீண்டும் பால்

மீண்டும் பால்

பால் என்பது புனிதமான ஒன்று மற்றும் அதனை பருகுவது சாலச் சிறந்ததென்றால், பால் கறக்கும் செயல்முறையின் போது அந்த யூதர்களும் உடனிருக்க வேண்டும். இது மிகவும் விந்தையான சட்டமாகும். காரணம் இக்காலத்தில் அவ்வகை கொஷேர் பாலை காண்பது கஷ்டம்.

ஒயின் கூட உண்டு

ஒயின் கூட உண்டு

இந்த விந்தையான யூதர்களின் உணவு சட்டங்களில் ஒயின் மட்டும் இல்லாமலா? யூதர்கள் பருகும் ஒயின் பானத்தை அவர்களே தான் தயாரித்து கொள்ள வேண்டும். இன்றைய சுறுசுறுப்பான கால கட்டத்தில் யாருக்கு ஒயின் தயாரிக்க நேரம் எல்லாம் கிடைக்கும்?

யூதர் மரபுப்படி செய்யப்படாத கோஷர் உணவகங்கள்

யூதர் மரபுப்படி செய்யப்படாத கோஷர் உணவகங்கள்

உலகத்தின் அனைத்து மூலைகளிலும் யூதர் மரபுப்படி செய்யப்படும் உணவகங்களை காண்பது கடினம். இருப்பினும், யூதர் மரபுப்படி கசாப்பு செய்யப்படாத உணவகங்களில் யூதர்கள் உண்ணக்கூடாதாம். மேலும் அது பாவச் செயலாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Weird Food Laws In The World

There are many weird Jewish food laws which are quite different and unheard by many other communities. In this article we shall cover six such weird Jewish food laws.
 
Desktop Bottom Promotion