For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேச்சுலராக இருக்கும் போது பணத்தை சேமிக்க நான்கு யோசனைகள்!!!

By Srinivasan P M
|

சம்பளம் கிடைக்காமல் செலவுகளோட போராடிகிட்டு எப்படா சம்பளம் அக்கவுண்ட்-ல க்ரெடிட் ஆகும்னு நொந்துபோய் காத்து கொண்டிருப்பவரா நீங்கள்?

மாத கடைசியில் நிறையப் பேர் ரொம்ப கஷ்டப்படுவதை நாம் பாத்திருப்போம். ஏன்? அவங்களுக்கு சம்பளம் போதவில்லையா என்ன? அதெல்லாம் இல்லை. அவர்களுக்கு தங்களின் வருமானத்தையும், செலவுகளையும் சரியாக நிர்வகிக்கத் தெரியவில்லை என்பது தான் உண்மை. இப்போது இதை சரியாகவும், எளிதாகவும் செய்ய, குறிப்பாக திருமணமாகாமல் சிங்கிளாக இருப்பவர்களுக்கு உதவக்கூடிய யோசனைகளைப் பார்ப்போமா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு ஆர்டி (தொடர் வைப்பு) போடுங்க

ஒரு ஆர்டி (தொடர் வைப்பு) போடுங்க

நீங்கள் தொடர் வைப்பை துவங்க சரியான தருணம் நீங்கள் வங்கியில் ஒரு சம்பளக் கணக்கைத் துவங்கும் நேரம். இதன் மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் சம்பளத்திலிருந்து தானாகவே சேமிப்பிற்கு சென்றுவிடும். மேலும் இதிலிருந்து இடைமறித்து நீங்கள் பணத்தை எடுக்க முடியாது. எனவே இந்த தொகை முதிர்வுரும் காலத்தில் ஒரு பெரிய தொகையாக உங்களுக்குக் கிடைக்கும்.

உங்கள் செலவுகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் செலவுகளை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

உங்கள் செலவுகளைக் குறித்த எந்த விவரமும் உங்களுக்கு விளங்காத போது, நீங்கள் வகையில்லாமல் செலவு செய்வதால் உங்களின் வருமானத்திற்கும் அதிகமான செலவினை செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். நீங்கள் உங்கள் ஒரு மாத செலவுகளை குறித்து வைத்துக் கொள்ளும் போது, அதை அடுத்த மாதம் இனம் கண்டு அதன் தேவையை அல்லது முக்கியத்துவத்தின் அடிப்படையில் மேற்கொண்டு உங்கள் திட்டமிடல்படி கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.

சிறிய விருந்துகளை வீட்டிலேயே நடத்துங்கள்

சிறிய விருந்துகளை வீட்டிலேயே நடத்துங்கள்

பிறந்த நாளையோ அல்லது வேறு விசேஷங்களையோ ஒரு ஹோட்டலுக்கும் பப்புக்கும் போய் தான் நடத்த வேண்டும் என்பதில்லை. நண்பர்களை அழைத்து வீட்டிலேயே நடத்துங்கள். இது விருந்துச் செலவை குறைப்பதுடன், அனைவரும் ஒன்றிணைந்து சமைத்தல் போன்ற செயல்களை செய்வதன் மூலமும், விருந்துக்குப் பின் சிறு கேளிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமும், மகிழ்வுக்குக் குறைவிருக்காது. நீங்கள் வெளியில் செய்தால் இதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாது.

முப்பது நாள் பார்முலா

முப்பது நாள் பார்முலா

என்ன? இத நீங்க கேள்விப்பட்டதில்லையா? ரொம்ப சிம்பிள். உங்களுக்கு ஏதாவது வேண்டும் அல்லது செய்ய வேண்டுமென்று தோன்றினால் ஒரு முப்பது நாளைக்கு பொறுமையா இருங்க. அதற்குப்பிறகு அந்த தேவையை பத்தி யோசியுங்க. இந்த முப்பது நாட்களில் அது இல்லாமல் உங்களால் இருக்க முடிந்தது என்றால் அது அவசியமில்லாததாகக் கூட இருக்கலாம். இதன் மூலம் மன உந்துதலைத் தவிர்த்து தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

4 Ways To Save Money When Single

Here are a few simple steps to put into practice, especially if you are single.
Desktop Bottom Promotion